NFTECHQ

Saturday 26 November 2016

தோழர் ஜெயராமனின்

கவிதை அஞ்ச்சலி


புரட்சிப் பந்தைப்
புவிக் கோளத்தில்
சுழற்றி விட்டவன்

லெனின் கனவுகளை
நிலப் பரப்பில்
நிஜமாக்கி வாழ்ந்தவன்

அமெரிக்காவின் காலடிகளில்
அமிலக் கரைசலை
அடர்த்தி யாக்கியவன்

புவிப் புரட்சியாளர்களின்
ரத்த நாளங்களில்
வீரியத்தை விதைத்தவன்

சுற்றியிருக்கும் நாடுகளுக்கு
சுகத்தை ஏற்றுமதி செய்த
அகத் தூய்மையாளன்

வாடிக்கனே வலியவந்து
வாழ்த்திய விடியல் இவன்
தோல்விக்கு தோல்வி தந்து
தோள்களைத் தோழமைக்கு ஈந்து

மறைந்தானோ இவனல்லன்
மார்க்சிய மெய்ப்பொருள் ஆனான்.

கொல்லச் சூழ்ச்சிகள் செய்த
குள்ளநரி ஏகாதிபத்தியம்
வெல்ல முடியவில்லை
மெல்ல இயற்கை அணைத்தாள்

வாழ்க நின்புகழ் காஸ்ட்ரோ
வான் வாழும் மட்டில்.


No comments:

Post a Comment