NFTECHQ

Friday 8 November 2019


அன்பான வேண்டுகோள்

"விருப்ப" ஓய்வுத் திட்டத்துக்கான உத்தரவு வந்து விட்டது.

ஊழியர்கள் திட்டத்தை அறிந்து, புரிந்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து அவர்களின் "சொந்த" விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பைக்க வேண்டுகிறோம்.

"மாற்றல் வரும்"  "வேலைப்பளு கூடும்" என பல்வேறு விதமான மிரட்டலகளையும் தவறான தகவல்களையும், வதந்திகளையும் சிலர் பரப்பி வருகின்றனர்.

"முப்பதாயிரம் பேர் விண்ணப்பித்து விட்டார்கள்"
"நாற்பதாடிரம் பேர் விண்ணப்பித்து விட்டார்கள்
 உடனே விண்ணப்பித்து விடுங்கள். இல்லாவிடால் கிடைக்காது" என்று வடிகட்டிய பொய்களும் பரப்பப்பசடுகின்றன. இது போன்ற ஸ்கோர் கணக்க்கை நிர்கவாகமோ அரசோ சொன்னால் அதன் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.  பணியில் இருப்பவர்ளேஸ்கோர் போட்டால் அவர்கள் துரோகிகள்தானே.
மாவட்டச் சங்கம் அனைத்து விளக்கங்களோடும் விபரங்களைச் சொல்ல ஏற்[பாடுகளைச் செய்து வருகிறது. அது வரை சற்று பொறுமையாக இருக்க வேண்டுகிறோம். இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது.
மேலும் எப்போது வேண்டுமானாலும் மாவட்டத்தலைவர் அல்லது மாவட்டச் செயலரை தொடர்பு கொள்ளலாம். விளக்கம் கேட்கலாம்.
தயவு செய்து விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாக நாம் இருக்கக் கூடாது என்பது பணிவான வேண்டுகோள்.
விரும்பிச் செல்பவர்களுக்கு தடை போடும் நோக்கம் இல்லை. விளக்கக்களையும் விபரங்களையும் நமது மாவட்டச் சங்கம் மூலமாக அறிந்த  கொள்ள வேண்டுகிறோம். பிறகு  சுயமாகச் சிந்தித்து முடிவெடுத்துவிண்ணப்பிக்கலாம்.  
அதுவரை காத்திருங்கள். உறுதியாக தவறான வழிகாட்டுதலை நாம் நிச்சயம் தர மாட்டோம்.
தயவு செய்து நம்பிக்கையுடன் காத்திருங்க்கள்.

அச்சுறுத்தல், மிரட்டல்கள், பொய்கள், வதந்திகள் இவற்றிற்கு யாரும் இரையாக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.
அவசரம் வேண்டாம். இதுவே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment