NFTECHQ

Saturday, 31 March 2018


வாழிய பல்லாண்டு
31.03.2018 அன்று பணி ஓய்வு பெறும்
1.தோழர் M.பாஸ்கரன் கணக்கியல் அதிகாரி
2. தோழர் C. ரவிக்குமார் சீனியர் டெக்னிகல் சூப்பர்வைசர்
3.தோழர் N.ஆறுமுகம் டெலிகாம் டெக்னீசியன்
4. தோழியர் K.முத்துலட்சுமி டெலிகாம் டெக்னீசியன்
5. தோழியர் P.அருக்காணி டெலிகாம் டெக்னீசியன்
6. தோழர் K.C.ஜாய் டெலிகாம் டெக்னீசியன்
7.B. ஷாஜகான் டெலிகாம் டெக்னீசியன்
8. தோழர் M. சுப்ரமணியன்டெலிகாம் டெக்னீசியன்
9. தோழர் P. பாலகிருஷ்ணன் டெலிகாம் டெக்னீசியன்
10.S. வெங்கடசுப்புலட்சுமி உதவி டெலிகாம் டெக்னீசியன்
ஆகியோர்
 நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்


0.3 சதவிகிதம்
01.04.2018 முதல் விலைவாசிப்படி 0.3 சதவிகிதம் உயரும்.

Friday, 23 March 2018


மார்ச் 23
பகத்சிங்- ராஜகுரு-சுகதேவ்
நினைவுதினம்
போராளிகளின்வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்து காட்டியவர்கள்.

Thursday, 22 March 2018


மார்ச் 22
உலக தண்ணீர் தினம்
அந்நாளில் நீர்நிலைகளை உயிரெனக் காத்தனர். இந்நாளில் ஏரி மூடி வீடு கட்டி பணம் பார்க்கிறார் கள். வெப்பமும் வறட்சியும் கைகோர்த்து நீரின்றி வாட்டுகிறது.

தண்ணிரைச் சேமிப்போம் என்பது மக்களுக்கான அறிவுரை.

ஆனால் மழை நீரைச் சேமிக்கும் திட்டம் உண்டா?

மழையால் மடியும் மக்களும் உண்டு. மழையின்றி மடியும் மக்களும் உண்டு. இந்த அவல நிலையை உருவாக்கியோர் தண்டனைக்குரியவர்களே.
நதிகளை இணைக்கும் திட்டம் என்பது தேர்தலின்போது மட்டும் வாக்குறுதிகளாய் வலம் வருகிறது.

குடிநீருக்காகவே ஒரு நாளின் பெரும்பகுதியச் செலவிட்டு வாழும் நிலை இங்கே.    

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தண்ணீரை தாரைவார்த்து பகல் கொள்ளையடிக்கும் பாதகர்களும் இங்கெ.

வீட்டுக்கு வீடு
கெருவுக்குத் தெரு
ஊருக்கு ஊர்
நாட்டுக்கு நாடு
என பிரச்னை உண்டாகி
மூன்றாவது உலகப்போர் உருவானால் அது தண்ணிருக்ககவே இருக்கும் என்கின்றனர் புவிசார் வல்லுநர்கள்.

என்ன செய்ய? இருப்பதைக் காத்து வாழ்பவதைத்தவிர வெறென்ன வழி நமக்கு.


அஞ்சலி
NFTE  பேரியக்கத்தின் கர்னாடக மாநிலத் தலைவரும், பெங்களுரில் இயக்கத்தை வலிமையுடன் வழிநடத்திய தளபதியுமான தோழர் கிருஷ்ணமோகன்  உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆழ்ந்த  வருத்தமளிக்கிறது.

தோழரை இழந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கர்னாடக மாநில NFTE தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைக் கணிக்கையாக்குகிறோம். தோழர் மோகனைன் மறைவுக்கு நமது செவ்வணக்கம்.


Wednesday, 21 March 2018


CHECK OFF SYSTEM என்றால் என்ன?

தொழிற்சங்க அங்க்கீகாரத் தேர்தலை CHECK OFF SYSTEM மூலம் நடத்தலாம் என்ற கருத்தை நிர்வாகம் 15.03.2018 அன்று தெரிவித்தது. இது குறிதது 30.03.2018க்குள் கருத்து தெரிவிக்குமாறு NFTE, BSNLEU, AIBSNLEA மற்றும் SNEA அமைப்புகளிடம் கேட்டிடுந்தது.

இது குறித்து மேலும் ஒரு விளக்கத்தை 21.03.2018 அன்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அது யாதெனில்

"சில மாநிலங்களிலிருந்து CHECK OFF SYSTEM  குறித்து  விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்காகவே இந்த விளக்கம். ஒவ்வொரு ஊழியரும் எந்த சங்கத்துக்கு சம்பளத்தில் சந்தா பிடித்தம் செய்யலாம் என்று எழுத்துபூர்வமாக வரையறுக்கப்பட்ட படிவத்தின் மூலமாக குறிப்பிட்ட அதிகாரியிடம்DDO-AO (DRAWAL) அளிக்கின்றனர். இந்த அடிப்படையில் ஊழியரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சந்தா பிடித்தம் செய்யப்படுகிகிறது. ஒரு ஊழியர் ஒரு சங்கத்திற்கு மட்டுமே சந்தா பிடித்தம் செய்ய விருப்பம் தெரிவிக்க முடியும். இந்தக் கணக்கீடுகளைச்  சேகரித்து அந்தத் தகவல்களின் அடிப்படியில் பெரும்பான்மைச் சங்கம்  எது என்பது முடிவு செய்யப்படும்"

**************************************************************************************
ஆகவே இது சொல்லும் செய்தி யாதெனில் உறுப்பினர் சர்பார்ப்புத் தேர்தல் என்ற ஒன்று வழக்கமான முறையில் நடக்காது. தேர்தலுக்கென்று சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலை கிடையாது. செலவும் கிடையாது.

பத்து நிமிடங்களில்மாவட்டத்திலுள்ள அதிகாரி தகவலைச் சேகரித்து மின்னஞ்சல் மூலம் மாநில அலுவலத்துக்கு அனுப்பி விடுவார்.

அதிகபட்சம் ஒருமணிநேரத்துக்குள் மநிலத்திலிருந்து கார்ப்பரேட் அலுவலத்திற்கு தகவல் அனுப்பப்பட்டு விடும்.

இது குறித்து தலைவர்கள் விவாதித்து நல்ல முடிவினை எடுப்பார்கள் .

Monday, 19 March 2018


வாழ்த்துக்கள் தோழ்ர் மதி
அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் உதவித்தேர்வு செய்யப்பட்ட தோழர் மதிக்கு ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மாநாடு சிறக்கவும், ஒருமித்த கருத்தை உருவாக்கி, ஒரு மனதான நிர்வாகிகள் தேர்வு நடைபெற ஒப்பற்ற பணிசெய்த தோழர் மதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் தோழ்ர் பழனியப்பன்
அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் உதவித்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தோழர் பழனியப்பனுக்கு ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


வாழ்த்துக்கள் தோழ்ர் காமராஜ்
அமிர்தசரஸ்  அகில இந்திய மாநாட்டில் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட தோழர் காமராஜுக்கு ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் தோழ்ர் செம்மலமுதம்

அமிர்தசரஸ்  அகில இந்திய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் செம்மலமுதத்துக்கு ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இரங்கல்
தஞ்சை முன்னாள் மாவட்டச்செயலரும்
அடிமட்ட ஊழியர்களின் வாழ்விற்காகப் போராடியவரும்
NFTE
இயக்கத்தின் தஞ்சைப்பகுதியின் 
தன்னிகரற்ற தலைவருமான
தோழர்.L.சந்திரபிரகாஷ் அவர்கள் 
18/03/2018
அன்று தனது 64வது வயதில் 
இயற்கை எய்தினார்.
அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

Sunday, 18 March 2018


மார்ச் 18
தோழர் இந்திரஜித் குப்தாவின் பிறந்தநாள்.

மிகச் சிறந்த   நாடாளுமனறவாதி.
மதிக்கப்பட்ட, மரியாதைக்குரிய கம்யூனிஸ்ட்.
மத்திய் அரசு ஊழியர்களுக்கு வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் அளித்திட்ட தோழர்.


உள்ளம் நிறைந்த
தெலுங்கு வருடப் பிறப்பு
நல்வாழ்த்துக்கள்

Saturday, 17 March 2018


நிர்வாகிகள் பட்டியல்
அமிர்தசரசில்  மார்ச் 14,15,16 தேதிகளில் நடைபெற்ற NFTE அகில இந்திய மாநாட்டில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்

தலைவர் தோழர் இஸ்லாம் அகமது

உதவித்தலைவர்கள்

1.தோழர் மதிவாணன்
2. தோழர் மொகிந்தர்சிங் (பதான்கோட்)
3. தோழர் திவாரி (பரோடா)
4. தோழர் வினய் ரெய்னா (லூதியானா)
5. தோழர் லால்சந்த் மீரா (ஆல்வார்)
6. தோழர் பழனியப்பன்
7. தோழர் நரேஷ்குமார் டெல்லி

பொதுச்செயலர்
தோழர் சந்தேஷ்வர் சிங்


துணைப்பொதுச்செயலர்
தோழர் ஷேஷாத்ரி (பெங்களூரு)


செயலர்கள்

1. தோழர் பாட்டியா (அகம்தாபாத்)
2. தோழர் ராஜ்பால் (டெல்லி)
3. தோழர் மல்லன் (ஹிசார்)
4. தோழர் பிரதான் (கட்டாக்)
5. தோழர் ராமமூர்த்தி (விஜயவாடா)
6. தோழர் மகாபீர்சிங் (ராஞ்சி)
7. தோழர் கமால்சிங் (ஆக்ரா)
8. தோழர் கோசரி (ஹூப்ளி)
9. தோழர் காமராஜ்

பொருளர்
தோழர் ராஜ்மெளலி

அமைப்புச்செயலர்கள்
1. தோழர் தார் (ஸ்ரீநகர்)
2. தோழர் தாகூர் (போபால்)
3. தோழர் சந்தனு ஷேத் (யெட்மால்)
4. தோழர் சத்யேந்திர கெளதம்  (தர்மசாலா)

தோழர் செம்மல் அமுதம் சிறப்பு அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

19 தோழர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக தேர்வு செய்யாபட்டுள்ளனர்.

அனைவருக்கும் ஈரோடு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களைத் த்ரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Friday, 16 March 2018


இரண்டாவது நாள் நிகழ்வு
அகில இந்திய மாநாட்டின் இரண்டாவது நாளில் BSNL  நிறுவனம் குறித்தும்  ஊழியர்  பிரச்னைகள்
குறித்தும் விவாதிக்கப்பட்டது. தோழர்கள் மதி, பட்டாபி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். மாநாடு தொடர்கிறது.

Thursday, 15 March 2018


நிர்வாகத்தின் கருத்து கேட்பு
தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல சம்பந்தமாக நிர்வாகம் NFTE, BSNLEU,AIBSNLEA,SNEA ஆகிய சங்கங்களிடம் கருத்து கேட்டுள்ளது. 30.03.2018க்குள் கருத்து தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. கருத்து கேட்கப்பட்டு கடிதம் அனுப்பிய நாள் 15.03.2018
நிர்வாகத்தின் கருத்துக்கள்
1 இரகசிய வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் நடத்துவது தற்போதுள்ள BSNL நிறுவனத்தின் நிதிச்சுமை காரணத்தால் உகந்தது இல்லை.
2.நாடு முழுவதும் ஒரே நாளில் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் நடத்தப்படுவதால் செலவு அதிகமாகிறது. தேர்தல் அதிகாரி, வாக்குச்சாவடி அதிகாரி என  ஏராளமான அதிகரிகளைப் பணியில் அமர்த்த வேண்டியுள்ளது. CHECK OF SYSTEM (ஊழியர்களிடம் நான் இந்தச் சங்கத்தின்  உறுப்பினர் என படிவம் பெறுதல்) மூலம் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை நடத்தினால் செலவில்லை.
3.இரகசிய வாக்கெடுப்பில் தேர்தல் நடத்தினால் அந்த சமயத்தில் எந்த சங்கத்துக்கு வாக்களிக்கிறார்களோ அந்த அடிப்படையில்தான் உறுப்பினர் எண்ணிக்கை தெரிய்வரும். படிவம் கொடுக்கும் முறையில் ஊழியர்கள் நீண்ட காலமாக எந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்கள் என்பது தெரியவரும். இரகசிய வாக்கெடுப்பு முறையில் ஒரு சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையைச் சரியாகக் கணிக்க முடியாது.
4.அரசுத் துறைகளில் படிவம் கொடுக்கும் முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிர்வாகம் இந்த கருத்துக்களைச் சொல்லி சங்கங்களிடம் கருத்து கேட்டுள்ளது.

இது குறித்த நமது கருத்துக்கள் தொடரும்.நிர்வாகத்தின் கருத்து கேட்பு
தொழிற்சங்க அங்கீகாரத்
தேர்தல சம்பந்தமாக நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது.

Wednesday, 14 March 2018


இரங்கல்
சொர்க்கமும் இல்லை,
நரகமும் இல்லை.

சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. எல்லாம் கற்பனைக் கதை என்று ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை தி கார்டியனுக்கு அளித்தப் பேட்டியை இன்று நாம் நினைவுகூர்வது அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும்.

ஸ்டீபன் க்கிங்...அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்பட்டார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் என்ற தசை உருக்கி நோய் அவரை அவருடைய 21-ஆம் வயதில் தாக்கியது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.
மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்கிறார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம்) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார்.
எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் தி கார்டியன் இதழுக்கு ஒருமுறை அளித்தப் பேட்டி உலகளவில் வாதவிவாதங்களுக்கு வழிவகுத்தது.
எல்லா மதங்களுமே சொர்க்கம், நரகம் குறித்து தத்தம் மக்களுக்கு போதிக்கிறது. ஆனால், எப்போதுமே மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங்

ஒருமுறை "சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை: எல்லாம் கற்பனைக் கதையே" என்றார்.
இதற்காக அவர் பல்வேறு மதத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் என்பது வேறு கதை. தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், "மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன" என்றார்.
தி கிராண்ட் டிசைன் சம்பாதித்த எதிர்ப்புகள்..

2010-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கிராண்ட் டிஸைன்', (The Grand Design) என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அண்டம் உருவானவிதத்தையும் அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்த படைப்பாளியும் (கடவுளும்) தேவையில்லை எனக் கூறியிருந்தார். இந்தப் புத்தகம் பல்வேறு மத குருமார்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.

யூத மதகுரு லார்ட் சாக்ஸ் என்பவர், "ஸ்டீபன் ஹாக்கிங் தர்க்கவாதங்களை கட்டுக்கதைகள் என்று உடைத்தெரியும் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்" எனக் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


அறிவியல் உலகில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுக்கு இணையயாக மதிக்கப்பட்ட இயற்யல் விஞ்ஞானி ஸ்டீபன் க்கிங். இன்று காலமானார். அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்


எழுச்சியுடன் துவக்கம்

அகில இந்திய மாநாடு AITUC பொதுச்செயலர் தோழியர் அமர்ஜித் கெளர் அவர்களின் உண்ர்வுபூரபவமான, அறிவுபூர்வமான எழுச்சி மிகுந்த துவக்கவுரையுடன் துவங்கியது.


இனிய துவக்கம்
இன்று NFTE  பேரியக்கத்தின் அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலம் அமிர்தசசில்  சிறப்புடன் துவங்குகிறது


மார்ச் 14
கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்
இன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் - மார்ச் 14, 1883.
உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது மாமேதை கார்ல் மார்க்சின் பெயர். அவர் தன் அருமை நண்பர் பிடெரிக் ஏங்கல்சுடன் சேர்ந்து கம்யூனிச லட்சியத்தைப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் உலகப் பாட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்தார். தலைசிறந்த

புரட்சிக்காரராக, உலகப் பாட்டாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாக அவர் தன் வாழ் நாளெல்லாம் உயர்ந்து நின்றார்.அவர் தனது காலத்தில் உலக நாடுகளில் சோஷலிஸ்ட்களுக்கு போதனை செய்த பேராசிரியர். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் உருவாகக் காரணமாய் இருந்தவர், உதவிகள் செய்தவர். “யுக யுகாந்திரங்களுக்கு அவர் பெயர் நிலைத்து நீடித்து நிற்கும். அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்என்றார். அவ்வாறே காலங்களை வென்ற மனிதராகிவிட்டார் மார்க்ஸ். அவரது தத்துவம் மார்க்சின் பெயராலே வழங்கப்பட வேண்டும் என்று ஏங்கல்ஸ் தெரிவித்த அடிப்படையில் மார்க்சியமும் காலத் தை வென்ற தத்துவமாகிவிட்டது! சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள், அடிமைத்தனம், பிற்போக்குத் தன்மைகள் போன்றவை இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

Tuesday, 13 March 2018


மத்திய செயற்குழு
அமிர்தசரஸ் அகில் இந்திய மாநாட்டையொட்டி இன்று 13.02.2018 மத்திய சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.


இரங்கல்
குங்கனி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று காட்டுத் தீயால் மாண்டவர்களுக்கு ந்மது அஞ்சலி.

அவர்தம் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்


நீங்கள் ஏற்கெனவே சாதித்த விஷயங்களைத் தாண்டி, வேறு எதையாவது செய்ய முயற்சிக்காதவரை உங்களால் ஒருபோதும் வளர்ச்சியடைய முடியாது. - - ரால்ப் வால்டோ எமேர்சன் 

Thursday, 8 March 2018


மார்ச் 8
மகளிர் தின வாழ்த்துக்கள்

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
பாரினிலே இன்று
பல்துறைகளிலும்
பவனி வருகின்றனர்.

மேலும் மேலும்
மகளிர் சாதனை சமைத்து
சரித்திரம் படைக்க
உள்ளம் நிறைந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்


அகில இந்திய மாநாட்டுக்கு...
NFTE BSNL அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்திலிருந்து தோழர்கள்  பாலசுப்ரமணியன் ,
பழனிவேலு , புண்ணியக்கோட்டி
செங்கோட்டையன்
பால்ராஜ்
V.செந்தில் C.செந்தில் சுப்பிரமணியம் சுந்தரேசன்
உன்னிகிருஷ்ணன்
அஜுஸ்
ஆனந்தன்
சண்முகம்
ஜோப்
ஆகியோர் பங்க்கேற்க  சென்றுள்ளனர்.
தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.