NFTECHQ

Friday, 31 January 2014

நலமுடன் வாழ்கதோழர் R.பஞ்சாபகேசன் STSO
தோழர் R.நந்தகோபால் STSO
தோழர் S.பாலசுப்ரமணியன் TM
தோழர் E.C.சந்திரசேகரன் TM
தோழர் C. சண்முகம் TM
ஆகிய தோழர்கள் இன்று 31.01.2014 இலாகா பண்யிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். அவர்களது பணி ஓய்வுக் காலம் ம்கிழ்ச்சிகரமாக அமைந்திட உளமார வாழ்த்துகிறோம்.

Monday, 27 January 2014

இளைஞர்களுக்கு வாய்ப்புதற்பொழுது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. எந்த அமைப்பும் இதற்கு விதி விலக்காக இல்லை.

நமது துறையில் பொறியியல் படிப்பு முடித்து, ஒரு கடினமான தேர்வு எழுதி, பயிற்சி முடித்து ஆயிரக் கணக்கான இளம் தோழர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தோழர்களுக்கு பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் போன்றவற்றில் தீர்க்கப்படாத பிரச்னைகள் உள்ளன. தங்களது பிரச்சனைக்கு  தீர்வு வரவில்லையே என்ற ஏக்கம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இளைஞர்களின் திறமை, ஆற்றல், அறிவு இவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் நிறுவனமே வாழும். வளரும். நிலைத்து நிற்கும்.

இளைஞர்களின் திறமை, ஆற்றல், அறிவு இவற்றை 
மதிப்பதும்அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்வதும் ஒரு நல்ல நிர்வாகத்தின் கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நமது நிர்வாகம் தவறி விட்டது. இந்நிலையில் பொறுப்புள்ள, சமூக நோக்கமுள்ள தொழிற்சங்கம் இப்பிரச்னையில்  நமது சங்கம் அக்கறை கொண்டு செயல்பட்டது. இப்பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதுவே நிறுவனத்துக்கும், அந்த இளம் தோழர்களுக்கும், நமது சங்கத்துக்கும் நலலது.

காலத்தே சில பிரச்னைகளை தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை.

Sunday, 26 January 2014

25.01.2014ல் கற்ற பாடம்

25.01.2014 அன்று மத்திய அரசுத் துறைகளான தபால், தொலைத்தொடர்பு (DOT), வருமானவரி மற்றும் பி.எஸ்.என்.எல் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் சங்க ஆண்டு மாநாடு 

ரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது..

நாம் கண்ட சிறப்பு அம்சங்கள்

ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் ஆண்டு மாநாட்டை நடத்துவது என முடிவு செய்து கடந்த 23 ஆண்டுகளாக இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.

ஒரு அமைப்பிற்குத் தேவையான ஒற்றுமை உணர்வு, அறிவாற்றல், பிரச்னைகளைப் புரிந்து கொண்டு தீர்வு காணும் ஆற்றல், சகிப்புத்தன்மை,   அனைவரியும் அனைத்துக் கருத்துக்களையும் ஏற்று அரவணைக்கும் உயரிய் மனப்பாங்கு போன்ற குணங்களைக் காண முடிந்தது..

உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொனனவரின் வழி வந்தோரும் பிறரும் ஒற்றுமையை உடைத்து பிளவை உருவாக்கிய பின்னரும் தலைமை மீது நம்பிக்கை கொண்டு 600க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பில் நம்பிக்கை கொண்டு உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர்.  

நிர்வாகிகள் தேர்வு ஒரு மனதாக போட்டியில்லாமல் நடைபெற்றது.


இவர்களையும் இவர்களின் செயல்பாடுகளையும் பார்க்கும் போது ஓய்வு பெற்றோர் போன்று உணர முடியவில்லை. மாறாக வருத்தமே இல்லாத வாலிபர்களைப் போன்ற உணர்வுதான் ஏற்பட்டது..

Friday, 24 January 2014

இரங்கல்காங்கயத்தில் பணியாற்றிய டெலிகாம் மெக்கானிக் தோழர்
R. முத்துசாமி 23.01.2014 அன்று காலமானார். அவரது மறைவுக்கு ந்மது அஞ்சலியையும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்க்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, 17 January 2014

தலமட்டக் குழு (லோக்கல் க்வுன்சில்)21.01.2014 அன்று தலமட்டக் குழுவில் விவாதிக்கப்ப்டவூள்ள
பிரச்னைகள்

1. F&G REPORT FOR NEW LANDLINE/BROADBAND CONNECTIONS
2. SHIFTING OF OFFICES IN THE FIRST FLOOR OF GM OFFICE TO TELEPHONE BHAVAN.
3. OPENING OF ATM CENTRES AT MOOLAPPALAYAM RSU/MARAPPALAM OFFICE
4. SHIFTING OF TRC COUNTER AT TELEPHONE BHAVAN
5. INCREASING OF CONTRACT UNITS FOR BETTER LANDLINE MAINTENANCE
6. UPDATING OF KNOWLEDGE ABOUT OUR SERVICES AND TARIFF FOR THE STAFF
7. PROVISION OF DRINKING WATER IN ALL THE EXCHANGES
8. PROMPT INFORMATION TO POSTPAID MOBILE CUSTOMERS REGARDING BILL AMOUNT
9.SUPPLY OF SALARY SLIP TO THE EMPLOYEES
10. REQUEST FOR WITHDRAWAL OF ESCORT FOR PAYMENT IN BANKS
11. MRS SCHEME
12. SUPPLY OF MATERIALS FOR LANDLINE MAINTENANCE 
13. PROPER REPAIR OF TELEPHONE INSTRUMENTS
14. INCREASING OF RENT FOR INSPECTION QUARTERS
15. DEBITING AMOUNT FROM THE CUSTOMERS ACCOUNT IN PREPAID MOBILE SERVICES
16. IMPLEMENTATION OF BSNL EMPLOYEES FAMILY CUG
17. FURNISHING OF CDMA SERVICE DETAILS
18. SUPPLY OF TOOLS AND TOOL BAGS
19. CLEANING OF WATER TANK IN TELEPHONE BHAVAN/MOOLAPPALAYAM QUARTERS
20. FUNCTIONING OF TRC  COUNTERS AT V CHATRAM AND MOOLAPPALAYAM RSU
21.FILLING OF WATER TANKS AT MOOLAPPALAYAM STAFF QUARTERS
22. SUPPLY OF QUALITY MATERIALS FOR CABLE JOINTING
23. BOOKING OF FAULTS IN IVRS
24. MONITORING OF BATTERIES, POWER PLANT AND ENGINE ALTERNATORS
25. SERVICE BOOK VERIFICATION
27. PAYMENT OF OVER TIME ALLOWANCE
28.SUPPLY OF CHEPPALS AND POWER SHOES FOR THE ELIGIBLE STAFF
29. QUARTERS MAINTENANCE
30. RENTING OF UNOCCUPIED QUARTERS IN OUR SSA
31. AVAILABILITY OF LINE AND CONTROL CARDS
32. FORMATION OF ENQUIRY CELL IN OUR SSA
33.EFFECTIVE MONITORING OF PENDING CASES OF NPC,SHIFT, BROAD BAND etc
34. EARNING REVENUE FOR BSNL BY CONSTRUCTING ATM CENTRES AND LEASING FOR RENT IN THE POSSIBLE PREMISES OF OUR BUILDINGS IN OUR SSA.
35. PLANTATION OF TREES
36. STATUS OF VELLODE EXCHANGE SITE
37. PROPER UTILIZATION OF MAN POWER
38. BANK LOAN –SOME PROBLEMS

Saturday, 11 January 2014

மருத்துவமனை அங்கீகாரம்
ஈரோடு மாவட்டத்தில் கீழ்க்கண்ட மருத்துவமனைகள் நமது மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1.செந்தில் பல்நோக்கு மருத்துவமனை
2.அச்சுதா கண் மருத்துவமனை
3.அகர்வால் கண் மருத்துவமனை
4. CK  மருத்துவமனை
5. மாருதி மருத்துவமனை
6. அரசன் கண் மருத்துவமனை
7. லோட்டஸ் மருத்துவமனை

Tuesday, 7 January 2014

தோழர் ஞானையா 94தோழர் ஞானையா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
அந்தத் தோழருக்கு நமது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தோழர். NFPTE சம்மேளனத்தில் பிளவு ஏற்பட்ட போது சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு மீண்டும் ஒரு மனதாக பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பணி ஓய்வு பெற்ற பிறகு அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்ற பணியைச் சிறப்பாக நிறைவேற்றினார்.

ஆழந்த அறிவாற்றலுடன் நாற்பதுக்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங்களை எழுதியுள்ளார்.

94 வயது. வயதின் காரணமாக இயற்கையான உடல் சோர்வு இருப்பினும் சிந்தனையில் இன்னும் இளைஞனாக விளங்குகிறார். சிறந்த சமூகச் சிந்தனையாளரான அவர் இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

TRANSFORMATION OF BSNL
"R. Dinakaran heads the Internet edition of The Hindu Business Line and writes on technology and social media."


For over a decade, I kept away from PSUs as much as I could. I had had bad experiences with both BSNL and a PSU bank, and I swore I would never ever have anything to do with PSU telecom companies and banks.

 But I kept hearing about how the two PSU behemoths were changing...and adapting to the times.

 My experience at Valparai, a hill station in Tamil Nadu, forced me to get a BSNL SIM card. I had to be without even basic mobile connectivity for two full days at Valparai, as only BSNL had services there. Our family had four SIM cards of three private telecom service providers but they were of no use.
The purchase and activation process of the BSNL SIM card was, to my surprise, a smooth and pleasant experience. First, the process of getting a number of your choice - online. I got mine within minutes. I was told to go to the BSNL office to submit the KYC documents. The process was over - again within minutes, and the SIM went live in just an hour!

 Yesterday, I went to BSNL's online portal to recharge it. When I proceeded to register for the prepaid recharge, I had mentally prepared myself for a tough experience. The reason: I had heard horror stories of how public sector portals functioned. But, I was once again surprised. The registration was a breeze.

 Now came the best part - the recharge process itself. As I logged in and selected the recharge voucher, the screen showed the full details of the recharge, including validity. The next screen showed my pre-paid balance and other details. The recharge was done within minutes.

I had recharged an ISD pack. When I tried calling the international number, the call did not get through. The recorded voice asked me to contact BSNL.

Now, I had to speak to a 'live' person in BSNL for the first time! After going through the usual IVR process, I selected the number for 'Agent' and was once again surprised when the call got connected to a 'live' person in just one ring. I was told to send an SMS for activating the ISD service. I asked her when it would be activated. She had the usual reply, "Within 24 hours."
 I did not even had to wait for 24 seconds. The ISD service was activated immediately.

 We assume public sector companies will be sloppy and expect a bad experience. Of course, there were days when people dreaded entering PSU offices. My experience with BSNL a decade ago was what had prompted me to keep away from PSUs. It is heartening when we realise their level of transformation. In fact, the private sector telecom players can learn a thing or two from BSNL's online portal. 
COURTEY : BUSINESS LINE


 
 

Monday, 6 January 2014

நெஞ்சம் மறப்பதில்லை
சிந்திக்கிற தலைவனாய்
சிந்திப்பதை செயல்படுத்தும் தலைவனாய்
தொழிலாளிகளின் உள்ளங்களில்
உவகையை விதைத்த தோழனாய்
வாழ்ந்த் தூழர் குப்தாவின்
நினைவைப் போற்றுவோம்

Saturday, 4 January 2014

சொர்க்கபுரியின் (?) சோகங்கள்அமெரிக்கா. இது சொர்க்கமென்று தன்னை வர்ணித்துக் கொள்கிறது. உலகில் உள்ள முதலாளிகளும் அமெரிக்காவை ஒரு மாதிரி தேசம் என்று புகழ்கின்றனர். எங்களுடைய முதலாளித்துவக் கொள்கையே அனைத்துப் பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணி என்று தொடர்ந்து அமெரிக்க நாட்டு ஆளும் வர்க்கமும் ஆலாபனம் இசைக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு பொருளாதாரச் சிக்கல் உருவாகி அரசு அலுவலகங்கள்  மூடப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு வழங்கப்பட்டது.

தற்போது வேலையில்லாத வாலிபர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு  வந்த  நிவாரணத் தொகையான ரூபாய் 72000 இனி கிடையாது என அமெரிக்க அரசு அறிவித்து விட்டது. இதனால் பல லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படுவர்.

முதலாளித்துவத்தின் முகம் தொடர்ந்து கிழியும்.

சோசலிசம் மெல்ல மலரும்
Thursday, 2 January 2014

பஞ்சப்படி உயர்வு

01.01.2014 முதல் 5 சதம் பஞ்சப்படி உயரும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதா? மாதச் சம்பளத்தின் அளவு கூடும் என்பது மகிழ்ச்சி தரும் என்பது உண்மைதான்.

ஆனால் விலைவாசி இந்த அளவுக்கு உயர்கிறது என்பது மிகவும் கவலைக்குரியதாகும். விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் சாதாரண ஏழை எளிய மக்களின் வேதனைக்கு என்ன விடிவு?

உற்பத்தி செய்வோர் தங்கள் உழைப்புக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற் லாபம் கிடைப்பதில்லை என வருந்துகின்றனர். விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் படும் துயரம் எல்லை தாண்டியதால் தற்கொலைகளும் நிகழ்கின்றன.. ஆனால் நுகர்வோர் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். இடையில் சிலரது கொள்ளை லாபம் அடிக்கும் செயல்கள் முறியடிக்கப்பட்டால்  விலைவாசி உயர்வு கட்டுப்படும்.

பஞ்சப்படி உயர்வு என்பதை விட விலைவாசி குறைவதே உண்மையான மகிழ்ச்சியாகும்.