NFTECHQ

Tuesday, 15 January 2013பெயரில் இல்லை!

கடந்த 5 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு ரூ.1600 கோடி. அதற்கு ஆண்டுக்கு 12 சதம் வட்டி கட்ட வேண்டும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாமல் உள்ளது எனவே ரூ.1600 கோடி என்பது ரூ.2500 முதல் ரூ.3000 கோடி என உயரும் வாய்ப்பு உள்ளது.

வருமான வரி துறையின் அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை மற்றும் குர்கானில் உள்ள அதன் தலைமையகத்தில் அதிரடி சோதனைகள் நடத்தினர். சரியான நேரத்தில் அவர்களைப் பிடித்து விட்டோம். ஒரு பைசா இழப்பு கூட இழப்பு இல்லாமல் தடுத்துவிட்டோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

2006-07 இல் சென்னை தொழிற்சாலை நிறுவப்பட்டது. நெரடி மற்றும் மறைமுக வரிகளை ஏய்ப்பதற்காக கணக்குகளில் தில்லு முல்லு செய்யும் முயற்சி நடைபெற்றது. கைபேசி வைத்திருப்போர் அறிந்துள்ள பெயர் "நோக்கியா". அது பின்லாந்து நாட்டு நிறுவனம். இந்தியாவை வாழ வைக்க தொழில் துவங்குவாதாக நம்மை நம்பவைக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? மத்திய மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள் போதாதா? வரி ஏய்ப்பு ஏன்? இந்திய நாட்டை கொள்ளை அடிப்பதுதானே நோக்கம் நோக்கியாவிற்கு? பெயரில் இல்லை அதன் நேர்மை!

Sunday, 13 January 2013

என் வயிற்றுக்காக  . . . . . . . .
ஏர் பிடித்து தலைகோதி
வியர்வையை வித்தாக்கி
உழைப்பை உரமாக்கிய
உழவனுக்கு உளமார
பொங்கல் நல்வாழ்த்துகள்

Friday, 11 January 2013


 அவர்? . . . . .இவர்?

இவர் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கல்லூரி நாட்களிலேயே அரசியல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 'இந்தியன் போஸ்ட்' என்ற தொழிற்சங்க பத்திரிக்கையில் 'அவர்' எழுதிய கட்டுரை இவருக்கு அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. 1946 டிசம்பர் அக்கோலாவில் நடைபெற்ற அஞ்சல் ஊழியர் அகில இந்திய மாநாட்டில் இவரும் அவரும் சந்தித்தனர்.  இவர் அவரை விட வயதில் இரண்டு வயது மூத்தவர். அக்கோலவில் துவங்கியது இருவரின் நட்பும் தோழமையும். 1965 இல் ஒரு வாய்ப்பில் இவரை  'அவர்' தேசீய தபால் தந்தி தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலராக ஒருமனதாக தேர்வுபெற வைத்தார். 1978 இல் இவர் பணி ஓய்வு பெற்றார். சம்மேளன பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து விடைபெற்றார். சம்மேளன பொதுச் செயலராக 'அவர்' ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தனது அன்பிற்குரிய தலைவரால் தலைவரானவர் இவர் தோழர் D.ஞானையா. 'அவர்' நமது அன்பிற்குரிய  மாபெரும் தலைவர் ஓம்.பிரகாஷ் குப்தா.  

 

மாவட்டச் செயற்குழு - 07.01.2013

 மாவட்ட தலைவர் தோழர் ராஜமாணிக்கம் தலைமையேற்றார்.

மறைந்த மாமனிதர் தோழர் குப்தாவிற்கு செயற்குழு தனது ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்தது.

மாவட்ட மாநாட்டினை நடத்துவது குறித்து விவாதித்து நடவடிக்கைகளை துவங்கிட முடிவு செய்தது.

எதிர்வரும் சரிபார்ப்பு தேர்தலில் கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கூடுதலான வாக்குகள் பெற திட்டமிட்டு பணியாற்றிட தீர்மானித்தது.

குமார் - மாவட்டச் செயலர்.                                       

Wednesday, 9 January 2013