NFTECHQ

Friday 30 November 2018



வாழிய பல்லாண்டு
30.11.2018 அன்று பணி ஓய்வு பெறும்
தோழியர் V.  சோபனகுமாரி OS ஈரோடு
தோழர் M.  தன்னாசி OS சத்தி
ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Saturday 24 November 2018


நவம்பர் 24
NFPTE சம்மேளன உதயதினம்
NFPTE சம்மேளனம்ன் உதயமான தினம் நவம்பர் 24.

E3, E4, P3, P4, T3, T4, R3, R4, A3 என ஒன்பது சங்கங்களை இணைத்து NFPTE என்ற ஒரே குடையின் கீழ் ஒரு சம்மேளனம் உருவாகிய தினம்.

தோழர்கள் குப்தா, ஞானையா போன்ற ஒப்பற்ற தலைவர்களின் தியாகம் மிக்க தன்னலமற்ற சேவையால் சாதனைகள் பல நிகழ்ந்தன. ஒற்றுமை என்னும் தாரக மந்திர்த்துடன் ஓங்கி நின்றது NFPTE.
கடைநிலை ஊழியர்களின் கனவுகளையும் நனவாக்கிய வரலாறுகள் படைத்த சம்மேளனம்.
தடைகளை உடைத்து லட்சக்கணக்கான கேசுவல் ஊழியர்கள் நிரந்தரம் பெற்றனர்.
தொழில்நுட்பம் தொல்லைதரும் என்ற நிலை மாற்றி கேடர் சீரமைப்பு மூலம் பதவி உயர்வுகள் சாத்தியமானது.
NFPTE படைத்த சாதனைகளை நினைவில் கொண்டு முன்னேற்றம் காண்போம்.
அனைவருக்கும் சம்மேளனதின வாழ்த்துக்கள்.

Thursday 15 November 2018


காலவரையற்ற வேலைநிறுத்தம்

03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
14.11.2018 BSNL அனைத்து தொழிற்சங்க அமைப்பின் (AUAB) தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அமைச்சரின் உறுதிமொழிகள் எதுவுமே நிறைபவேற்றப்படவில்லை.
DOT செயலர் அளித்த உறுதிமொழிகளிலும் முன்னேற்றமில்லை. மாறாக எதிர்மறையான நடவடிக்கைகளில் DOT ஈடுபட்டுள்ளது.

இவற்றைப் பரிசீலித்த தலைவர்கள்  03.12.2018 முதல் காலவரையர்ற வேலைநிறுத்தத்திற்கு
அறைகூவல் விடுத்துள்ளனர்.

கோரிக்கைகள்

1. ஜனவரி 2017 முதல் ஊதிய மாற்றம். கொடுக்கும் திறன் குறித்து அமைச்சரவைக்கு அனுப்பாமல்  DOT யே முடிவெடுக்க வேண்டும்.
2. BSNLக்கு 4G அலைக்கற்றை கொடுக்க வேண்டும்.
3. ஓய்வு பெறுவோர் பெறும் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில்தான் ஓய்வூதியப் பங்கீடு  செலுத்த வேண்டும்.

ஒற்றுமையைப் போற்றிக் காத்து,
விருப்பு வெறுப்பு அகற்றி விடுபட்ட அமைப்புகளையும் ஒன்றிணைத்து
களம் காண்போம்.
வெற்றி பெறுவோம்.





Wednesday 14 November 2018


நவம்ர் 14

குழந்தைகள் தினம்

நேருவின் 129ஆவது பிறந்த தினம்

தியாக வாழ்க்கை

ஐசிஎஸ் அதிகாரியாகும் நோக்கத்தோடு லண்டன் சென்ற நேரு, தேர்வெழுதும் வயதை அடையாததால் பாரிஸ்டர் பட்டத்தோடு இந்தியா திரும்பினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரை அரசியல் நோக்கி இழுத்தது. சிறைவாசங்களில் கழிந்த வாழ்க்கை நேருவினுடையது. நோயுற்றிருந்த மனைவி கமலாவும் நேருவுடன் போராட்டங்களில் பங்கேற்றார். சிறை சென்றார். சகோதரிகள் விஜயலெட்சுமி, கிருஷ்ணாவும் சிறைபட்டிருக்கிறார்கள். 1931 டிசம்பர் முதல் 1935 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே சிறையில் இல்லாமல் வெளி மாபெரும் ஜனநாயகர்
நேருவின் அரசியல் பயணத்தை ஒற்றை வார்த்தையில் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், ஜனநாயகம் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சியிலும் மக்களிடத்திலும் இருந்த அபாரமான செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சர்வாதிகாரியாகவும்கூட ஆகியிருக்கலாம் நேரு. ஆனால், எதிர்க்கட்சிகளே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை ஆழமாக மதித்த அவர், கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் எல்லோரும் தன்னைக் கேள்வி கேட்க அனுமதித்தார்.

தீவிரமான வாசகர்

நேரு சிறந்த வாசகர். எவ்வளவு வேலைப்பளுவுக்கு இடையிலும் தவறாது வாசித்தவர். மே 21, 1922-க்கும் ஜனவரி 29, 1923-க்கும் இடைப்பட்ட நாட்களில் மட்டும் அவர் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை 55. சிறைவாசத்தின்போது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள், டிஸ்கவரி ஆஃப் இந்தியா, சுயசரிதை ஆகிய மூன்று நூல்களும் அவரது எழுத்தாளுமையின் உதாரணங்கள்.

மூன்றாம் பார்வை

அமெரிக்கா, ரஷ்யா என்று உலக நாடுகள் இரண்டுபட்டு நிற்க, ‘அணிசேராக் கொள்கை’யை முன்னிறுத்தி மூன்றாம் உலக நாடுகளை ஒருங்கிணைத்தவர் நேரு. அவர் உருவாக்கிய ‘பஞ்சசீலக் கொள்கை’ உலக நாடுகளின் நல்லுறவுக்கு ஓர் சாசனம்.

சமதர்மக் கனவு

இந்தியாவை ஒரு சோஷலிஸ நாடாக வளர்த்தெடுக்க விரும்பியவர் நேரு. அந்தக் கனவின் வெளிப்பாடுதான் ஐந்தாண்டுத் திட்டங்கள். சோஷலிஸத்துடன் முதலாளித்துவத்தின் சாதகமான அம்சங்களையும் கலந்து கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் தோன்ற அவரே வழிவகுத்தார். அவர் நிறுவிய தேசிய நிறுவனங்கள் அவர் காண விரும்பிய இந்தியாவுக்கான அடித்தளங்கள்.


வருவாய் விவரங்கள் உண்மையா?

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் விவரங்களை மறுமுறை தணிக்கை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாய் விவரங்களைக் குறைத்து தவறாக வெளியிட்டு வருவதாக அரசு சந்தேகித்துள்ளது. ஆதலால் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதிநிலை விவரங்களை மறுமுறை விரிவாகத் தணிக்கை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறையின் வருவாயிலிருந்து அரசுக்கும் பங்கு கிடைக்கிறது. நிறுவனங்கள் தங்களது விவரங்களைத் தவறாகத் திரித்து வழங்குவது அரசின் வருவாய்க்குச் சாதகமாக இருக்காது.
இதில் முக்கியமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்லுலார், டாடா டெலி, ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஜனவரியின் முதல் வாரத்தில் ஆறு தணிக்கை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த ஒன்பது மாதக் காலத்தில் நிறைவடைந்துவிடும். தணிக்கை நடவடிக்கை நடைபெறும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பும்.

இது நமக்குக் கிடைத்த தகவல். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday 7 November 2018


ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு
சுரண்டலை ஒழிக்க வந்த புரட்சி
நூறாண்டு கண்ட ருஷ்யப் புரட்சி
உலகம் முழுதும் சுதந்திரக் காற்றை
சுவாசிக்க வைத்த உன்னதப் புரட்சி
பாசிசம் வீழ்த்தி மக்களாட்சிக்கு
பாதை வகுத்த அற்புதப் புரட்சி
மார்க்ஸ் எங்கெல்ஸ் தத்துவத்தை
உயிர்பெறச் செய்த உன்னதப் புரட்சி
இன்றைய நாளில் அன்று நிகழ்ந்த
மனிதகுல விடுதலைக்கான
மாபெரும் புரட்சியைப் போற்றிடுவோம்
ரஷ்யப் புரட்சியின் தியாகங்களை
நெஞ்சில் ஏற்றுச் சபதமேற்போம்.

மானுட விடுதலை பூமியில் மலர்ந்திட
சோவியத் மண்ணில் வித்திட்ட
நவம்பர் புரட்சி என்றும் வாழ்க!
மார்க்சின் தத்துவம் நடைமுறையாக்கிய
லெனினின் புரட்சி என்றும் வாழ்க!
நூறு ஆண்டுகள் முடிந்தாலும்
கலங்கரை விளக்காய்த் திகழ்கின்ற
நவம்பர் புரட்சி என்றும் வாழ்க
சுரண்டலிலிருந்து விடுதலையே
உண்மையான விடுதலையாகும்!
எந்த வடிவில் இருந்தாலும்
சுரண்டலை முற்றாய் ஒழித்திடுவோம்!
உலகத் தொழிலாளர் ஒற்றுமையை
கண்ணின் இமைபோல் காத்திடுவோம்!
மதச்சார்பின்மையைப் பலிகொடுக்கும்
மதவாதத்தினை முறியடிப்போம்!
இந்திய நாட்டு அரசியலை
சீரழிக்கும் பாசிஸ மோடியின்
ஆட்சியை நாமும் அகற்றிடுவோம்!
வெல்லட்டும் வெல்லட்டும்
நவம்பர் புரட்சி வெல்லட்டும்!
லெனின் ஏற்றிய புரட்சி தீபம்
அணையவிடோம் அணையவிடோம்!
வர்க்கப் புரட்சி வெல்லட்டும்
யுகப்புரட்சி வெல்லட்டும்!
இன்குலாப் இன்குலாப் இன்குலாப் ஜிந்தாபாத்!

Tuesday 6 November 2018



இனிய
தீப ஒளித்
திருநாள்
நல்வாழ்த்துக்கள்

Monday 5 November 2018


DOT செயலருடன் பேச்சுவார்த்தை
தொலைத்தொடர்புத்துறைச்  செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்களுடன்
02.11.2018
அன்று BSNL அனைத்து சங்கத்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஏழு மாதங்கள் கடந்த பின்பும் அமைச்சர்
அளித்த உறுதிமொழிகள் செயல்படுத்தப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

ஊதிய மாற்றம்
ஊதிய மாற்றம் குறித்து சில விளக்கங்களையும் கேள்விகளையும்
BSNL
நிர்வாகத்திடம் DOT எழுப்பியுள்ளதாம்..
உரிய பதில் கிடைத்தபின் ஊதியமாற்றம் குறித்த பரிந்திரை நவம்பர் 2018 இறுதிக்குள்
அமைச்சரவையின்  செயலருக்கு அனுப்பப்படும்  என DOT செயலர் தெரிவித்துள்ளார்..

4G அலைக்கற்றை ஒதுக்கீடு
4G அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும்
விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு
அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஓய்வூதியப்பங்களிப்பு
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு  குறித்து
சாதகமாக பரிந்துரைக்கப்பட்டு
மத்திய அரசின் செலவுகள்  சம்பம்தமான துறையின் பரிசீலனைக்கு
ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஓய்வூதிய மாற்றம்
01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை சம்பள மாற்றத்துடன் இணைக்காமல் அமலாக்க வேண்டும் என்பது சம்பந்தமாக MEMBER(SERVICES) அவர்களுடன் விவாதிக்கப்படும்.

நேரடி நியமன ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பங்களிப்பு உயர்த்தப்பட வேண்டும்
என்ற கோரிக்கை குறித்து  BSNL நிர்வாகமே முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.. 

ஆக, பேச்சு வார்த்தை நடைபெற்றிருக்கிறது என்பது மகிழ்ச்சி.

ஆனால் எந்த  ஒரு கோரிக்கைக்கும் உறுதியான, இறுதியான முடிவு உருவாக வில்லை என்பது திருப்தியற்ற நிலையே.

ஊழியர்கள் தங்கள் பணியை உரிய காலத்திற்குள்முடிக்க வேண்டும் என அறிவுரை நல்கும் நிர்வாகத் தலைமை தனது  பணியையும் உரிய காலத்திற்குள் முடித்து ஊழியர் நலன் காத்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவ்றா?



Thursday 1 November 2018


DOT செயலருடன் சந்திப்பு

தொலைத்தொடர்புத்துறையின் செயலரின் அழைப்பை ஏற்று  
02.11.2018 அன்று மாலை 5 மணிக்கு BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் தகைவர்கள் DOT செயலரைச்       சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் விளைவுகள் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.