NFTECHQ

Friday, 30 January 2015

வாழும் எம்மான்

சனவரி 25, 1948 அன்று காந்தியடிகள் எழுதிய கடிதத்தில் இடம் பெற்ற வரிகள்
"நான் ராமனின் சேவகன். அவன் விரும்புகிறவரை அவனுக்கான பணியை நிறைவேற்றுவேன். உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு மரணத்தை அவன் எனக்கு அருளுவானானால், நான் எனது வாழ்க்கை லட்சியத்தில் வெற்றி பெற்றவனாவேன்.
நான் அவற்றை மனப்பூர்வமான முறையில் பின் தொடர்ந்திருந்தால், கடவுளை சாட்சியாகக் கொண்டு நான் செயல்பட்டிருந்தால் அத்தகைய மரணத்தைக் கட்டாயம் எனக்குக் கடவுள் அருள்வான்.
யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால், அந்தக் கொலையாளியின் மீது எத்தகைய கோபமும் எனக்கு ஏற்படக் கூடாது. நான் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே மரணமடைய வேண்டும். எனது இந்த விருப்பத்தை பிரார்த்தனைக் கூட்டத்தில் நான் வெளிப்படுத்தினேன்'.
சனவரி 29, 1948 வியாழக்கிழமை இரவு 9.15 மணிக்கு படுக்கைக்குச் செல்லுவதற்கு முன்னர் உருது மொழியில் அமைந்த இரு வரிப் பாடல் ஒன்றை மனு காந்தியிடம் காந்திஜி மேற்கோள் காட்டினார். அது "உலகம் என்ற தோட்டத்தில் வசந்த காலம் சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கிறது. அந்த அழகிய காட்சியைச் சிறிது நேரம் கண் திறந்து பார்த்திடுக'.

காந்தியடிகளைக் கொன்ற கொலைகாரன் கோட்சேவுக்குக் கோவில்கள் கட்டுவோம் என்று ராம பகதர்கள் எக்காளமிடுகின்றனர். ராமனின் பெயரைச் சொல்லும் அரசும் கண்டிக்கக்த் துணிவின்றி வெடிக்கை பார்க்கிறது.

காந்தியை ஒரு முறை கொன்றது போதும். தினமும் கொலை செய்ய வேண்டாம்.

Thursday, 29 January 2015

கிரேக்கத்தை மீட்பாரா சிப்ராஸ்?தீவிர இடதுசாரிக் கட்சியான சிரீஸா கட்சி
கிரேக்க நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
மாற்றத்தின் காற்று வீசுகிறது கிரேக்கத்தில்! கிரேக்க நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிரீஸா கட்சியின் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் பிரதம மந்திரியாகப் பதவியேற்றிருக்கிறார்.
பொருளாதார வீழ்ச்சியால் தள்ளாடிக்கொண்டிருந்த கிரேக்கத்தில், மாற்றம் வேண்டும் என்று அந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
உலகின் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இருக்கும் கிரேக்கத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். தொழிலாளர்களில் 25% பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சியால் கிரேக்கம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் நூற்றுக் கணக்கில் சுகாதார மையங்கள், சமூக உணவுக் கூடங்கள், கல்வி மையங்கள், சட்ட உதவி மையங்கள் அரசால் திறக்கப் பட்டுள்ளன. கிரேக்கம் கிட்டத்தட்ட முடங்கிப்போயிருக்கிறது. இந்தச் சூழலின் வெளிப்பாடாகத்தான் கிரேக்கத்தில் உள்ள சாதாரணக் கட்சிகளுள் ஒன்றான சிரீஸா கட்சி 149 தொகுதிகளில் பெற்ற வெற்றியைக் குறிப்பிட வேண்டும். நாடாளுமன்றத்தின் மொத்தத் தொகுதிகள் 300. இதில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் யாருடைய தயவும் இல்லாமல் சிரீஸா கட்சி ஆட்சிக்கு வந்திருக்கலாம். ஆனால், தீவிர இடதுசாரிக் கட்சியான சிரீஸா கட்சி இப்போது சுதந்திர கிரேக்கர்கள் என்ற வலதுசாரிக் கட்சியுடன் கூட்டணி அரசு அமைத்திருப்பதுதான் நகைமுரண். சுதந்திர கிரேக்கர்கள் கட்சிக்கு 13 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. கடன் பிரச்சினையைக் குறித்த கொள்கை மட்டுமே இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான ஒற்றுமை.
கிரேக்கம் இன்றிருக்கும் நிலையில் கடன் சுமைகளை உதறிவிட முடியாது. கடன் கொடுத்த நாடுகள் அனைத்தும் கடனைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்று புதிய பிரதமர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதை ஏற்க முடியாது என்று கடன் கொடுத்த நாடுகள் மறுத்துவிட்டன. சர்வதேச அரங்கில் இப்படியொரு கோரிக்கையை வைப்பதற்கே துணிச்சல் வேண்டும். 40 வயதில் பிரதமராகியிருக்கும் சிப்ராஸ், இயல்பாகவே துடிப்புமிக்கவராக இருக்கிறார். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அவருடைய பிரச்சாரம் மக்களிடையே நன்கு எடுபட்டது. ஆனால், நாட்டின் வருவாயைப் பெருக்கினால்தான் கடன் சுமையைக் குறைக்க முடியும். செலவுக்கே கடன் வாங்கினால்தான் முடியும் என்ற நிலையில், எந்த உத்தியை அவர் கையாளுவார் என்பதைப் பிற நாடுகளும் ஆர்வமாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றன.
ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல்தான் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களின் சூத்ரதாரி. கிரேக்கத்தின் புதிய பிரதமரின் முதல் வேண்டுகோளான கடன் தள்ளுபடியை அவர் நிராகரித்துவிட்டார். ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு அளித்த 240 பில்லியன் ஈரோ டாலர்கள் கடனுதவியால்தான் கிரேக்கப் பொருளாதாரம் சீர்குலையாமல் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. கடன் தள்ளுபடிதான் சிக்கன நடவடிக்கையிலிருந்து மீட்க ஒரே வழியா, அல்லது கிரேக்கம் மறுபடியும் பழைய பாதையிலேயே பயணிக்குமா என்பது போகப்போகத் தெரியும்.
எதிரெதிர் துருவங்களின் இந்தக் கூட்டணி பிளவுபட்டால், புதிய அரசு கவிழ்ந்துவிடும். ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் கிரேக்கத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குப் போய்விடும்.
கிரேக்கத்தின் வீழ்ச்சி என்பது உலகமயமாதல் என்ற சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும் உலக நாடுகளுக்கு அது மோசமான செய்தியாக அமைந்துவிடும். கிரேக்கத்தை மீட்பாரா சிப்ராஸ்?

Wednesday, 28 January 2015

பயன் தரும் நல்ல முடிவுநாம் ஒரு கோரிக்கையை நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். உதான்
என்ற குழுவில் பணிபுரியும் ஊழியர்களை எக்ஸ்டர்னல் பணிக்கு மாற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கை. ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், சேவையின் மேம்பாட்டுக்கும் இது உதவும் என வலியுறுத்தினோம்.
இது ஏற்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 14 தோழர்களின் பணி எக்ஸ்டர்னல் பகுதிக்கு பயன்படும்.
இந்த முடிவை எடுத்து உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம் பாராட்டுக்குரியது.

அணுவைத் துளைத்து ஓர் ஒப்பந்தம்அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் நடத்திய முதல் பேச்சுவார்த்தையிலேயே, அணுஉலை ஒப்பந்தங்களில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்துள்ளது. எத்தகையத் தீர்வு என்பது குறித்து இரு நாடுகளுமே விளக்க முற்படவில்லை. இருப்பினும், அணுஉலை விபத்துக் காப்பீடு சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே தொடரும் என்று இந்திய அரசுத் தரப்பில் உறுதி கூறப்பட்டுள்ளது.
போபால் விஷவாயுக் கசிவில் பல ஆயிரம் பேரை பலி கொடுத்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, முழுமையான இழப்பீடு பெறாதவர்களும், கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கும் நிலையும் இருப்பதும், இதற்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்படாமலே போனதும் இந்தியாவால் மறக்க முடியாத, ஆற்றொணாத் தீத் தழும்பு. ஆகவேதான் 2011-இல், அணுஉலை விபத்துக் காப்பீடு சட்டத்தின் இரண்டு பிரிவுகளில் (17, 46) கூடுதல் விதிமுறைகள் சேர்க்கப்பட்டன.
அமெரிக்காவுடன் நாம் அணுஉலை ஒப்பந்தம் செய்து கொள்வதில் நிலவிய சிக்கல், யார் இழப்பீடு தர வேண்டும், அதன் அதிகபட்ச அளவு எவ்வளவு என்பதுதான். அணுஉலை விபத்து இழப்பீட்டு சட்டத்தின் பிரிவு 17-பி குறிப்பிடும் விநியோகிப்பாளர் (சப்ளையர்) என்பவர் யார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்பதும், பிரிவு 46-இன் படி, அணுஉலை விபத்தில் இழப்பீடு வரம்புகள் கிடையாது என்று இருப்பதும் எதிர்ப்புக்கு ஒரு காரணம்.
விபத்துகால இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், அமெரிக்க அணுஉலை ஒப்பந்தத்தின்படி விநியோகிப்பாளர்கள் அனைவரும் அமெரிக்க நிறுவனங்கள். ஜி.ஈ.,வெஸ்டிங்ஹவுஸ் போன்ற நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள். இவர்கள் காப்பீடு செய்வதெனில் அமெரிக்க நிறுவனங்களிடம்தான் செய்ய வேண்டியிருக்கும். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தங்கள் சர்வதேச அணுஉலைக்கூட விதிமுறைகளில் இல்லாததால், காப்பீடு வழங்க மாட்டார்கள் என்று அமெரிக்க வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
நரேந்திர மோடி அரசு, அவசர அவசரமாக அவசரச் சட்டத்தின் மூலம் காப்பீட்டு மசோதாவை நடைமுறைப்படுத்த முற்பட்டதன் காரணம் இப்போது புரிகிறது. அமெரிக்க அதிபர் விஜயத்தின்போது, அணு உலை ஒப்பந்தத்திலிருக்கும் முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும் என்பதால்தான் அவசரச் சட்டம் போடப்பட்டிருக்கிறது.
தற்போது மோடி - ஒபாமா பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. இந்த சுமுகத் தீர்வுக்கான காரணங்களை அரசு சொல்லவில்லை என்றாலும் அவற்றை நம்மால் ஒருவாறாக ஊகிக்க முடியும்.
அணுஉலை விபத்து இழப்பீடு சட்டத்தின்படி, விபத்து நேரிட்டால் இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1,500 கோடிக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். இந்தியாவில் அரசுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு இத்தகைய பெருந்தொகைக்கு காப்பீடு வழங்கும் மூலதனத் தகுதி இல்லை என்பதால் சிக்கல் இருந்தது. தற்போது காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகள் தொடங்கவும், இந்திய சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு காப்பீடு வழங்கவும் இயலும். ரூ.1,500 கோடிக்கு காப்பீடு தருவது அவர்களுக்கு சிரமம் அல்ல.
பிரிவு 46-இன் படி இழப்பீடு கோருவதில் அதிகபட்ச உச்ச வரம்புகள் இல்லை என்ற ஷரத்தை இந்தியா வலியுறுத்தாமல் இருக்கும் என்பதை உறுதி கூறும்படி அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்ஜி ஆலோசனை வழங்கியிருப்பதாக இரு நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதுவும் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அமெரிக்க நிறுவனங்களுக்கு இதுவரை இருந்த தடைகள் இனி இருக்காது. இந்த வகையில்தான் சுமுகத் தீர்வு காணப்பட்டிருக்க முடியும்.
இனிமேல் அதிகக் காலதாமதம் இன்றி அமெரிக்க நிறுவனங்களான ஜி.ஈ., ஹிட்டாச்சி, வெஸ்டிங்ஹவுஸ் ஆகியவை இந்தியாவில் அணு உலைகளை நிறுவத் தொடங்கும். ஏற்கெனவே, குஜராத்திலும், ஆந்திரப் பிரதேசத்திலும் இந்த நிறுவனங்கள் அணுஉலைகளை நிறுவுவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இழப்பீடு தொடர்பான தயக்கத்தால்தான் அவர்கள் செயல்படாமல் தாமதித்து வந்தனர்.
ரூ.1,500 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யும்போது, அந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய சந்தா எவ்வளவாக இருக்கும்? அந்தத் தொகையை அவர்கள் விநியோகம் செய்யும் பொருள்களின் மேல் ஏற்றித்தான் விலை நிர்ணயிக்கப் போகிறார்கள். இதனால், 2020-இல் 20,000 மெகாவாட் மின்சாரத்தை அணுஉலை மூலம் உற்பத்தி செய்ய முடிந்தாலும்கூட, அதற்கான செலவு கூடுதலாக இருக்கும். இந்தக் கூடுதல் செலவை அரசு எவ்வாறு ஈடு செய்ய முடியும்?
அதையும் பேசி இருப்பார்கள். கரியமில வாயுவைக் குறைக்கும் கடப்பாட்டுக்காக வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தரும் உதவித் தொகையில், அணுஉலை காப்பீட்டு சந்தாவையும் சேர்த்து வழங்கி, அணுமின் உற்பத்திச் செலவின் கூடுதல் தொகைக்கு ஈடு செய்வது என்பதும் பேச்சாக இருக்கலாம்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அதிபர் புஷ்ஷின் பதவிக்காலம் முடியும் தறுவாயில் இருந்தது. இப்போது அதிபர் பராக் ஒபாமாவின் நிலையும் ஏறத்தாழ அதுதான். போகிற போக்கில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர்.
அணுவைத் துளைத்துத் திணித்த ஒப்பந்தம்!
தினமணி தலையங்கம் 28.01.2015

Tuesday, 27 January 2015

குடியரசுத் தலைவர் உரை

66 வது குடியரசு தினத்திய்ப்ட்டி  குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி உரையின் முக்கிய பகுதிகள்

ஜனவரி 26-ம் தேதி நமது நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் ஒருநாள். ஜனநாயகம், நம்பிக்கை சுதந்திரம், ஆண்-பெண் சமத்துவம், வறுமையில் வாடுவோரை பொருளாதார ரீதியில் கைதூக்கி விடுவது என்ற நான்கு அம்சங்கள்தான், நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகள். இந்த கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளாக அரசியல் சாசனத்தில் வரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மகாத்மா காந்தி எடுத்துரைத்த போதனை எளிமையானது, சக்தி வாய்ந்தது, அந்த போதனை இதுதான். 'எப்போதாகிலும் உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் நீங்கள் பார்த்த ஏழையின் முகத்தை, நலிவுற்ற மனிதனின் முகத்தை உங்கள் மனக்கண் முன் நிறுத்தி, பசியாலும், ஆன்மீக ரீதியிலும் வாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு நமது சுதந்திரம் ஆதரவாக நிற்குமா என்று எண்ணிப்பாருங்கள்' என்றார். கடந்த ஆண்டு பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, முப்பது ஆண்டுகளுக்கு பின், நாட்டு மக்கள் ஒரு தனிப்பட்ட கட்சிக்கு பெரும்பான்மை பலம் அளித்து ள்ளார்கள்.
மக்கள் அளித்த இந்த பெரும்பான்மை பலத்தை கொண்டு அவர்களுக்கு அளித்த உறுதியை நிறைவேற்றுவதற்கான கொள்கையையும் சட்டத்தையும் வகுத்து செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த தேர்தல் முடிவின் தீர்ப்பாகும்.
வாக்காளர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தி விட்டார்கள். அந்த வாக்காளர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவது அவர்களின் வாக்குகளை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமை. தூய்மையான, திறன்மிக்க, சிறந்த, பெண்ணுரிமையை மதிக்கக்கூடிய ஒளிவு - மறைவற்ற, கட்டுப்பாட்டுணர்வு கொண்ட, மக்கள் நலனுக்கேற்ற ஆளுகைக்காக அளிக்கப்பட்ட வாக்கு இது.
இயங்கும் மக்கள் மன்றம் இல்லாமல் ஆட்சி நடக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றம் தான் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக சுமூகமாக பேச்சு நடத்தி, முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவது இந்த மன்றம்தான். பேச்சுவார்த்தை மூலம் ஒத்த கருத்தை உருவாக்கி, சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த மன்றங்களின் அடிப்படை தத்துவம்.
விவாதம் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றுவது நாடாளுமன்றத்தின் சட்டம் வகுக்கும் உரிமையை பாதிக்கும். அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது சிதைத்து விடும். இது ஜனநாயகத்திற்கோ, நமது சட்டங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கோ உகந்தது அல்ல.
ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதி மற்றும் ஏராளமானோர் தங்கள் பணி ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் மாறுபட்ட நிலை கொண்டிருந்த போதிலும், அவர்கள் அனைவரின் குரலும் தேசபக்த குரலாகவே ஒலித்தது. இந்த தேசிய தலைவர்களால்தான் நாம் சுதந்திரத்தை பெற்றோம். இந்தியத் தாய் விடுதலை பெறுவதற்காக உயிர்த் தியாகம் செய்தும் வெளியே தெரியாத வீரர்களுக்கும் நமது வணக்கத்தை செலுத்துவோம் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில், நமது தாய்த் திருநாடு தனது சொந்த குழந்தைகளாலும் மதிக்கப்படவில்லைஎன்பதுதான் எனக்கு வேதனை அளிக்கிறது.
பெண்கள் குடும்பத்தின் தேவதைகள் என்றும் ஆன்மாவை கிளறிவிடும் சுடர் என்றும் ரவீந்திரநாத் தாகூர் வர்ணித்தார்.
பெஞ்சமின் பிராங்க்ளின் குறிப்பிட்டதை இங்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்: 'கொடுமைக்கு உள்ளானவர்கள் மட்டுமின்றி பாதிக்கப்படாதவர்களும் குரல் எழுப்பாமல் நீதி கிடைக்காது' என்பது அவர் கூறிய வாசகம். எந்தவொரு வன்முறையாலும் பெண்களின் கவுரவம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுவேன் என்று ஒவ்வொரு இந்தியனும் உறுதி ஏற்கவேண்டும், இந்திய அரசியல் சாசனம் ஜனநாயகத்தின் புனித நூல். பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, வேறுபட்ட சமுதாயங்களிடையே நல்லெண்ண வளர்ப்பு என்ற நாகரீகத்தை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவில் சமூக பொருளாதார மாற்றத்திற்கான துருவ நட்சத்திரம் அது. இந்த விழுமியங்கள் மிகுந்த கவனத்தோடும் விழிப்புணர்வோடும் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம்.
ஜனநாயகத்தின் உள்ளடக்கிய உரிமை அரசியல் முரண்பாடுகள் காரணமாக, சில சமயங்களில், நமது பண்பாட்டிற்கு எதிரான வெறுப்பை உருவாக்குவதுண்டு. வன்முறை நாட்டு மக்களின் இதயங்களை புண்படுத்திவிடும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்தியே, மதம் என்றார் காந்திஜி. அதனை மோதலுக்கான் காரணியாக மாற்ற முடியாது.
இந்தியாவின் மென்மையான சக்தி குறித்து ஏராளமாக சொல்லப்படுகிறது. தத்துவ ரீதியாக உலகின் பல நாடுகளில் மோதல் உருவாகி, வன்முறைக்கு இட்டுச்செல்லும் சர்வதேச சூழ்நிலையில், நம்பிக்கைக்கும் பல்வேறுபட்ட மக்களுக்கும் இடையே உறவை பேணுவதில்தான் அந்த மென்மையான சக்தி அடங்கியுள்ளது நமது மென்மையான சக்திக்கு இதுவே மிகப்பெரிய எடுத்துக்காட்டு. நம்பிக்கை அனைத்துமே சட்டத்தின் முன் சமம், ஒவ்வொரு கலாச்சாரமும் மற்ற கலாச்சாரத்துடன் இணைந்து ஆக்கபூர்வமான துடிப்பை உருவாக்கக்கூடியது என்பதில் நாம் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்: உண்மையே பலம், ஆதிக்க உணர்வு பலவீனம் என்று இந்திய தத்துவம் நமக்கு போதிக்கிறது.
நமது நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாதமும், வன்முறையும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. அமைதி, அகிம்சை, நல்லுறவு அடிப்படையில் நமது வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டு உள்ள போதிலும் நாட்டின் வளர்ச்சி, சமவாய்ப்பை நோக்கிச் செல்லும் நமது பயணத்திற்கு ஊறுவிளைவிக்கும் சக்திகள் விஷயத்தில் நாம் கவனக்குறைவாக இருந்துவிட முடியாது. நமது மக்களுக்கு எதிராக போர் தொடுக்கும் இந்த சக்திகளை முறியடிக்கும் பலமும் நம்பிக்கையும் நமக்குள்ளது.
பயங்கரவாத்திற்கு எதிராக நாம் நடத்தும் போரில் உலகம் நம்முடன் கைகோர்த்து நிற்கவேண்டும்.
பொருளாதார முன்னேற்றம்
ஜனநாயகத்திற்கு பொருளாதார முன்னேற்றம் ஒரு பரிசோதனை. ஒரு சமுதாயத்தின் வெற்றி என்பது அதன் விழுமியங்களையும், நிறுவனங்களையும் ஆட்சி அமைப்பையும் போற்றிப் பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும்தான் உள்ளது. கடந்த கால கொள்கைகள், நிகழ்கால வெற்றி, எதிர்கால சாதனைக்கான வாய்ப்புக்களில்தான் நமது குறிக்கோள்கள் அடங்கியுள்ளன.
21-ம் நூற்றாண்டு... இந்தியாவின் ஆண்டு!
இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் நமது வருங்கால சந்ததியினர் கல்வி, தேசபக்தி, அன்பு, நேர்மை, கடமையுணர்வு முதலியவற்றில் பரிமளிக்க செய்வதும் நமது நாட்டின் தேசிய லட்சியம். எண்ணற்ற சிந்தனைகளின் சங்கமமாக மாறுவதன் மூலம் நம்மை சிறந்த படைப்பாளிகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த அண்டவெளியில் மேகங்களையே நூலகமாக கொண்டு எல்லையில்லா அளவாக தொழில் நுட்பத்திலும் தொலைத்தொடர்பிலும் கையடக்கமான கணினி மூலம் அளப்பரிய வாய்ப்பை நமது இளைய தலைமுறையினர் பெற முடியும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் ஆண்டாக அமையும். பின்னோக்கி செல்லும் பழக்கத்தையும் சமூக தீமைகளையும்களையும் ஆற்றலை நாம் தொடர்ந்து பின்பற்றாவிடில் எதிர்காலம் ஒருபுறம் பிரகாசமாகவும் மறுபுறம் கைநழுவிச் செல்வதாகவும் அமைந்து விடும்.
கடந்த நூற்றாண்டில் மறைந்தவர்கள் பலர், நினைவிலிருந்து நீங்கியவர்கள் பலர் என்றாலும், மேலும் பலர் நிலைத்து நிற்கிறார்கள்.
1915-ம் ஆண்டில் காந்திஜி காட்டிய வழியை பின்பற்றும் நாம், 1901-ம் ஆண்டு முதன்முதலாக தாயகம் வந்தபோது, காந்திஜி எப்படி நடந்துகொண்டார் என்பதையும் பார்க்கத் தவறக் கூடாது.
அந்த ஆண்டில்தான், பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மகாத்மா காந்தி பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

ரிப்பன் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பங்கேற்றார், அந்த இடம் முழுவதையும் சக பிரதிநிதிகள் அசுத்தம் செய்திருப்பதை அவர் பார்த்தார். இதனால், அதிர்ச்சியடைந்த காந்திஜி, அந்த அசுத்தத்தை போக்க, துப்புரவு பணியாளரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை, தாமே ஒரு துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார். இது நடந்தது 1901-ம் ஆண்டு. அப்போது, அவரை இந்த விஷயத்தில் யாரும் பின்பற்றவில்லை. 114 ஆண்டுகளுக்கு பின், மகாத்மா காந்தியின் அந்த முன்மாதிரியை நாம் பின்பற்றி தேசப்பிதாவின் தகுதிமிக்க குழந்தைகளாக நம்மை மாற்றிக்கொள்வோம்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண் மறைவுதமிழகத்தில் உள்ள ராசிபுரத்தில் பிறந்த R.K.லக்ஷ்மண் 94வது   வயதில்  26.01.2015 அன்று காலமானார்.
பல்வேறு பத்திரி கைகளில் முதன்மை கார்ட்டூ னிஸ்டாக பணியாற்றியவர்.
பணியில் ஒழுக்கத்தை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றியவர்.
காலை 9 மணி முதல் 1 மணி வரை அனைத்து பத்திரிகைகளையும் படிப்பார். பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை கார்ட்டூன்களை வரைய நேரத்தை ஒதுக்குவார். இரவு 8.30 மணி வரை அலுவலகத்திலேயே தவம் இருப்பார். நாளொன்றுக்கு 10 மணி நேரம் உழைத்தால்தான் தரமான கார்ட்டூன்களை அளிக்க முடியும் என்றார்.
அவர் உருவாக்கிய திருவாளர் பொதுஜனம்கார்ட்டூன் பத்திரிகை உலகில் அழிக்க முடியாத ராஜ முத்திரையாக பதிந்துவிட்டது.
பக்கவாதத்தால் இடது கை செயல் இழந்தாலும் வலது கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார்.
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அவரின் பத்திரிகை பணியைப் பாராட்டி மகாசேசே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Monday, 26 January 2015

குதூகலம் தரும் குடியரசு

 

1947 ஆகஸ்ட் 14 வரை அரசர்களிடமும்,
அந்நியர்களிடமும்  நம் தாய்த்திருநாடு அடிமைப்பட்டுக் கிடந்தது.  யாதொரு உரிமையும் இன்றி, அல்லல்கள் பல அனுபவித்து சோக வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர்.
காந்தியடிகளின் அகிம்சைப் போரும், பல ரின் தியாக வாழ்வும், பலரின் உயிர்த் தியாகங்ககளும் 1947 ஆகஸ்ட் 15 அன்று தேசம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தன.
இறையாண்மை மிக்க சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நாடாக இந்திய தேசம்  மா வேண்டும் என் சிந்தனையின் விளைவுதான் குடியரசு.
இந்தியாவின் சமூக, கலாச்சார, அரசியல் சூழலுக்கேற்ப, எழுதப்பட்ட அரசியல் சட்டம் தேவை என்று உணரப்பட்டதால் அரசியல் சட்ட நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் தலைமையில் அந்த அரும்பணி நிறைவேறியது.
உலகிலேயே மிக நீண்ட, எழுதப்பட்ட அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது.
1949 நவம்பர் 26-ம் தேதி புதிய அரசியல் சட்டம் இயற்றி முடிக்கப்பட்டு தீர்மானம் மூலம் ஏற்கப்பட்டது. ஆனால், 1950 ஜனவரி 26-ம் தேதிதான் அது அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
அன்றுதான் இந்தியா அதிகாரப்பூர்வமாக குடியரசு நாடானது.
“மக்களால், மக்களுக்காக, மக்களின்” அரசு என்பதுதான் குடியரசின் அடிப்படைத் தத்துவம்.
உலகில் சில நாடுகளில் இன்னும்  மன்னராட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் மலர்ந்து மீண்டும் சர்வாதிகார ஆட்சி உருவான நாடுகளும் உண்டு.
ஆனால் நமது தேசம் இன்னும் ஜனநாயகம் உள்ள குடியரசாக திகழ்ந்து வருவது போற்றுதலுக்குரியது.
இதில் சில குறைகள் உண்டு. ஆனால் இதுவன்றி மாற்று உண்டோ? தவறு செய்த மிகப்பெரிய பல
தலைவர்களை மக்கள் வாக்குச்சீட்டு அல்லது வாக்கு எந்திரம் மூலம் தண்டித்திருக்கிறார்கள். இனியும் தண்டிப்பார்கள்.
மக்களுக்காக தேசபக்த உணர்வோடு நல்ல ஆட்சியை நடத்தத் தவறினால்  மக்கள் தண்டிப்பார்கள்.
இதுவே குடியர்சு என்னும் மக்களாட்சியின் மகத்துவம்.
நமது நாட்டில் இது நிலைக்கும். நீடிக்கும்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

Sunday, 25 January 2015

தொடரும் இயக்கம்

23.01.2015 அன்று கூட்டமைப்பு சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் தங்கவேல், தோழர் சுந்தரம் (LPF மாவட்டச் செயலர் ஈரோடு),  தோழர் செல்வராஜன் (ஈரோடு மாவட்டச் செயலர் AITUC) ஆகியோர் பங்க்கேற்று, கையெழுத்திட்டு வாழ்த்துரை நல்கினர்.

ISDN

ISDN has emerged as a powerful tool worldwide for provisioning of different services like voice, data and image transmission over the telephone line through the telephone network. ISDN is being viewed as the logical extension of the digitalization of telecommunication network and most developed countries are in different stages of implementing ISDN.

An ISDN subscriber can establish two simultaneous independent calls (except when the terminal equipment is such that it occupies two 'B' channels for one call itself like in video conferencing etc.) on existing pair of wires of the telephone line (Basic rate ISDN) where as only one call is possible at present on the analog line /telephone connection. The two simultaneous calls in ISDN can be of any type like speech, data, image etc. The call setup time for a call between two ISDN subscribers is very short, of the order of 1 to 2 seconds. ISDN also supports a whole new set of additional facilities, called Supplementary Services.

Connectivity
The ISDN subscriber will have full connectivity, nationally, to other analog telephone subscribers. At present ISDN services are available to and from India for the following countries: 
· Australia Austria Belgium Canada
· Denmark France Germany
· Ireland Italy Israel
· Japan Malaysia Netherland
· Norway Phillipines Singapore
· Switzerland Thailand U.A.E U.S.A 

Services Offered By ISDN
·  Normal Telephone & Fax (G3)
·  Digital Telephone -with a facility to identify the calling subscriber number and other facilities.
· G4 Fax
· Data Transmission at 64 Kbps with ISDN controller card
·   Video Conferencing at 128 Kbps
·  Video Conferencing at 384 Kbps (Possible with 3 ISDN lines)

Variety of supplementary Services supported by ISDN.
·  Calling Line Identification Presentation(CLIP)
·  Calling Line Identification Restriction(CLIR)
·  Multiple Subscriber Number(MSN)
·  Terminal Portability(TP)
·  Call Hold(CH)
·  Call Waiting(CW)
·  User to User Signaling (UUSI) 

Types of Accesses
There are two types of "accesses" (connections) for ISDN.
Basic Rate Access(BRA): 2B+D 
·  2 Channels of 64 Kbps for Speech And Data.
·    1 Channel of 16 Kbps for Signalling
Primary Rate Access (PRA): 30 B+D
·  30 Channels of 64 Kbps for speech and data.
·  1 Channel of 64 Kbps for signalling.