NFTECHQ

Sunday 24 February 2019


பெரியார் மன்றம் தந்த பேரானந்தம்

23.02.2018 அன்று ஈரோடு மத்திய அரசு ஊழியர் நலச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழு நல்வழிகாட்டும் தலைவர் தோழர் D. மாணிக்கம் அவர்கள் தலைமையில் பெரும் சிறப்புடன் நடைபெற்றது. பொதுச்செயலர் சிறந்த செயல்பாட்டின் இலக்கணமாய்த் திகழும் தோழர் ராஜசேகரன் செயல்பாட்டு  அறிக்கையைச் சமர்ப்பித்து மிகச் சிறப்பான உரையாற்றினார். அனைவருக்கும் பயன் தரும் பல்வேறு தகவல்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தோழர் ராமசாமி நிதிநிலை பற்றி விளக்கினார். தோழர் சண்முகம் மத்திய அரசு ஓய்வூதியர் பிரச்னைகள் மற்றும் வருமான வரி குறித்து  பயனுள்ள உரையாற்றினார். தோழர்கள் ராஜமாணிக்கம், செல்வராஜன் ஆகியோர் சிறப்பான பாராட்டுரையும் வாழ்த்துரையும் வழங்கினர். "பி.எஸ்.என்.எல் இன்று" என்னும் தலைப்பில் நேர்மறையான, நம்பிக்கையூட்டும் தகவல்களுடன் உரையாற்றினார். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். தோழியர்கள் பங்கேற்பு கணிசமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பங்கேற்றவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களைத் தந்திட்ட ஆண்டுப்பொதுக்குழு.
பெரியார் மன்றம் தந்த பேரானந்தம்

23.02.2018 அன்று ஈரோடு மத்திய அரசு ஊழியர் நலச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழு நல்வழிகாட்டும் தலைவர் தோழர் D. மாணிக்கம் அவர்கள் தலைமையில் பெரும் சிறப்புடன் நடைபெற்றது. பொதுச்செயலர் சிறந்த செயல்பாட்டின் இலக்கணமாய்த் திகழும் தோழர் ராஜசேகரன் செயல்பாட்டு  அறிக்கையைச் சமர்ப்பித்து மிகச் சிறப்பான உரையாற்றினார். அனைவருக்கும் பயன் தரும் பல்வேறு தகவல்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தோழர் ராமசாமி நிதிநிலை பற்றி விளக்கினார். தோழர் சண்முகம் மத்திய அரசு ஓய்வூதியர் பிரச்னைகள் மற்றும் வருமான வரி குறித்து  பயனுள்ள உரையாற்றினார். தோழர்கள் ராஜமாணிக்கம், செல்வராஜன் ஆகியோர் சிறப்பான பாராட்டுரையும் வாழ்த்துரையும் வழங்கினர். "பி.எஸ்.என்.எல் இன்று" என்னும் தலைப்பில் நேர்மறையான, நம்பிக்கையூட்டும் தகவல்களுடன் உரையாற்றினார். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். தோழியர்கள் பங்கேற்பு கணிசமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பங்கேற்றவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களைத் தந்திட்ட ஆண்டுப்பொதுக்குழு.

Tuesday 19 February 2019


வலுக்கும் போராட்டம்
முதல் நாள் 18..02.2019 போராட்டத்தைக் காட்டிலும் இரண்டாம் நாள் 19.02.2019 போராட்டத்தில் கூடுதலான ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

மூன்று நாள் வேலைநிறுத்தத்தை 21.02.2019 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தமாக  தலைவர்கள் அறைகூவல் விட வேண்டும் என்ற உணர்வு ஊழியர்கள் மத்தியில் உள்ளது.
அதன் மூலமே அரசை நிர்ப்பந்தித்து  ஒரு உடன்பாட்டோடு வேலைநிறுத்தத்தை முடிக முடியும் என்பது ஊழியர்களின் உணர்வு.


வாழ்த்துக்கள்
18.02.2019 அன்று துவங்கிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.

Sunday 17 February 2019


மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள் 18.02.2019 முதல் நடைபெறவுள்ள மூன்று நாட்கள் நடைபெறும்  வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோடு மட்டுமல்லாது அந்தந்த பகுதியில் உள்ள நமது தோழர்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தேவையான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
இது முக்கியமான காலத்தின் அவசியமான தேவை.

Saturday 16 February 2019


வெகுண்டெழுவோம்
வெற்றி பெறுவோம்.
நமது உயிரினும் மேலாக நாம் நேசிக்கும் நமது நிறுவனம் காத்திட,
அதை மேலும் வளர்த்திட 18.12.2019 முதல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்.
வாஜ்பாய் அரசின் காலத்தில் உருவான நிறுவனம். நமது போராட்டத்தால் அரசு ஓய்பவூதியம் பெற்றோம். பணிப்பாதுகாப்பைப் பெற்றோம். நிறுவனத்தின் நிதியாதாரம் காக்கப்படும் என்ற எழுத்து பூர்வமான உறுதியைப் பெற்றோம்.
வாஜ்பாய் மறைந்து விட்டார்.
அன்று உறுதியளித்த அமைச்சர் இன்றும் அமைச்சர்.
வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கிய அவரது வாரிசுகள்
வாஜ்பாயின் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்திட்ட அவரது வாரிசுகள் வாஜ்பாய் அளித்த வாக்குறுதியை மதிக்கத் தவறி விட்டனர். நமது நிறுவனத்தை ச் சீர்குலைத்து விட்டனர்.
நமது நியாயமான  உணர்வுகளை,
உரிமைகளை, கோரிக்கைகளை,
ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை,
நமது அறவழிப் போறாட்டங்களை
அலட்சியப் போக்குடன்
அணுகும் போக்கை அனுமதிக்கலாமா?
சங்க வேறுபாடின்றி,
அணி திரள்வோம்.
அரசின் அலட்சியப் போக்கை முறியடிப்போம்.
வெற்றிகள் பல குவித்த
நமது வரலாற்றுப் பாதையில் தடம் பதிப்போம்.
வேலைநிறுத்தத்தை முழுமையாக்குவோம்.
வெற்றி பெறூவோம்.

Friday 15 February 2019


நெருப்பு இல்லாமலும் புகையும்
நெருப்பு இல்லாமல் புகையாது என்பர். ஆனால் நெருப்பு இல்லாமலும் புகையைக் கிளப்பும் சக்தி சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட சக்தி படைத்த சில சதிகாரர்கள்  கிளப்பி விட்ட புகைதான் பி.எஸ்.என்.எல்    மூடப்படும் என்ற செய்தி.

கொள்ளை லாபத்துக்காக  
எதையும் செய்யத் துணியும் கூட்டம் ஒன்று  சுயலாபத்துக்காக செய்த சதி இது.

லட்சக்கணக்கானோரின் வியர்வையிலும் உழைப்பிலும் உதிரத்திலும் விளைந்த இந்த நிறுவனம் மூடப்படும் வாய்ப்பு என்பது கிஞ்சித்தும் கிடையாது.
நமது நோக்கங்களைத் திசை திருப்பும் சதியே இது.

நிறுவனம் காத்திட,
ஊழியர் உரிமை பெற்றிட
18.02.2019 முதல் 20.02.2019 வரை நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
சதிகளை முறியடிப்போம்.
நமது நியாயமான உரிமைகளைப் பெற்றிடுவோம்.


நேற்றும் இன்றும்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடுவதற்கு அரசு திட்டமிடுகிறது என்று நேற்று எலும்புத்துண்டுகளுக்கு ஆளாய்ப் பறக்கும் சில பத்திரிக்கைகளும், ஊடகங்ளும் செய்தி வெளியிட்டன.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று இன்று அதிகாரபூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடுவதற்கு திட்டம் வகுத்தால் அதை லட்சக்கணக்கான ஊழியர்கள் தடுத்து நிறுவனத்தைக் காப்பார்கள்.


Saturday 2 February 2019


புயலை எதிர்த்து பூத்த பாளை!

கஜா புயலை செய்திக் காற்றாக வீச வைத்த ஊடகங்கள் ஓய்ந்துவிட்டன. வீழ்ந்த மரங்களுக்கும், வாழ்ந்த வாழ்வுக்கும் நிவாரணம் கொடு என்று கேட்ட மக்களின் ஓலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கப்பட்டுவிட்டன.
கஜா புயலின் போது என் டெல்டா மண்ணில் வேதனையில் திரிந்து சென்னை திரும்பிய நான், போன வாரம் ஊருக்குச் சென்றிருந்தேன். கஜாவால் வேட்டையாடப்பட்ட என் உறவுகளின் வீடுகளுக்கு மீண்டும் சென்று பார்த்தேன். திருத்துறைப்பூண்டி பகுதிதான் கஜாவால் கடுமையான சேதத்தைச் சந்தித்திருந்தது. தென்னை மரங்களை எல்லாம் பார்த்து தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். குளங்களில் எல்லாம் தண்ணீர் மீது இளநீர் தேங்காய்கள் விழுந்து மிதந்துகொண்டிருந்தன. அதே குளங்களில் கஜாவால் வளைத்து ஒடிக்கப்பட்ட தென்னைகள் தங்கள் சோக முகத்தைப் பார்த்துக்கொண்டு ஸ்தம்பித்துக் கிடந்தன. இப்போது ஊருக்குப் போனபோது அறுவடைக் காலம். ஆங்காங்கே சாலையோரங்களில் அறுவடை இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ’‘நல்லா கதிர் விடுற நேரத்துல கஜா வந்து ஆட்டி வச்சிருச்சு... நெல் எல்லாம் கருக்காவாப் போச்சு. கண்டுமுதல் பாதியாக் குறைஞ்சுடுச்சுஎன்று ஊரில் தகவல் சொன்னார்கள்.
என் மாமனார் வீட்டின் கொல்லையில் சுமார் நாற்பது தென்னைமரங்கள் கஜாவால் வீழ்ந்திருக்கும். மீண்டும் இப்போது கொல்லைக்கு சென்றேன். வீழ்ந்த மரங்களின் உடல்கள் அப்படியே கிடந்தன. தொட்டுத் தொட்டுப் பார்த்தேன், மத்திய -மாநில அரசுகளைப் போலவே இருந்தன. வளைக்கப்பட்ட தென்னைகள், ஒடிக்கப்பட்ட தென்னைகள், தலைப் பகுதி திருகிப் பிய்த்து வீசப்பட்ட தென்னைகள் எல்லாம் புயல் வீசிய கணத்தை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருந்தன தங்களுக்குள்.
நேர்ந்த துயரத்துக்கு இடையே நிமிர்ந்து பார்த்தேன். இன்ப அதிச்சி. கஜாவால் வளைத்து கிட்டத்தட்ட ஒடிக்கப்பட்டு, தலை பிய்த்து வீசப்பட்ட ஒரு தென்னையின் உச்சியில் பாளை பூத்திருந்தது.  ‘’என்ன மாமா இது?” என்றேன் ஆச்சரியமாய்.
தலையைத் திருகி போட்டாலும் பூத்திருக்கு பாத்தீங்களா... அதான் நம்பிக்கைசட்டெனச் சொல்லி கிராமத்து மனுஷன் விவரமாய் சிரித்தார். கஜா பேரழிவுக்காக கண்டம் தாண்டியெல்லாம் கண்ணீர் சிந்தினார்கள். ஆனால் கஜாவின் வேட்டைக் காட்டில் கஜாவை வென்று, அந்தத் தென்னைமரம் மீண்டும் தன் பாளை மூலம் சிரிக்கிறது. இது நம்பிக்கையின் குறியீடு. டெல்டா மீண்டும் எழும். புரட்டிப் போடும் புயல்களையும், புயலின் பெயரைச் சொல்லி புரட்டுகளை வீசும் பயல்களையும் தாண்டி டெல்டா எழும் என்ற நம்பிக்கை வார்த்தையை, தலை பிய்க்கப்பட்ட தென்னையில் இருந்து உயிர்த்திருக்கும் பூம்பாளை பேசுகிறது.
இப்போதெல்லாம் மனசை சில கவலைப் புயல்கள் கடக்கும்போது கண்ணை மூடி அண்ணாந்து கொள்கிறேன். என் கிராமத்துத் தென்னையின் பாளை என்னைப் பார்த்து சிரிக்கிறது, ‘எதிர்த்து நில்லுடா... பூக்கலாம். ’ என்ற வார்த்தைகளை உதிர்த்தபடி!
-ஆரா

Friday 1 February 2019


நெகடிவ் மார்க் கூடாது
போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களைக் குறைக்கும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வியில் முன்னேறிய கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட நெகடிவ் மார்க் முறையைப் பின்பற்றவில்லை. தேர்வர்களும் துன்புறுத்தப்படவில்லைஎன்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சரியான பதில்களுக்கு ஏன் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு, சிபிஎஸ்இ மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் நடத்தும் பதவி உயர்வுக்கான போட்டித் தேர்வுகளில் நெகட்டிவ் மார்க் முறை உண்டு. நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காடி நெகட்டிபவ் மார்க் முறையை அகற்ற NFTE மத்திய சங்கம் முயற்சிக்க வேண்டும்.