NFTECHQ

Thursday, 31 July 2014நலமுடன்  வாழ்க

1.திரு R.சாமிநாதன் DGM
2.தோழியர் G.பெர்சி தாராபாய் SDE
3.தோழர் P.சென்னியப்பன் STSO
4.தோழர் K.கிருஷ்ணசாமி TM
5. தோழர் K.பழனிசாமி SSSO
6. தோழர் M.ராஜேந்திரன் SSSO
7. தோழர் P.சுப்ரமணியன் STSO
8. தோழர் K.V.வெங்கடேசன் TM

ஆகியோர் இன்று 31.07.2014 பணி நிறைவு பெறுகின்றனர். அவர்களது பணி நிறைவுக் காலம் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு அமைய மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்

Wednesday, 30 July 2014

இந்தியாவில் எப்போது?உலகெங்கும் பெரும்பாலான அரசுகள் முதலாளிகள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும்போது, தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருக்கிறது ஜெர்மனி. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், வரும் ஜனவரி 1 முதல் மணிக்கு 8.5 யூரோக்களாக (சுமார் ரூ.700) இருக்கும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை செய்தால் சுமார் ரூ.5,600. ஒரு மாத ஊதியம் சுமார் ரூ.1.5 லட்சம்.
ஜெர்மனி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு.
பிரிட்டனிலும் 1998 முதல், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமலில் இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களிலும் சமூகநலத் திட்டங்களிலும் ஜனநாயக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியான பிரிட்டனும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துவது அவசியம் என்று கருதுகிறது. பிரான்ஸும் ஐரோப்பா முழுமைக்கும் பொதுவான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பதை இத்தாலி, நார்வே, சுவீடன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிலும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அதிபர் ஒபாமா முயற்சி மேற்கொண்டார். ஆனால், நாடாளுமன்றம் அதைத் தடுத்துவிட்டது.
வளர்ந்த நாடுகளிலாவது தொழிற்சங்கங்கள் வலிமையுடன் உள்ளன. அந்த நாடுகளிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊதிய உயர்வின் அவசியத்தை உணர்ந்துள்ளன. வளரும் நாடுகளில் தொழிற்சங்கங்கள் வலிமையாக இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாமல், வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கின்றனர். சட்டங்கள் பல இருந்தும் அவற்றை முறையாக அமல்படுத்தி, தொழிலாளர் நலனைக் காப்பதில் வளரும் நாடுகளின் அரசுகள் முயற்சி எடுப்பதில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதால் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அரசுகளும், செல்வாக்குள்ள முதலாளிகளும் ஏற்றுக்கொள்வதேயில்லை. இதனால், உற்பத்திச் செலவு கூடும், லாபம் குறையும் என்றே வாதிடுகிறார்கள். அது உண்மையல்ல. தொழிலாளர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டும் இல்லை, அவர்கள்தான் பிரதானமான நுகர்வோர்கள். தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் முழுக்க மீண்டும் செலவிடப்பட்டு, பொருளாதாரத்தை வளர்ச்சியடையவே செய்கிறது. அவர்கள் செய்யக்கூடிய முதலீடும் சமூகத்துக்கே பயன்படுகிறது.
அரசுப் பணிகள், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களைவிட அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட தொழிலாளர்களை வெகு காலமாகப் புறக்கணித்துக்கொண்டிருக்க முடியாது; சமூகத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஏற்கெனவே காணப்படும் பிளவு மேலும் மோசமாகிவிடும். ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதுதான் வளர்ச்சியின் முதல் படியாக இருக்குமே தவிர, சந்தையையும் பொருளாதாரத்தையும் வரம்பில்லாமல் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதல்ல என்பதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும்.

35000 ரூபாய்01.01.2004 முதல் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஓய்வூதியம்  கிடையாது.
ஏழை எளிய மக்களின் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய். 1000.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய ஓய்வூதியம் ரூபாய் 20000. இதை 75 சதம் உயர்த்துவதற்கான முடிவை மத்திய அமைச்சரவை எடுக்க உள்ளதாம். இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூபாய் 35000 ஆக உயரும்.

Monday, 28 July 2014

ரம்ஜான் வாழ்த்துக்கள்
மாவட்டச் சங்கத்தின்
இதயம் நிறைந்த
ரம்ஜான் வாழ்த்துக்கள்

சிறக்கட்டும்அந்தியூர் கிளையின் மாநாடு 27.07.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட AITUC சங்க்த்தின் செயலர் தோழர் செல்வராஜன், மாநிலத் துணைச்செயலர் தோழர் யாசின், மாவட்டச் செயலர் தோழர் பழனிவேல் தோழர் பங்காரு மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள்  பங்க்கேற்று சிறப்பித்தனர்.
தோழர் v.நாகராஜன் ™) தோழர் S.சந்தானம்,
தோழர் S.A.முருகவேல் TTA  ஆகியோர் தலைவர், செயலர், பொருளாளர் பொறுப்புகளுக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டன்ர்.
அனுபபவம் மிக்க தோழர் M.P.ராமலிங்க்கம் உதவிச் செயலரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தோழர் நல்லுசாமி மாநட்டுக்கான ஏற்பாடுகளச் சிறப்புடன் செய்திருந்தார். பணி ஓய்வு பெற்ற முன்னாள கிளைச் செயலர் தோழர் வெங்க்கடேசன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
அந்தியூர் கிளையின் செயல்பாடு சிறக்க மாவட்டச் சங்க்கத்தின் வாழ்த்துக்கள்

Saturday, 26 July 2014

தண்ணீருக்கு வெற்றி24.07.2014 அன்று பவானி தொலைபெசி நிலையத்திலும் ஊழியர் குடியிருப்பிலும் தண்ணீர் வசதி கோரி  பவானி கிளைத் தோழர்களும் தோழியர்களும்  குடியிருப்பில் உள்ள மகளிரும் திரண்டிருக்க பவானி கிளைச் செயலர் தோழர் நாகராஜன் மற்றும் மாவட்ட உதவிச் செயல்ர் மெளனகுருசாமியும் காலை 10 மணிக்கு காலவரையற்ற பட்டினிப் போரைத் துவக்கினர். கோட்டப் பொறியாளருடன் அவரது அறையில் அனைவரும் திரண்டு பிரச்னை  குறித்து விவாதிக்கப்பட்டது. துணைப்பொது மேலாளர் (DGM EB) திரு சாமிதாஸ் அவர்கள் தொடர்பு கொண்டு தானும்
துணைப்பொது மேலாளர் (DGM CFA) திரு ராமச்சந்திரன் அவர்களும் மதியம் ஒரு மணிக்கு பவானி வருவதாகத் தெரிவித்தார்
சொன்னபடி
அவர்கள் இருவரும் பவானி  வருகை தந்தனர். தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் 25.07.2014 அன்று துவங்கும் என்று பட்டினிப் போர் நடைபெற்ற இடத்திற்கே வருகை தந்து வாக்களித்தனர். பட்டினிப்போரை முடித்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
நகராட்சி குடிநீர் குழாய்களில் உள்ள பழுதுகளைச் சரி செய்ய  நகராட்சி அதிகாரி ஒருவரும் ஊழியர்களும் வந்தனர். பழுதுகளை ஓரிரு நாட்களில் சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.
நமது அதிகாரிகள் தந்த உறுதிமொழி நம்பிக்கை தரும் வகையில் அமைந்ததால் பட்டினிப் போர் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போராடிய பவானி கிளையின் தோழர்களுக்கு பாராட்டுக்கள்.
ஊழியர் குடியிருப்பிலிருந்து பங்கேற்ற தோழியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வுக்கு உதவிய துணைப் பொதுமேலாளர்கள் இருவருக்கும் நமது  நன்றி.
பிரச்சினை தீர்வில் அக்கறை காட்டிய கோட்டப் பொறியாளர்,   துணைக் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கும் நன்றி.
உறுதிமொழியின் அடிப்படையில் தண்ணீர்ப் பிரச்னை தீர்வுக்கான பணிகள் துவங்கி  நடைபெற்று வருகின்றன.

Friday, 25 July 2014

போனசில் நிர்வாகத்தின் அர்த்தமற்ற போக்குஉற்பத்தியின் அடிப்படையில் போனஸ்
பெற்ற வரலாறு அறிவோம்
அது இலாபத்தின் அடிப்படையில் ஊக்க ஊதியமாக (இன்செண்டிவ்)
மாற்றப்பட்ட வரலாறும் அறிவோம்
இதனால் போனஸ் என்பதையும் இழந்தோம்.
வரலாறு கற்றுக் கொடுத்த பாடத்தின் அடி சிந்திக்க வைத்த வரலாறும் அறிவோம்.
மீண்டும் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்பது நமது கோரிக்கையாக எழுந்துள்ளது.
23.07.2014 அன்று இது குறித்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பரிவு அடிப்படையில் இறந்தோரின் வாரிசுகக்கு மதிப்பெண் போடுவதைப் போல் போனசுக்கும் மார்க் போடும் திட்டத்தை நிர்வாகம் கூறியுள்ளது.
கேபிள் இல்லாமல்,ட்ராப் ஒயர் இல்லாமல், இன்ஸ்ட்ரூமெண்ட் இல்லாமல் தொலைபேசி இணைப்பு கொடுப்பதைப் பற்றி நிர்வாகம் சொல்லிக் கொடுக்குமா?
இப்படி ஆரம்பித்து பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கலாம்.
நமது சங்கம் உற்பத்தியின் அடிப்படையில் போனஸ்
என்ற அடிப்படையையே உறுதியாக வலியுறுத்தியுள்ளது. மற்ற சங்கங்களின் நிலைபாடும் இதுவே.
இந்த ஆண்டு போனஸ் கிடைக்கும் என்ற ஊழியர்களின் கனவு நனவாகும் என நம்புகிறோம். அத்திசை வழியில் னமது மத்திய சங்கம் செயல்படும்..

Wednesday, 23 July 2014

அலைக்கற்றை பகிர்வுசெல்போன் நிறுவனங்கள் அலைக்கற்றை பகிர்வு: டிராய் பரிந்துரை

செல்போன் நிறுவனங்கள் அலைக்கற்றைகளை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து வகையான ஏர்வேவ்-களையும் செல்போன் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. ரூ. 1,658 கோடிக்கு ஏலம் விடப்பட்ட முந்தைய அலைக்கற்றைகளையும் இவ்விதம் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அனைத்து அலைக்கற்றைகள் அதாவது 800/900/1800/ 2100/2300/2500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை இவ்விதம் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அலைக்கற்றை பகிர்வு குறித்த தனது பரிந்துரையில் டிராய் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இப்போது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 800 மெகா ஹெர்ட்ஸ் (சிடிஎம்ஏ), 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் (3ஜி), 2300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் (4ஜி) ஆகிய அலைக் கற்றைகள் தொலைத் தொடர்பு சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டுக்கு முன்பு வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் அலைக்கற்றை நிர்வாகத்தில் வர்த்தகம், பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றுக்கு அனுமதிக்கும் வகையில் அரசு கொள்கை வகுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த முறை நடைபெற்ற அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத்தில், முதல் முறையாக ஏலத்தில் போன லைசென்ஸ் விலையைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதல் விலையில் இப்போது ஏலம் போனது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பரஸ்பரம் செல்போன் கோபுரங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் அலைக்கற்றைகளையும் பகிர்ந்து கொள்வர். இதனால் வாடிக்கை யாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவை கிடைக்கும். புதிய நடைமுறையின்படி லைசென்ஸ் பெற்றுள்ள இரு நிறுவனங்கள் நிர்வாக ரீதியில் அவற்றுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.
புதிய லைசென்ஸ் கொள்கையின்படி 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவ்விதம் பகிர்ந்து கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்தது. இவ்விதம் அலைக் கற்றைகளை பகிர்ந்து கொள்ள முன்வரும் நிறுவனங்கள் ஒருமுறை செலுத்தும் கட்டணமாக ரூ. 30 ஆயிரம் கோடியை செலுத்த வேண்டும் என்று தெரிவித் திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் சேவை நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
ஒருமுறை கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ள அரசு அனுமதித்தால் இதன் மூலம் ஏற்கெனவே சேவை அளித்து வரும் ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ் ஆகியன பயன் பெறுவதோடு கட்டணத்தையும் குறைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அதிகபட்சமாக இரண்டு நிறுவனங்கள் மட்டும் இவ்விதம் அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ளலாம் என்ற கட்டுப்பாட்டை டிராய் விதித்துள்ளது. 3-ஜி அலைக்கற்றையை பகிர்ந்து கொள்வ தற்கும் அனுமதிக்கலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும் 3 ஜி லைசென்ஸ் வைத்துள்ள ஒரு நிறுவனம் இதே போன்று 3 ஜி லைசென்ஸ் பெற்ற இன்னொரு நிறுவனத்துடன்தான் அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மாறாக 4 ஜி அலைக்கற்றை வைத்துள்ள நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது அலைக்கற்றை பகிர்வு குறித்து லைசென்ஸ் வழங்கிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராய் பரிந்துரையை தொலைத் தொடர்பு அமைச்சகம் (டிஓடி) தீவிரமாக ஆராய்ந்து அதன்பிறகு தொலைத் தொடர்பு ஆணையத்தின் அமைச்சக குழுவின் முன் சமர்ப்பிக்கும்.

Monday, 21 July 2014

தீர்வுக்கான போராட்டம்பவானி தொலைபேசி நிலையத்திலும் ஊழியர் குடியிருப்பிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாயினர்.

தலமட்டத்தில் கிளைச் சங்கம் தீர்வுக்காக வேண்டியது. மாவட்டச் சங்கமும்  மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டியது. நமது வேண்டுதல்கள் உரிய தீர்வைத் தரவில்லை.

ரெளத்திரம் பழகு என்ற பாரதியின் வழியில் இனியும் பொறுப்பதில்லை என நமது பவானி கிளைச் சங்கம் போராட்ட அறிவிப்பு கொடுத்துள்ளது.
22.07.2014 அன்று ஆர்ப்பாட்டம்
24.07.2014 முதல் காலவரையற்ற பட்டினிப்போர் என்ற காந்தியடிகள் வழியில் ஒரு அறப் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இது விளம்பரம் தேடும் போராட்டம் என்பவர்கள்
தண்ணீர் இல்லாமல் வாழ முடியும் என்பதைக் கற்றுக் கொடுத்து அப்படி ஒரு வாழ்வை சில மணி நேரங்கள் வாழ்ந்து காட்டினால் இப்போராட்டத்தை  உடனடியாக விலக்கிக் கொள்ளலாம்.

சிறப்பு ரீசார்ஜ்ரூபாய் 111 க்கு ரீசார்ஜ் செய்தால் 90 ரூபாய்க்குப் பேசலாம். 20 நாட்களுக்குள் பிஎஸ்என்எல் எண்களுக்கு 70 நிமிடங்கள் இலவசமாகப் பேசலாம்.


ரூபாய் 222 க்கு ரீசார்ஜ் செய்தால் 190 ரூபாய்க்குப் பேசலாம். 40 நாட்களுக்குள் பிஎஸ்என்எல் எண்களுக்கு 110 நிமிடங்கள் இலவசமாகப் பேசலாம்.

ரூபாய் 333 க்கு ரீசார்ஜ் செய்தால் 280 ரூபாய்க்குப் பேசலாம். 60 நாட்களுக்குள் பிஎஸ்என்எல் எண்களுக்கு 180 நிமிடங்கள் இலவசமாகப் பேசலாம்.

Sunday, 20 July 2014

கவர்ச்சிகரமான எண்களும் அதற்குரிய கட்டணங்களும்786 என முடியும் எண்களுக்கு ரூபாய் 1348

000 என முடியும் எண்களுக்கு ரூபாய் 2247


111-222-333-444-555-666-777-888-999 என முடியும் எண்களுக்கு ரூபாய் 1124

111-222-333-444-555-666-777-888-999 என முடியும் எண்களுக்கு ரூபாய் 1124

இது ந்மது தமிழ் மாநில நிர்வாகத்தின் உத்தரவு


Saturday, 19 July 2014

அந்தியூர் கிளை மாநாடு27.07.2014 அன்று அந்தியூர் கிளை மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு சிறக்க மாவட்டச் சங்கத்தின்  வாழ்த்துக்கள்.

Thursday, 17 July 2014

கருப்புப் பணம்
ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருவாய்

கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

வரி ஏய்ப்பைத் தடுக்க வருமான வரித்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இது தெரியவந்துள்ளது.

தனிநபர்கள், வர்த்தக மையங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற நிதிநிறுவனங்கள் மீது வருமான வரித்துறையின கடந்த நிதியாண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பெரும் தொகை கணக்கில் காட்டப்படாத வருவாயாக ஈட்டப்பட்டுள்ள விவரம் தெரிய வந்தது.

2012-13
நிதியாண்டில் மேற்கொண்ட நடவடிக்க்கைகளின் முடிவில் வந்த தொகையுடன் இப்போது வந்தடைந்துள்ள தொகை இரு மடங்கு அதிகம் என்கின்றனர் வருமான வரித் துறையினர்.

வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் மற்றும் சர்வேக்கள் மூலம் கணக்கில் காட்டப்படாத வருவாய் தொகை ரூ. 1,01,181 கோடி.

இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு வருமான வரித் துறையினர் பிறப்பித்த வாரண்ட்கள் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்துள்ளதாக அந்தத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிnநாட்டிலிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்பது தற்போதைய அரசின் தேர்தல் வாக்குறுதி.
உள்நாட்டு கருப்புப் பணம் உள்நாட்டு கஜானாவுக்கு வருமா?

60
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தும் எண்ணமோ திட்டமோ இல்லை என மத்திய அரசு 16.07.2014 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Wednesday, 16 July 2014

அபராதம்முறையான விசாரணை இல்லாமல், மொபைல் போன் இணைப்புகளை வழங்கிய, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளில், 2,923 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கால கட்டத்தில் வழங்கப்பட்ட, மொபைல் போன் இணைப்புகளில், 1.92 லட்சம் போலியானவை அல்லது போலி ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டவை. இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Click Here

அஞ்சல் அட்டை விற்பனையில் 7 ரூபாய் நஷ்டம்''பாரம்பரிய தகவல் தொடர்பு சாதனமான அஞ்சல் அட்டை விற்பனை, படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு அஞ்சல் அட்டை விற்பனையில், அரசுக்கு, 7 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது,'' என, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
லோக்சபாவில், நேற்று அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், அஞ்சல் அட்டை விற்பனை படிப்படியாக குறைந்துள்ளது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக, மொபைல் போன்கள் மற்றும் மின் அஞ்சல்களின் பயன்பாடு அதிகரித்ததே, அஞ்சல் அட்டைகள் விற்பனை குறைய காரணம். அஞ்சல் அட்டை ஒன்று, 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இதனால், 2012 - 13ம் ஆண்டில், அரசுக்கு, அட்டை ஒன்றுக்கு, 6.68 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அந்த ஆண்டில், 9.56 கோடி, அஞ்சல் அட்டைகள் அச்சிட்டதன் மூலம், மத்திய அரசுக்கு, 90.47 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2013 - 14ம் ஆண்டில், 10.44 கோடி அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டன. நடப்பு நிதியாண்டில், 8.13 கோடி அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டு உள்ளன.

Saturday, 12 July 2014

தண்ணீர் தண்ணீர்இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் படத்தின் தலைப்பு இது.

பவானியில் காவிரி நதிக் கரையோரத்தில் நமது தொலைபேசி நிலையத்திலும் ஊழியர்கள் குடியிருப்பில் ஒரு சொட்டு தண்ணிருக்கும் வழியின்றித் தவிக்கிண்றனர். இது குறித்து நமது கிளைச் சங்கம் கோட்ட அதிகாரியிடம் முறையாக விவாதித்தது. இதற்கான செலவு தனது நிதி வரம்புக்குள் இல்லாததால் அதற்கான கோப்புகளை மேலதிகாரிக்கு அனுப்பியுள்ளார். நமது மாவட்டச் சங்கமும்  இது குறித்து பொது மேலாளரிடம் விவாதித்தது. உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

(AGM PLANNING)  கோப்புகளை சிவில் பகுதிக்கு அனுப்பியுள்ளார்.

பவானியில் ஊழியர்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். இந்த கோபம் நியாயமானதே. நியாயமான கோபம் சூழ்நிலையைச் சூடாக்கும். சூழ்நிலை சூடானால் விளைவுகள் கடுமையாவது இயல்பே.

எனினும் நமது அதிகாரிகள் பிரச்னையின் கடுமையான தன்மையை உணர்ந்து விரைவில் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை மாவட்டச் சங்கத்துக்கு உள்ளது.


Friday, 11 July 2014

சாமான்யனின் கேள்வி11.07.2014 இன்று காலை ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே ப்ட்ஜெட் பற்றிய செய்திகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அவரவர் பார்வையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது ஒரு கட்டிடத் தொழிலாளி என்னைப் போன்றவர்களுக்கு ஏதாவது இருக்கா என்று கேட்டார். யாரும் அதற்கு பதில் சொல்லவில்லை. அவர் சொன்னார். கட்டிடம்  இடிந்து நான் செத்தால் கூட எதுவும் கிடைக்காது. ஏன்னா என் மனைவி ஏற்கெனவே
வைத்தியம் பாக்க வசதியில்லாத்தால்
கேன்சரில் செத்துப் போயிட்டா.
என்னோட மகனூம் ஒரு விபத்தில் போய்ச் சேர்ந்துட்டான். நாங்கல்ல்லம் ஓட்டைப் போட்டுவிட்டு வெந்தும் வேகாம சாப்பிட்டுட்டு விதி வந்தா சாக வேண்டும். எந்த கவர்ன்மெண்ட் வந்தாலும் எங்க தலையெழுத்தை மாத்த முடியாது என்று சொல்லி விட்டு டீ டம்ளரை வைத்து விட்டு  டீக்கான காசைக் கொடுத்து விட்டு ஒரு கட்டு பீடியை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

Thursday, 10 July 2014

வருமான வரி80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பஞ்சப்படி உயர்கிறது
01/07/2014 முதல்
2.9 சதவிகிதம்
பஞ்சப்படி
உயர்வுக்கு
BSNL  உத்திரவு வெளியிடடுள்ளது.

Wednesday, 9 July 2014

பாரபட்சம்அனைத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று BSNL ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு ப்ரிபெய்டு சிம்கார்டு தர நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

மாதம் தோறும் முதல் தேதியில் 200 ரூபாய் டாப் அப் செய்யப்படும். இது இலவசமே.
CUG வசதி SSA அளவில் மட்டுமே தரப்ப்படும்.
STD வசதி இல்லை.
மற்ற நிறுவனங்களின் தொலைபேசிகளுக்குப் பேசும் வசதி கிடையாது.
சிம் கார்டுக்கான விலையை ஊழியர்கள் செலுத்த வேண்டும்.
இது வரை ஊழியர்களுக்கு விலையில்லா சிம்கார்டு தரப்பட்டது. தற்போது அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிறது நிர்வாகம்.
மேலும் அதிகாரிகளுக்கு இலவசமாகத் தரப்படும் சிம்கார்டுகளைப் பயன்படுத்த செல்போன் வாங்க ரூபாய் 2000,3000,4000 என பதவிகளுக்கேற்ப நிர்வாகம் தருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்போன் வாங்க நிர்வாகம் பணம் தருகிறது.
ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடையாது.
ஒரு காலத்தில் அனைத்தையுமே விமர்சனம் செய்தவர்கள் இப்படிப்பட்ட பாரபட்சங்களை நிர்வாகம் செய்வதற்கு அவர்களே துணை போனது சரியா?

Monday, 7 July 2014

பட்ஜெட் ரகசியமாக தயாரிக்கப்படுவது ஏன்?ஒவ்வொரு வருடமும் மிக ரகசியமாகவே பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இந்த வருடம் கூட, ஜூன் மாதம் 27 முதல் இந்த ரகசிய ஏற்பாடு துவங்கியது. நிதி அமைச்சகத்தில் உள்ள அனைவருக்கும் அல்வாகொடுத்து நிதி அமைச்சர் துவங்கிவைத்தார். நம்ம ஊர்ல அல்வா கொடுக்கறதுன்னா வேற விஷயம், அங்கு அனைத்து நல்ல காரியத்தையும் ஸ்வீட்டுடன் ஆரம்பிக்கும் பழக்கம், ஸ்வீட் எடு கொண்டாடு என்பது போல.
ஏன் ரகசியம்?
பட்ஜெட்டில் பல வரி விகிதங்கள் மாற்றப்படும், புதிய வரிகள் போடப்படும், வரி அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும். அதேபோல் புதிய செலவு திட்டங்கள் வரும், நடைமுறையில் உள்ள திட்டங்கள் நிறுத்தப்படலாம், அல்லது அவற்றிற்கு கூடுதல் தொகை ஒதுக்கலாம். இவை எல்லாம் ஒவ்வொருவரையும் வெவ்வேறாக பாதிக்கும் என்பதால், இவை பற்றி பாராளுமன்றத்திற்கு மட்டுமே முதலில் தெரியப்படுத்தவேண்டும். அதன் பிறகு, அங்கு நமது உறுப்பினர்கள் விவாதம் செய்யும்போது, அதற்கு ஏதுவாக நமது சிந்தனைகளை ஊடகங்கள் மூலமாக, அல்லது நேரடி கடிதம் மூலமாக வைக்கலாம். குறிப்பாக வரி திருத்தங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு வரி ஏய்ப்பில் சிலர் ஈடுபடலாம், அல்லது அந்த திருத்தங்கள் நாடாளுமன்றதிற்கு வருவதையே தடுக்க முயற்சிக்கலாம் என்ற நோக்கில் பட்ஜெட் இரசியமாக தயாரிக்கப்படுகிறது.
பட்ஜெட் கெடுபிடி
நார்த் பிளாக்’ (north block) என்ற கட்டிடத்தில் நிதி அமைச்சகம் இயங்குகிறது. இதில் உள்ள அடித்தளத்தில் பட்ஜெட், கூடுதல் அட்டவணைகளும் அச்சிடப்படுகின்றன. பட்ஜெட் உரை நாளன்றுதான் காலையில் அச்சிடப்பட்ட பட்ஜெட் உரை நாடாளுமன்றத்திற்கு எடுத்துசெல்லப்படும்.
இதற்காக, 15 நாட்களுக்கு நிதி அமைச்சகத்தின் அலுவலர்கள் எவரும் (கூடுதல் செயலர் வரை) நிதி அமைச்சகத்தை விட்டு வெளியே வரமுடியாது. நிதி அமைச்சக ஊழியர்கள் மட்டுமல்லாது, சட்டம், செய்தி உள்ளிட்ட பிற துறை அலுவலர்கள் சிலரும் நிதி அமைச்சகத்தில் இந்த வேலையில் இருப்பார்கள், அவர்களும் வெளியே வரமுடியாது. உண்பது, உறங்குவது, அலுவக நடவடிக்கை செய்வது எல்லாமே அலுவலகத்தில்தான். இவர்கள் யாவரும் கைபேசி கூட எடுத்து செல்லமுடியாது. இவர்களுக்கு உணவு முதல் எல்லாமே அரசு செலவில் அளிக்கப்படும்; கூடுதலாக ஊக்கத்தொகையும் தரப்படும் (சுமார் ஒரு மாத சம்பளம்). பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் வாசித்த பிறகே இவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வருவார்கள்.
நார்த் பிளாக்கில் எல்லா இடங்களிலும் கைபேசி அலைவரிசையை முறியடிக்கும் மின்னணு சாதனங்கள் வைக்கப்படும். எனவே, வெளியிருந்து எந்த கைபேசி அழைப்பையும் நிதி அமைச்சகத்தில் உள்ளவர்கள் எடுக்க முடியாது. அமைச்சகத்தில் உள்ள தரைவழி தொலைபேசிகள் மிக கவனமாக கண்காணிக்கப்படும். இணையதளம் மூலமாக பெறப்படும் மின்னஞ்சல்களும் நிறுத்தப்படும். முக்கிய கணினிகள் தேசிய செய்தி தொடர்பு மையத்தில் (National Informatics Centre) இருந்து துண்டிக்கப்படும்.
எஃகு கதவுகளும், X-ரே ஸ்கேனர்களும் எல்லா வழிகளிலும் இருக்கும். எனவே அமைச்சகத்தின் உள்ளே செல்லும் நிதி அமைச்சர் முதல் அனைவரும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் தாண்டி செல்லவேண்டும். இதற்காக பெரிய அளவில் காவல்துறை அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
பாதுகாப்பு சேவை சரியாக உள்ளதா என்பதும் அவ்வப்போது சோதிக்கப்படும். சிலரை பாதுகாப்பு வளையத்தில் ஊடுருவச் செய்வது இந்த சோதனை நடத்தப்படும்.
பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும் ஒரு குறிப்பிட்ட செயலாளருக்குத் தெரிந்தாலும், பட்ஜெட்டின் மொத்த வடிவம் கடைசிவரை நிதி அமைச்சர், செயலாளருக்கு மட்டுமே தெரியும்.
பட்ஜெட் ரகசியங்கள் வெளிவரா திருப்பது மிக முக்கியம். அமைச்சர்கள் எடுக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்குஉண்மையாக இருப்பது இவ்வாறான ரகசியங்களை பாதுகாப்பதில் உள்ளது.