NFTECHQ

Friday 11 November 2016

ஆய்வாளர்கள் கருத்து

சி.பி.சந்திரசேகர்,
பொருளாதார பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி
இந்திய பிரதமர், ஆச்சர்யமளிக்கும் விதமாக ரூபாய் 500, 1000 தாள்கள் இனி செல்லுபடியாகாது என அறிவித்திருக்கிறார். இந்த முறையை அமல்படுத்த, .டி.எம்-கள் இரண்டு நாட்களும், வங்கிகள் இரு நாட்களும் மூடப்படும். இது பயங்கரவாதிகளுக்கான நிதி உதவி, கறுப்புப்பணம், சமூக விரோத செயல்களுக்கு கறுப்புப்பணம் பயன்படுத்தப்படுவது போன்ற காரியங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சொல்லப்படுகிறது. இது உண்மையோ இல்லையோஆனால், இது நிச்சயம் பொருளாதார இயங்கு முறையில் பிரச்னையை உருவாக்கும்.
.டி.எம்-களில் இருந்தோ, சம்பளமாகவோ பணத்தைப் பெற்று கொண்டு, கிரெடிட் கார்டுகளாலும், டெபிட் கார்டுகளாலும் பணம் செலுத்த முடியாத எவருமே, வங்கிக்கு ஓடியிருப்பர். இதுவே மோசம். அதன் தாக்கங்கள் இதை விட பெரிதாக இருக்கும். பணம் செலுத்துதலையும், பணம் கொடுத்து வாங்கும் அமைப்பையும் முடக்கி, பணப்பரிமாற்ற பொருளாதாரத்தையும் வணிகத்தையும் உறையச் செய்யும். உண்மையான எதிரிகளையும், கற்பனை எதிரிகளையும் தோற்கடிக்கலாம் என்று நினைத்த பிரதமர், சராசரி குடிமகனுக்கு எதிராக போர் தொடுத்திருக்கிறார்.
----------------------------------------------------------------
அபிஜித் சென், திட்ட கமிஷன் முன்னாள் உறுப்பினர்
சட்ட முறைக்கேடாக குவிந்திருக்கும் கறுப்புப்பணத்தை குறைக்கவே, ரூபாய் 500, 1000 தாள்கள் பண மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. கணக்கில் வராத பணத்தை சேர்த்து குவித்து வைக்கவே இவை பயன்படுத்தப்படுகிறது. பணப்பரிமாற்றத்துக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், இது மிகச் சரியான காரியம். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி, பணப்புழக்கத்தில் 80% இருப்பது ரூபாய் 500, 1000 ரூபாய் தாள்கள் தான் இருக்கிறது என்று சொல்கிறது. எனவே, பெருமளவு பணம் நிரந்தரமாகஇருப்பாகவேவைக்கப்பட்டிருந்தால் இது சரி. அல்லது பணப்பரிமாற்றங்களையே பெரிதும் நம்பி இருக்கும் பொருளாதாரத்தின் மீது பெரிய தாக்கமாக இந்த நடவடிக்கை இருக்கும்.
இந்தியாவின் பணப் பொருளாதாரத்தின் அளவு மிகச் சரியாக தெரியவில்லை. இருந்தாலும், முறைசாரா துறைகளில் எல்லாம் வேலை செய்பவர்களின் அளவை பார்த்தால், மொத்த பொருளாதாரத்தின் பாதி அளவு இருக்கலாம். எனவே, அடுத்த இரண்டு நாட்களில் இந்த பொருளாதாரம் உடனடியாக சுருங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் நீண்ட கால நன்மைகள் என்னவாக இருந்தாலும், தினக் கூலியாகவோ, தங்கள் சரக்குகளை விற்கவோ பணத்தை சார்ந்திருக்கும் பலருக்கு இனி தினங்கள் கடினமாகவே இருக்கும். மேலும், கறுப்புப்பணம் உருவாகும் செயல்முறையை அழிக்காமல், குவிக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தில் சிறிய அளவையே அழிக்கிறது இந்த நடவடிக்கை.


No comments:

Post a Comment