NFTECHQ

Wednesday, 18 July 2018


மண்டேலா  100
ஜூலை 18
இனவெறிக்கொடுமைக்கு எதிராகப் போரிட்டு
இன்னல்கள் பல தாங்கி
இம்சைகள் பல ஏற்று
இருபத்தேழு ஆண்டுகள்
இருண்ட சிறைவாசம் அனுபவித்த
மகத்தான தலைவன்
நெல்சன் மண்டேலாவின்
நூறாவது பிறந்த தினம்..

Monday, 16 July 2018


துவக்கம்

ஊதிய மாற்றதுக்காண நிர்வாகம் மற்றும் ஊழியர்தரப்பு முதல் கூட்டம் 20.07.2018 அன்று நடைபெற உள்ளது.
நமது சங்கம் சார்பாக
தலைவர் இஸ்லாம்,
பொதுசெயலர் சந்தஸ்வர் சிங்
துணைப் பொதுசெயலர் சேஷ்சாத்திரி
ஆகிய மூவரும் உறுப்பினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.


தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

24-02-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய  கோரிக்கைகளில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற கோரி.
24.07.2018
25.07.2018
 26.07.2018
ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

Saturday, 14 July 2018


தலைவர்களின் தலைவர்
ஜூலை 15
காமராஜர்
பிறந்ததினம்

Sunday, 8 July 2018


ஜூலை 8

தோழர் ஜோதிபாசு பிறந்த தினம்.
இந்திய நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு.
அவர் அப்பதவியை ஏற்க அனுமதிக்கப்பட்டிருந்தால் நமது நாட்டில் சில அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்.


Saturday, 7 July 2018


தோழர் ஞானையா நினைவு தினம்

ஜூலை 8
தோழர் ஞானையா சிந்திப்பதை நிறுத்திய தினம்.
மிக்ச்சிறந்த தொழிற்சங்கத் தலைவர்,
தடைகளை உடைத்து போராடும் குணம் மிக்க போராளி,
மார்க்சிய ஞானத்தில் ஞானத்தந்தை என போற்றப்பட்டவர்.
ஜூலை 8
அவரது முதலாம் ஆண்டு நினைவுதினம்.

Thursday, 5 July 2018


சமத்துவம்?
சமத்துவம் என்பது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கூறுகளில் மிக முக்கியமான ஒன்று.

மூன்றாவது ஊதிய பேச்சுவார்த்தைக் குழுவில் NFTE சங்கத்திற்கு 2 உறுப்பினர்களும் BSNLEU  சங்கத்திற்கு  3  உறுப்பினர்களும் பங்க்கேற்பர் என அறிவிக்கப்பட்டது.

எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கை.

தற்போது NFTE சங்கத்திற்கு 3 உறுப்பினர்களும் BSNLEU  சங்கத்திற்கு  5  உறுப்பினர்களும் பங்க்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

AUA என்ன ஆயிற்று?
அவர்களையும் பேச்சு வார்த்தைக் குழுவில் இணைக்க வேண்டும் என்ற சிந்தனை ஏன் உதிக்கவில்லை?

அறிவும் அனுபவமும் யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல.

சமத்துவம் வாய்ப்பேச்சோடு சரி. நடைமுறையில்? நானே பெரியவன் என்னும் மனப்போக்கு.

Wednesday, 4 July 2018


இந்தியாவில் சீன வங்கி தொடக்கம்

பேங்க் ஆப் சீனா வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற மாதம் சீனாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது சீன அதிபர் க்ஷிஜின்பிங்கைச் சந்தித்தார். ஷாங்காய் கூட்டுறவு நிறுவன மாநாட்டுக்கு முன்பான இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரக் கூட்டுறவு, மக்களுக்கிடையேயான பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனுடன் பேங்க் ஆப் சீனா வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி 105 வருடப் பழமை வாய்ந்த இவ்வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி தற்போது வழங்கியுள்ளது.
பேங்க் ஆப் சீனா வங்கி தெற்கு ஆசியாவில் தனது முதல் கிளையைப் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் சென்ற ஆண்டு தொடங்கியது. ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள இவ்வங்கியின் சந்தை மூலதன மதிப்பு 158.6 பில்லியன் டாலர்களாகும். இந்தியாவில் சேவை வழங்கும் இரண்டாவது சீன வங்கி என்ற பெருமையைத் தனதாக்கவுள்ள இவ்வங்கி, சொத்து அடிப்படையில் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாகும். சீன வங்கியைப் போலவே, ஈரான், தென்கொரியா, மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 வங்கிகள் இந்தியாவில் கிளை தொடங்க விண்ணப்பித்துள்ளன.ஜூலை 4
விவேகானந்தர் நினைவு தினம்
வேலைவாய்ப்பு  

பெல் நிறுவனத்தில் பணி

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 86
பணியின் தன்மை: துணைப் பொறியாளர்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.40,000 – 1,40,000/-
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 11.07.2018
மேலும் விவரங்களுக்குhttp://bel-india.in/DocumentViews.aspx?fileName=86posts%20of%20DE%20FixedTenure%20advertisementforEM_SBU.pdfஎன்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Monday, 2 July 2018


மாநிலச்செயலர்கள் கூட்டம்
NFTE சங்க மாநிலச்செயலர்கள் கூட்டம் 29.06.2018 மற்றும் 30.06.2018 ஆகிய தேதிகளில் அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அவர்களின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

3வது ஊதியத்திருத்தக்குழுவில் NFTE சார்பாகத் தலைவர் இஸ்லாம் அகமது அவர்களும் பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும்
உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். மேலும் ஊதியக்குழுவில் NFTE சங்கத்திற்கு கூடுதல் உறுப்பினர்களை நிர்வாகத்திடம் கோருவது.

அடுத்த தேசிய செயற்குழுக்கூட்டம் ஹரித்துவாரில் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும்.

தேங்கிக்கிடக்கும் எண்ணற்ற ஊழியர் பிரச்சினைகள் தீர்விற்காக பலகட்டப்போராட்டங்களை நடத்துவது.

சம்பளத்தேதியை மாற்றி உத்திரவிட்ட BSNL நிர்வாகத்தின் மோசமான முடிவினை மாநிலச்செயலர்கள் கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு அந்த உத்திரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஊதியத்திருத்தம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட நமது சங்கத்தின் ஊதியக்குழு பரிசீலனைக்கூட்டம் விரைவில் நடத்தப்படும். ஊதியக்குழு சம்பந்தமாக அனைத்து சங்கங்களுடனும் விவாதங்கள் நடத்தப்படும்.

Sunday, 1 July 2018


இயக்கத்தை இயக்கும் இதயங்கள்

30.06.2018 அன்று தோழியர் கமலம் ATT அவர்களுக்கு அலுவலகத்தில் நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் மாலி, செல்வராஜன் அவர்களுடன் நானும் பங்கேற்றேன். அனைவரும் பாராட்ப்டுரை நல்கியபின் தோழியர் கமலம் ஆற்றிய ஏற்புரை இது.

"எனது கணவர் நோயுற்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்த பின்பும் தோழர்கள் மாலி, செல்வராஜன், ராஜமாணிக்கம் ஆகியோர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். எனக்கு ஆறுதல் கூறினர். அவர்கள் முயற்சியால் எனக்கு வேலையும் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை எனக்கு எல்லாமே தொழிற்சங்கம்தான். தொழிற்சங்கம்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. தொழிற்சங்கம் இல்லாதிருந்தால் எனக்கு இந்த வாழ்வு இல்லை. சந்தா, நன்கொடை ஆகியபற்றை மனநிறைவுடன் கொடுத்துவிடுவேன். எந்த போராட்டமாக இருந்தாலும் பங்கேற்றுள்ளேன். வேலைநிறுத்தம் செய்தால் சம்பளம் கிடைக்காது என்று சிலர் சொன்னார்கள். சமபளத்தைவிட தொழிற்சங்கம் தான் சொல்வதுதான் பெரிது என்பதாலும், இந்த சம்பளம் வாங்குவத்ற்கே தொழிற்சங்கம்தானே காரணம்  என்பதாலும்
வேலைந்றுத்தத்தில் பங்கேற்றேன். எல்லோருக்கும் நன்றி."

தோழியர் கமலம் போன்றவர்களின் இதயங்கள் கொண்டவர்களால்தான் இன்னமும் இந்த இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.