NFTECHQ

Sunday 6 November 2016

10,000 கோடி இழப்பீடு

மத்திய அரசின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஒஎன்ஜிசி-க்கு சொந்தமான கேஜி பேசின் என்ற இயற்கை எரிவாயு தளத்தில் முறைகேடாக ஏரிவாயுவை திருடி வந்தது. இந்தப் பணிகள் கடந்த 7 வருடமாக நிகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைக் கண்டறிந்த மத்திய அரசு, திருடிய எரிவாயுவிற்கு அரசு சுமார் 1.55 பில்லியன் டாலர் தோராயமாக 10,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2016 வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் சூறாவளியில் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்த திருட்டு வழக்குக் காணாமல் போனது.

ஜியோ அறிமுகத் தினத்தில் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் உறுதியானது.  

முக்கிய வர்த்தகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் என்றால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி தான். இக்குழுமத்தின் 60 சதவீத வருமானம் இதன் மூலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்திய அரசுக்குச் சொந்தமான ஒஎன்ஜிசி நிறுவனத்தில் கையை வைத்துள்ளது.  
இயற்கை எரிவாயு

ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணி நிறுவனங்கள் இணைந்து ஆந்திரா மாநிலத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் பணியை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது.

கூட்டணி நிறுவனங்கள் ஆந்திராவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் அதன் கூட்டணி நிறுவனங்களாகப் பிபி பிஎல்சி மற்றும் நிகோ ரிசோர்சஸ் ஆகியவை இணைந்து கூட்டாக எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தன.

ரிலையன்ஸ் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் இருவரையும் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில் ஒரு குழு நிறுவப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் இரு நிறுவனங்களும் சரியான தகவல்களைத் தர மறுப்பதாக ஹைட்ரோகார்பன்ஸ் பொது இயக்குநரகம் கூறியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் இது குறித்து 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் நீர்த்தேக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒஎன்ஜிசி நிறுவனத்திடம் இதுகுறித்து எவ்விதமான அனுமதியும் ரிலையன்ஸ் வாங்கவில்லை.

அதுமட்டும் இல்லாமல் இது குறித்து மத்திய அரசு சரியான முடிவை எடுத்துத் தகுந்த அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இழப்பீடு குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு உரிமை கோர ஏதும் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே நாம் படித்தது.

"என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்"

No comments:

Post a Comment