NFTECHQ

Sunday 30 September 2018


வாழிய பல்லாண்டு
30.09.2018 அன்று பணிநிறைவு  பெறும்
தோழர் S. ரங்கராஜன் SDE ஈரோடு
தோழர் P. ஈஸ்வரன் OS ஈரோடு
தோழர் K. செல்லப்பன் TT பவானி
தோழர் G.பன்னீர்செல்வம் TT  ஈரோடு
தோழர் மொகமது ரப்தீன் TT கோபி
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Saturday 29 September 2018


அதிகபட்ச விலைவாசிப்படி உயர்வு
01.10.2018 முதல் 7.6 சதவ்கிதம் விலைவாசிப்படி உயரும். இதனால் மொத்த விலைவாசிப்படி 135.6 சதவிகிதமாக இருக்கும். யாம் அறிந்தவரை இதுவே அதிகபட்ச உயர்வு.
இந்த உயர்வுக்கான காரணமும் இதன் விளைவுகளும்
ஆள்வோரின் அவலட்சணத்தை உணர்த்துகின்றன. தனியொரு மனிதன் கொள்ளையடித்து உல்லாச வாழ்வு வாழ மக்கள் துன்புறுவதோ?
இந்நிலை என்று மடியுமோ?


ஆறாவது பேச்சுவார்த்தை
28.09.2018 அன்று நிர்வாகத்துடன் ஆறாவது முறையாக ஊதியமாற்றப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. NE4 மற்றும்  NE5 சம்பளவிகிதங்களில் தேக்கநிலையைத் தவிர்க்க அவற்றின் இறுதிநிலைகளைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பரிசீலிப்பதாக நிர்வாகம் ஒத்துக்கொண்டது. சம்பளவிகிதங்களில் அனேகமாக உடன்பாடு வரும் நிலை ஏற்படலாம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 09.10.2018 அன்று நடைபெறும. அந்தக் கூட்டத்தில் சம்பள விகிதங்கள் பற்றி இறுதி முடிவு வரலாம். அன்று அலவண்ஸ்கள் பற்றி பேசப்படும் என தெரிகிறது.  ஊதிய நிர்ணயத்தின் அடிப்படை குறித்து இன்னும் ஏன் தெளிவு வரவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

Monday 17 September 2018


செப்டம்ப ர் 17
பெரியார் பிறந்ததினம்

சமூகநீதி,
சமத்துவம்,
சமதர்மம்,
அறியாமை,
மூடந்ம்பிக்கை
பெண்விடுதலை
சாதி மத பேதமற்ற சமுதாயம்
இவற்றை ஊர்முழுதும்
உரக்கச் சொன்ன
பெரியார் பிறந்ததினம் இன்று.






Sunday 16 September 2018

அநீதியை அழிப்போம்
பாரபடசத்தை வேரறுப்போம்

அநீதி கண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்துப் போராடாமல்
அநீதி களைய முடியாது.
BSNL
நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 15 சதவிகித உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வை அமல்படுத்த லாம் என ஒத்துக் கொண்டு அதற்கான சிபாரிசையும், பரிந்துரையையும் 14.11.2017 அன்று CMD அவர்கள் DOTக்கு எழுத்துபூர்வாகத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வை நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த அநீதியை ஏற்கலாமா? அதிகாரிகளுக்கு கொடுக்கும் 15 சத ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு மறுக்கும் நிர்வாகத்தின் அப்பட்டமான, அநீதியான பாரபடசத்தை அனுமதிக்கலாமா? பாரபட்சத்துக்கு எதிராக கடுமையாகப் போராடிய NFPTE/NFTE இயக்கம் இந்த பாரபட்சத்தை அனுமதிக்கக் கூடாது. ஊழியர்களுக்கும் 15 சத ஊதிய உயர்வைப் பெற வாதிட வேண்டும். போராட வேண்டும். NFTE இயக்கம் தனது பாரம்பரியத்தை இழக்காமல் பாரபட்சம் களைய போராட வேண்டும்.
01.01.2017
முதல் 15 சத ஊதிய உயர்வை நிலுவையுடன் அமல்படுத்துவதை NFTE உறுதி செய்ய வேண்டும். புதிய சம்பள விகிதத்தின் அடிப்படையில் அலவ்ண்ஸ்கள் வழங்க்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் NFTE தலைமை உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரபட்சம் என்னும் பாதகச் செயலை அனுமதிக்கவே கூடாது. வெயில், மழை, இயற்கைச் சீற்றம் என அனைத்துத் தருணங்க்களிலும் கடமை உணர்வோடு அயராது கண்துஞ்சாது உழைக்கும் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பார்படசத்தை அனுமதிப்பது பாதகமான செயலாகும். இதை உணர்ந்து NFTE தகைமை செயல்பட வேண்டும். இந்த அநீதியை, பாரபட்சத்தை எதிர்த்து NFTE துணைக்கு வருவோரை இணைத்துக் கொண்டு களத்தில் கால் பதிக்க வேண்டும்.


                  வரலாற்றுத் தவறு நிகழலாமா?

அதை அனுமதிக்கலாமா?

மத்திய அரசு ஊழியர்களின் எந்த ஒரு சம்பளக்குழுவிலும் ஊதிய மாற்றம் நிகழும்போது புதிய ஊதிய நிர்ணய முறையில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வேற்பாடு இருந்ததில்லை. BSNL நிறுவனத்திலும் முதல் இரு சம்பள மாற்றத்திலும் ஊதிய நிர்ணய முறையில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வேறுபடு இருந்த்தே இல்லை. ஆனால் இம்முறை மட்டும் அதிகாரிகளுக்கு 15 சதம் என சிபாரிசு செய்துவிட்டு ஊழியர்களுக்கு 11 சதம் என்ற அடிப்படையில் புதிய சமபள விகிதங்களை உருவாக்க நிர்வாகம் முயலுகிறது.  சமத்துவம், சமதர்மம் என்பது பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும். மோசமான ஒரு வரலாற்றுத் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருக்கலாமா?
தேக்கநிலையை மட்டுமே அலசி ஆராய்ந்து கொண்டு தீராத வரலாற்றுப் பழிக்கு வித்திடலாமா?



அநீதியை அழிப்போம்
பாரபடசத்தை வேரறுப்போம்
அநீதி கண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்துப் போராடாமல்
அநீதி களைய முடியாது.

BSNL நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 15 சதவிகித உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வை அமல்படுத்த லாம் என ஒத்துக் கொண்டு அதற்கான சிபாரிசையும், பரிந்துரையையும் 14.11.2017 அன்று CMD அவர்கள் DOTக்கு எழுத்துபூர்வாகத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வை நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த அநீதியை ஏற்கலாமா? அதிகாரிகளுக்கு கொடுக்கும் 15 சத ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு மறுக்கும் நிர்வாகத்தின் அப்பட்டமான, அநீதியான பாரபடசத்தை அனுமதிக்கலாமா? பாரபட்சத்துக்கு எதிராக கடுமையாகப் போராடிய NFPTE/NFTE இயக்கம் இந்த பாரபட்சத்தை அனுமதிக்கக் கூடாது.
ஊழியர்களுக்கும் 15 சத ஊதிய உயர்வைப் பெற வாதிட வேண்டும். போராட வேண்டும். NFTE  இயக்கம் தனது பாரம்பரியத்தை இழக்காமல் பாரபட்சம் களைய போராட வேண்டும்.
01.01.2017 முதல் 15 சத ஊதிய உயர்வை நிலுவையுடன் அமல்படுத்துவதை NFTE உறுதி செய்ய வேண்டும்.
புதிய சம்பள விகிதத்தின் அடிப்படையில் அலவ்ண்ஸ்கள் வழங்க்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் NFTE தலைமை உறுதியுடன் செயல்பட வேண்டும்.
பாரபட்சம் என்னும் பாதகச் செயலை அனுமதிக்கவே கூடாது.
வெயில், மழை, இயற்கைச் சீற்றம் என அனைத்துத் தருணங்க்களிலும் கடமை உணர்வோடு அயராது கண்துஞ்சாது உழைக்கும் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பார்படசத்தை அனுமதிப்பது பாதகமான செயலாகும். இதை உணர்ந்து NFTE தகைமை செயல்பட வேண்டும். இந்த அநீதியை, பாரபட்சத்தை எதிர்த்து NFTE துணைக்கு வருவோரை இணைத்துக் கொண்டு களத்தில் கால் பதிக்க வேண்டும்.

Friday 14 September 2018


ஐந்தாவது பேச்சு வார்த்தை
ஊதிய மாற்றம் குறித்து இன்று 14.09.2018 நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
விபரங்கள்
14.09.2018 அன்று நிர்வாகம் கொடுத்த புதிய விகிதங்களை ஏற்பதாக தொழிற்சங்கங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. எனினும் தேக்கநிலை வரும் வாய்ப்பு உள்ளதா என்பதை ஆழமாகப் பரிசீலிக்க தொழிற்சங்கம் சார்பாக நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்கப்பட்டது. நிர்வாகமும் கால அவகாசம் கொடுத்துள்ளது.
ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை 28.09.2018 அன்று நடைபெறும்.
தொழிற்சங்கங்கள் 26.09.2018 அன்று அலவண்ஸ் பற்றிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கும்.
நல்லதொரு முடிவை நோக்கி நகர்வது மகிழ்வைத் தருகிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அந்த திசை நோக்கி நகர்வோம்.


தற்போதிய சம்பள விகிதங்ககளும்
நிர்வாகம் முன்மொழிந்த
புதிய சம்பள விகிதங்களும்
            `                      
                 


தற்போதிய சம்பள விகிதங்ககள்
நிர்வாகம் முன்மொழிந்த சம்பள விகிதங்கள்
ஊதிய விகிதத்தின்  காலம் (ஆண்டுகளில்)
NE-1
7760-13320
19000-45700
29
NE-2
7840-14700
19200-49900
32
NE-3
7900-14880
19300-53000
33
NE-4
8150-15340
19900-56200
34
NE-5
8700-16840
21300-59600
34
NE-6
9020-17430
22000-63200
35
NE-7
10900-20400
26600-69000
32
NE-8
12520-23440
30600-79600
32
NE-9
13600-25420
33200-86000
32
NE-10
14900-27850
36400-94500
32
NE-11
16570-30650
39700-104000
32
NE-12
16390-33830
39900-114600
35

Tuesday 11 September 2018


தொடரும் பேச்சு வார்த்தை

10.09.2018 அன்று ஊதிய மாற்றம் குறித்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

NE1ல் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 19000 என நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
NE1 முதல்  NE12 வரை புதிய சம்பள விகித்ங்களை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் தேக்கநிலையில்ல்லாத நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
நிர்வாகம் தெரிவித்தச சம்பள விகிதங்கள் உள்ளிட்டவை குறித்து சங்கங்கள் இன்று 11.09.2018 விவாதிக்கும்.
நிர்வாகத்துடன் மீண்டும் 14.09.2018 அன்று பேச்சுவார்த்தை நடைபெறும்.



செப்டம்பர் 11

இன்று முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதி நினைவு தினம்.

Sunday 9 September 2018


நடந்தது என்ன?
தோழர் செம்மல் அமுதம்

தமிழகம், உத்திரப்பிரதேசம் (கிழக்கு) மற்றும் (மேற்கு), உத்தர்கான்ட் மாநிலங்களில் உள்ள 6945 BSNL Tower களையும் நிர்வகித்து பராமரிக்கும் பொறுப்பை ITI க்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கி BSNL நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது (Advanc Work Order).
இதற்கு Rs 6633.56 கோடி ரூபாய் BSNL ...ITI க்கு வழங்கும்.
நலிவடைந்த பொதுத்துறை
ITI
க்குத் தான் வழங்கப்படுகிறது என்பதால் தொழிற்சங்கங்கள் எதிர்க்கவும் இயலாது.
நலிவடைந்த ITI நிறுவனத்தை BSNL உடன் இனைப்பதை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் Rs 6633 கோடி ரூபாய் நமது பணத்தை ITI க்கு வாரி வழங்கியுள்ளது DOT & BSNL.
இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? குறைந்த பட்சம் தகவலாவது தெரிவிக்கப்பட்டதா?
இப்போது Tower பராமரிப்பு , நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுள்ள நமது ஊழியர்களின் நிலை , எதிர்காலம் என்ன?
பராமரிப்பு பணி என்பது கூட பரவாயில்லை ஒரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது….
Sales & Marketing_of_Passive__Infrastructure …
என்றால் நமது டவர்களை விற்பனை & சந்தைப்படுத்தும் உரிமை ITI க்கு வழங்கப்பட்டுள்ளதின் உள் நோக்கம் என்ன?.
Tower Corporation எதிர்த்து நாம் போராடி வரும் நிலையில் ஒட்டுமொத்த டவரையும் குத்தகைக்கு விடுவதின் மூலம மறைமுகமாக தனது நோக்கத்தை BJP அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது.
ITI நமது Passive Infrastructure களை JIO உள்பட யாருக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு விடலாம் சந்தைப்படுத்தலாம்.
எந்த ஒரு Tender லும் ஒரு பகுதி அரசின் பொதுத்துறைக்கு வழங்கப்பவேண்டும் என்ற விதியை முதலில் நிறைவேற்றி விட்டதின் மூலம் மீதி மாநிலங்களில் உள்ள டவர்களை தனியாருக்கு குத்தகைக்கு தாராளமாக விடமுடியும்.
JIO வும் Airtelம் IDEA வும் வேறு பெயர்களில் Lease க்கு எடுப்பார்கள். கரும்பையும் கொடுத்து தின்பதற்கு கூலியும் கோடிக்கணக்கில் BSNL அவர்களுக்கு வழங்கும்.
Tower Corporation செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே நமது டவர்கள் அனைத்தும் தனியார் கையில்.
நாம் Role Back Tower Corporation என்று தொடர்ந்து போராடுவோம்.
வெற்றி பெறுவோம்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்

நண்றி : மத்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல்
 அமுதம் அவரது முகநூல் பதிவிலிருந்து