NFTECHQ

Monday, 30 November 2015

வாழிய பல்லாண்டு
30.11.2015 அன்று நமது துறையிலிருந்து பணி ஓய்வு பெறும்

திரு V.ராமன் SDE ஈரோடு
தோழர் C.பெரியசாமி SRTOA கோபி
தோழர் S.சையத் அலாவுதீன் TM ஈரோடு

ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும்  பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Tuesday, 24 November 2015

நவம்பர் 24

சம்மேளன தினம்

NFPTE இயக்கம் இயக்கம் உதயமான தினம்.
உலகில் எந்த் ஒரு தொழிற்சங்க இயக்கமும் சாதிக்க இயலாத சாதனைகளைச் சாதித்த இயக்கம்.

பல்வேறு கருத்துக்கள் கருத்து முரண்பாடுகள் கொண்டவர்க ளையும் அரவணைத்து ஒற்றுமையுடன் செயல்படமுடியும் என உலக்குக்கு எடுத்துக் காட்டிய இயக்கம்.

சகிப்புத் தன்மைக்குச் சான்றாக விளங்கிய இயக்கம்.

பல்வேறு போராட்டங்களை உக்கிரமாக நடத்தி சாதனைகளைச் சமைத்து சரித்திரம் படைத்திட்ட இயக்கம்.

தொழில்நுட்ப வளர்ச்சி தொல்லைகளைத் தந்து  தொழிலாளிகளை வேலையிலிருந்து துரத்தி விடும்  என்ற கருத்தைத் தூக்கி எறிந்து தொழிலாளிகளுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெர்றுத் தந்து வரலாறு வடித்த இயக்கம்.

சமூக அக்கறையோடு செயலாற்றிய இயக்கம்.

எந்த ஒரு மாற்றத்தையும் தொழிலாளிக்கு ஏற்றம் தரும் வகையில் மார்றிக் காட்டிய இயக்கம்.

இந்த இயக்கத்தில் ஒரு அங்கமாக இருந்தேன் என்ற கர்வத்தோடும், பெருமையோடும் இறுதி மூச்சு வரை வாழ்வோம்.

அனைவருக்கும் சம்மேளன தின வாழ்த்துக்கள்.

Monday, 23 November 2015

இந்திரஜித் குப்தா


மத்திய அரசு ஊழியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை மலரச் செய்த உன்னதத் தோழன்.

40 சதம் சமபள உயர்வின் நாயகன்.
இந்திய கம்யூணிஸ்ட் கட்சி ஒரு நலல முடிவினை எடுத்து, தோழர் இந்திரஜித் குப்தா உள்தூறை அமச்சராக பொறுப்ப்பேறறதன் விளைவே இன்றைய பலன்கள் அனைத்திற்கும் காரணம் அவர் மட்டுமே.

மத்திய அரசு ஊழியர்கள் யாருக்கேனும் நன்றிக்கடன் பட்டிருந்தால் அது அவருக்கு மட்டுமே.

தோழர் O.P. குப்தா அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதும் நினைவு கூறத்தக்கது.

தொழிலாளர் விரோத மத்திய அரசின் ஆணைக்கேற்ப இன்று வந்துள்ள ஊதியக்குழு சிபாரிசுகளைப் பார்க்கும்போது இந்திரஜித் குப்தா மீண்டும் மீண்டும் போற்றுதல்லுக்கு உரியவராகிறார்.
Friday, 20 November 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு: 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தமாக 23.55% ஊதிய உயர்வுக்கு வகை செய்யும் ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரை அறிக்கை, மத்திய அரசிடம் 19.11.2015 அன்று  தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதிய கமிஷன் நியமிக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராய், பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், மீனா அகர்வால் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த கமிஷனின் 900 பக்க அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒட்டுமொத்தமாக 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை சம்பளத்தில் 16% அதிகரிக்கவும் படிகளை 63% உயர்த்தவும் ஓய்வூதியத்தை 24 % உயர்த்தவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும் அதிகபட்சம் ரூ.2.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு, 24 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் ராணுவத்தில் அமல்படுத்தப்பட்டிருப்பதுபோல துணை ராணுவப் படைகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும். 52 படிகளை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வசதியை ஏற்படுத்த வேண்டும். ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வழங்க வேண்டும் என்றும் ஊதிய கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Sunday, 15 November 2015

                                   மெரினா


நவம்பர் 14
மூன்று முக்கிய நிகழ்வுகள்
ஜவகர் ஶ்ரீராஜ் நேர் பிறந்ததினம்.
ஜவகர் ஶ்ரீராஜ் பின்னர் ஜவகர்லால் ஆனாது. நேர் என்பது  காஷ்மீரத்தில் உள்ள ஒரு நதியின் பெயர்.
ஜவகர்லால் நேர் எனப்தில் நேர் என்பது மருவி நேரு ஆனது. (நதியின் பெயரைப் போல)
நவம்பர் 114 குழந்தைகள்  தினம்.
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
 “எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்.
எதனைக்  கண்டான் மதங்க்களைப் படைத்தான்”    
-கண்ணதாசன்
பி.பி.சி (BBC) வானொலி ஆரம்பைக்கப்பட்டது நவம்பர் 14.
நவம்பர் 14  “சர்வதேச சர்க்கரை நோய் (யாளிகள்) தினம்
சர்க்கரை நோய்க்கான இன்சுலின் என்னும் மருந்தைக் கண்டுபிடித்த
ப்ரடெரிக் பேண்டிங் பிறந்த நாள். 
சார்லஸ் பெஸ்ட் என்பவர் அவருக்குத் துணை நின்றார்.

சர்க்கரை நோயாளிகள் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளைக் கடைப்பிடித்து பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Thursday, 12 November 2015

தேவை

சுயபரிசோதனை
போனஸ் பற்றி இரண்டு செய்திகளை வெளிடிட்டிருந்தோம். அவை சிலருக்கு கோபத்தை  உருவாக்கியதாக அறிந்தோம்.
யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படவில்லை. ஊழியர் மனங்களில் உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்துவது மட்டுமே நமது நோக்கமேயன்றி வேறேதுமில்லை.
போனஸ் பெற நமது NFTE இயக்கம் மேற்கொண்ட முயற்சிகளை நாம் அறிவோம்.
FORUM  சார்பாக ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற இயக்கங்களை நடத்தினோம்.
அதற்குப் பிறகு நமது இயக்கத்தின் சார்பாக போனஸ் தர வலியுறுத்தி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் தரப்பட்டது.
மத்திய செயற்குழுவில் போனஸ் பிரச்னை  தலைவர்களால் விவாதிக்கப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டது.
அந்த முடிவையும் நமது சங்கம் நிர்வாகத்துக்குத் தெரிவித்தது

பூஜை முடிந்தது.
தீபாவளியும் முடிந்தது.
போனஸ் இன்னும் வரவில்லை.

கொடுபடா ஊதியம்
உச்ச நீதிமன்ற ஆணை
“DPE உத்தரவு
போன்ற புறச்சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருந்தன.
800 கோடி கூடுதல் வருவாய் என்ற அகச் சூழ்நிலயும் சாதகமாக இருந்தது.

இச்சூழ்நிலையில்,
ஏன் போனஸ் பெற முடியவில்லை?
என்பது குறித்து ஒரு சுயபரிசோதனை தேவை என்பதே நம் விழைவு.
இதை யார் செய்வது?
மத்திய சங்கத்துக்கு வழிகாட்டும் நமது தமிழ் மாநிலச் சங்கம் இந்த சுயபரிசோதனையைச் செய்து  மத்திய சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என தோழமையுடன் வேண்டுகிறோம்.

15 துறைகளில் அந்நிய நேரடி முதலீடு: விதிமுறைகளை தளர்த்தியது 

மத்திய அரசு

பிஹார் தேர்தல் முடித்தவுடனே 15 முக்கியமான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தற்போது 3,000 கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய நேரடி முதலீடு வரும் பட்சத்தில் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் (எப்.ஐ.பி.பி) அனுமதி வாங்க வேண்டும் இந்த வரம்பு தற்போது 5,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, கட்டுமான மேம்பாடு, ஒளிபரப்பு, விமான போக்குவரத்து, விவசாயம், மலையக பயிர்கள், உற்பத்தித் துறை, ஒரு பிராண்ட் ரீடெய்ல், தனியார் வங்கிகள் உள்ளிட்ட துறைகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். அவருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தின்படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனி, இந்த மாற்றங்கள் அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அமைச்சரவை குழுவில் பிரச்சினை ஏதும் வராது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்,
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏதுவான நாட்டினை தேடி வருகிறார்கள். இதன் மூலம் அந்நிய நேரடி முதலீடு உயரும் என்றார்.
உற்பத்தித் துறை
அந்நிய முதலீடு பெற்று நடத்தப்படும் அனைத்து உற்பத்தி துறை நிறுவனங்களும் இனி நேரடியாக ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களை மொத்தமாகவோ சில்லரையாகவோ விற்கலாம். இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை இல்லை.
செய்தி ஒளிபரப்புத் துறை
ஒளிபரப்புத் துறையில் தற்போதைய நிலையில் இருக்கும் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிடீஹெச், கேபிள் நெட்வொர்க் மற்றும் மொபைல் டிவி துறைகள் இதனை பயன்படுத்திக் கொள்ளும். இதில் 49 சதவீத முதலீட்டை நேரடியாக கொண்டு வரலாம். அதற்கு மேலான முதலீட்டை அரசு ஒப்புதலுடன் கொண்டுவர வேண்டும்.
அதேபோல செய்தி சானல்களுக்கு அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகை துறையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
விமான போக்குவரத்துத் துறை
தற்போது இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் அனுமதியோடு இந்த முதலீடு வரவேண்டும். இப்போது அரசின் அனுமதி இல்லாமல் உள்நாட்டு விமான நிறுவனங்களில் 49 சதவீத பங்கினை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கலாம்.
பாதுகாப்புத் துறை
பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் தற்போது 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் முதலீட்டினை கொண்டு வரும் போது அரசாங்கத்தின் அனுமதி தேவை. ஆனால் இப்போது நேரடியாக கொண்டுவரமுடியும்.
மலையக பயிர்கள்
ஐந்து மலையக பயிர்களுக்கு 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேயிலைக்கு மட்டும் 100 சதவீத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அரசாங்கத்தின் முன் அனுமதியோடு. இப்போது காபி, ரப்பர், ஏலக்காய், பாம் ஆயில் மற்றும் ஆலிவ் எண்ணெய்களுக்கு 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை இல்லை.
தனியார் வங்கிகள்
இந்திய தனியார் வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதம் அளவுக்கு உயர்த்த மத்திய அரசு அனுமதித்திருக் கிறது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இருவரும் சேர்ந்து 74 சதவீதம் வரை தனியார் வங்கி பங்குகளை வைத்திருக்கலாம். இது சாதகமான அம்சம் என்று தனியார் வங்கித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார் கள்.
கட்டுமானம்
கடந்த சில வருடங்களாக சிக்கலில் இருந்த கட்டுமானத் துறையை முடுக்கி விடும் நடவடிக்கையாக இந்த துறையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக் கிறது. இந்த துறையில் இருந்த பெரும்பாலான தடைகள் நீக்கப் பட்டுவிட்டன. டவுன்ஷிப், வீடுகள், கட்டுமானம் ஆகியபிரிவுகளில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குறைந்தபட்ச கட்டுமான பரப்பளவு 50,000 சதுர அடியில் இருந்து 20,000 சதுர அடியாகவும், குறைந்த பட்ச முதலீடு 1 கோடி டாலரில் இருந்து 50 லட்சம் டாலராகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர மேலும் சில துறைகளில் முதலீடுகள் வருவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Monday, 9 November 2015

தீபஒளி
திருநாள்

வாழ்த்துக்கள்


அனைவருக்கும்
உள்ளம் நிறைந்த
தீபாவளி
வாழ்த்துக்கள்

Sunday, 8 November 2015

அவுரங்காபாத்
மத்திய செயற்குழு தீர்மானங்க்கள்
போனஸ் 

போனஸ் வழங்குவதற்கான  வரையறைகளை  போனஸ் குழுஇறுதி செய்யாத நிலையில்.. தீபாவளிக்குள் தற்காலிக  போனஸ்வழங்கிடக்கோரி 
அகில இந்தியத்தலைவர்களும்.. மாநிலமட்டத்தலைவர்களும் 
காலவரையற்ற உண்ணாவிரதத்தைமேற்கொள்ளுமாறு
மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வைப்புநிதி – GPF

வைப்புநிதி பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களைவருத்தத்துடன் செயற்குழு உற்று நோக்குகிறது. வைப்பு நிதிக்கானநிதியை BSNLக்கு உடனுக்குடன்  DOT அனுப்ப வேண்டும் எனவும்..தற்போது நிலவும் 
தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL  நிர்வாகம் முயலவேண்டும் எனவும் மத்திய செயற்குழு 
கேட்டு`ள்கிறது.

78.2சத IDA சம்பள அடிப்படையில் 
வீட்டுவாடகைப்படி 

12/06/2012 வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல்HRA  வாடகைப்படி  78.2 சத  IDA சம்பள அடிப்படையில்வழங்கப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால் வழக்கம் போல் நிர்வாகம்தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNLநிர்வாகம்  உடனடியாக 78.2 சத  
IDA சம்பள அடிப்படையில் வீட்டுவாடகைப்படி 
வழங்கிட வேண்டும்.

நேரடி நிய1மன  ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பலன்கள்.

BSNLலில் நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்குபுதிய ஓய்வூதியத்திட்டம் 
வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012வேலை நிறுத்தத்தின் போது 
உடன்பாடு  எட்டப்பட்டது.  ஆனால்ஆண்டுகள் 3 கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. 
எனவேஉடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன ஊழியர்களுக்கு 
12 சதபங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை 
அறிவிக்கவேண்டும்.

ஓய்வூதியப் பங்களிப்பு 

BSNL உருவாக்கத்தின் போது ஊழியர்களுக்கான ஒய்வூதியநிதியை  அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது. ஆனால்15/06/2006 அன்று 
அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும்என்றும்..  40 சத நிதிச்சுமை BSNL  நிர்வாகத்தால் ஏற்கப்படவேண்டும் எனவும் உத்திரவு 
இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர்விரோத உத்திரவு உடனடியாக 
விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.இதற்கான போராட்டங்களில் 
அனைத்து சங்கங்களையும்இணைத்து போராட மத்திய
 செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

DELOITTE குழு அறிக்கை 

ஒரு லட்சம் ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளஊழியர் விரோத DELOITTE குழு அறிக்கை முழுமையாக ரத்துசெய்யப்பட  
வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சிகைவிடப்பட 
வேண்டும்.  BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான இத்தகைய மோசமான 
முடிவுகளை எதிர்த்து போராட்டக்களம்காண 
மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

செல் கோபுரம் தனி நிறுவனம் 

செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம்ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் போக்கை செயற்குழுவன்மையாகக் 
கண்டிக்கிறது. இதனால் ஏற்படும் செலவினங்கள்மற்றும் ஊழியர் 
பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில்கொள்ளவில்லை.  மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில்ஊழியர் தரப்பில் இருந்து 
யாரும் நியமிக்கப்படவில்லை. எனவேதனி செல் கோபுர நிறுவன
 உருவாக்கத்தால் உருவாகும் தீயவிளைவுகளை எதிர்த்து 
ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழுவேண்டுகோள் விடுக்கிறது.

மாற்றல் கொள்கை 

மாற்றல் கொள்கையில் கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட 
காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள்என்பது அதிகமான காலமாகும். எனவே 
3 ஆண்டுகளுக்குமுன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு 
உரியதிருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு 
வரப்பட வேண்டும்.

நன்றி  காரைக்குடி இணையதளம்