NFTECHQ

Thursday 31 January 2019

வாழிய பல்லாண்டு

31.01.2019 அன்று பணி ஓய்வு பெற்ற
1.தோழர் K.அய்யாவு OS ஈரோடு
2.தோழியர்  C. சரஸ்வதி TT கொடுமுடி
3. தோழர் S.கிருஷ்ணன் TT ஈரோடு
ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Tuesday 29 January 2019


அஞ்சலி

இந்திய தேசத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார்.

மத்திய அரசில் பாதுகாப்புத் துறை, தொலைத்தொடர்புத்துறை, தொழில்துறை, மற்றும் ரயில்வே துறை அமைச்சராகவும் பெர்னாண்டஸ் இருந்துள்ளார்.

அவசரநிலை காலகட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடியவர்.
1974ல் நடைபெற்ற பிரமாண்டமான ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் இவரும் ஒருவர்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு நமது அஞ்சலி

Saturday 26 January 2019


விழா சிறக்க வாழ்த்துக்கள்
NFTE  தமிழ் மாநிலப் பொருளர் மற்றும் NFTCL அமைப்பின் துணைப் பொதுச்செயலர் அன்பிற்குரிய
அருமைத் தோழர் L.சுப்பராயன்
அவர்களுக்கு இன்று 26.01.2019 கோவையில் நடைபெறும் பணிநிறைவு பாராட்டு விழா மிகச் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகிறோம்.

Sunday 20 January 2019



வாழ்த்துக்கள்

இன்று (20.01.2019) JTO பதவிக்கு தேர்வு எழுதுவோர் வெற்றி பெற்று பதவி உயர்வு பெற உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

Monday 14 January 2019


இனிய
பொங்கல் மற்றும்
தைத்திருநாள்வாழ்த்துக்கள்


Thursday 10 January 2019


வாழ்த்துகள்
பாராட்டுகள்
2019 ஜனவரி 8 மற்றும் 9  ஆகிய இரு நாட்களில்  நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


Wednesday 9 January 2019


வாழிய பல்லாண்டு

31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE  அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

குறிப்பு: வழக்கமான பதிவில் இவரது பெயர் வுடுபட்டுப் போனது. அதற்காக வருந்துகிறோம்.

Saturday 5 January 2019


ஜனவரி 6
தோழர் குப்தா நினைவு தினம் 

ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6.

ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பது அரிது. அப்படிப்பட்ட அரியதொரு தோழமை நெஞ்சம் படைத்த மாமனிதன் அவர்.
கடைநிலை ஊழியர்களின் வாழ்வுக்காக சிந்தித்து செயலாற்றி வெற்றி பெற்ற தலைவன்.
அவரது பலம் உள்ளதை உள்ளபடி பேசுவது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மை இல்லாத தலைவன்.
இப்படி ஒரு தலைவன் இனி உருவானால் அது அரிது.
அவர் போராட்டம் என்று அறிவித்தால் பந்தயக் குதிரை போல் தொழிலாளிகள் பாய்ந்து போராடிய காலம் அது. அவரது போராட்ட அறிவிப்புகள் மதிக்கப்பட்டன.அவரது காலத்தில் போராட்டங்கள் விடியலைத் தந்தன. வெளிச்சத்தைப் பாய்ச்சின.
அவர் பங்கேற்கும் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் எழுத்து பூர்வமான விமர்சனக் கேள்விகளையும் "காதல் கடிதங்கள்" எனக் கூறிய தலைவன்.
BSNL ஓய்வூதியர்கள் உலகின் மிகப்பெரிய பாக்கியசாலிகள்.அவரது காலத்தில் நிறுவனமானதால் ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இல்லையேல்.....?????? அந்த நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
உயிரும் உணர்வும் உள்ள வரை போற்றப்பட வேண்டிய ஒப்பில்லா தலைவன் குப்தா.


பொதுவேலை நிறுத்தம்
தேசம் காக்க,
உழையப்பவர் உரிமை காத்திட,
பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட
ஜனவரி 8, 9 தேதிகளில் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம்.
பங்கேற்போம்.


அழைப்பு துண்டிப்பு

நிறுவனங்களுக்கு அபராதம்

அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க் பயன்பாட்டாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினையான அழைப்பு துண்டிப்புக்குத் தீர்வு காணும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அதை மீறும் நிறுவனங்களுக்குக் குறிப்பிடத்தகுந்த அபராதம் விதிக்கப்படுகிறது. அவ்வாறாக, அரசின் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ .58 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4ஆம் தேதி மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மனோஜ் சின்ஹா அளித்துள்ள பதிலில், “ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அழைப்பு துண்டிப்பு விதிமுறையை மீறியதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐடியா நிறுவனத்துக்கு ரூ 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஜனவரி - மார்ச் காலாண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ 3 லட்சமும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ 10.5 லட்சமும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு ரூ 22.5 லட்சமும், டெலினார் நிறுவனத்துக்கு ரூ 6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டதுஎன்று தெரிவித்தார்.
அழைப்பு துண்டிப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, வாடிக்கையாளர்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டறிய .வி.ஆர்.எஸ். என்ற குரல் பதிவு அமைப்பும் அரசு தரப்பிலிருந்து நிறுவப்பட்டு, குறைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், இந்த அமைப்பில் 2.5 கோடிப் பேர் இணைந்துள்ளதாகவும் மனோஜ் சின்ஹா கூறினார்.
இது செய்தி.
நமது கேள்வி
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள்
அரசின் செல்லப்பிள்ளைகளா?

Thursday 3 January 2019


வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல்!


விஜயா ங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், வங்கிகள் இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நேற்று (ஜனவரி 2) டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் முதன்முறையாக மூன்று வங்கிகள் இணைப்பு நடைபெறவுள்ளது. விஜயா மற்றும் தேனா வங்கி ஊழியர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். இதனால், வங்கி ஊழியர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுஎன்று அவர் கூறியுள்ளார்.
தேனா வங்கியில் உள்ள பங்குதாரர்களுக்கு 110 பங்குகள் வழங்கப்படும் என்று பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. அது போன்று, விஜயா வங்கி பங்குதாரர்களுக்கு அவர்கள் வைத்துள்ள ஒவ்வொரு 1,000 ஷேர்களுக்கும் 402 பங்குகள் வழங்கப்படும். இந்த இணைப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்ககங்க்களை மதிக்காத அரசின் ஆணவப் போக்கு இது.

Tuesday 1 January 2019


2019 புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் 2019 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மாற்றங்கள் வரும் ஆண்டாக
ஏற்றங்கள் தரும் ஆண்டாக 2019 அமைய வாழ்த்துக்கள்.

உலக அமைதிக்கு ஊறு நேராத ஆண்டாக 2019 அமையட்டும்.
நமது தேசத்தில் 2019ல் மக்கள் துயர் தீர்க்கும் ஆட்சி   உருவாகட்டும்.
இயற்கைக்கு இன்னல் விளைவிக்காத ஆண்டாக 2019 அமையட்டும்.
இயற்கை இன்னல் தராத ஆண்டாக 2019 அமையட்டும்.
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் துயர் நீங்கி விடியல் பெறும் ஆண்டாக 2019 அமையட்டும்.
உழைக்கும் மக்கள் அனைவரும் உயர்வு பெறும் ஆண்டாக 2019 அமையட்டும்.
BSNL ஊழியர்கள் ஊதிய  உயர்வு பெறும் ஆண்டாக 2019 அமையட்டும்.
BSNL ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வந்தவுடன் BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வரும் ஆண்டாக 2019 அமையட்டும்.
அனைவருக்கும் மீண்டும் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



வாழிய  பல்லாண்டு
31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற
தோழியர் P.சரோஜா SDE
தோழர் N.ராமசாமி  JE
தோழர் R. தங்கவேலு  OS
தோழர் R. பாலசுப்ரமணியன்  OS
தோழர் G.செல்வன் TT
தோழர் M.ராமசாமி TT
தோழர் E. தர்மன் TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.


விலைவாசிப்படி
01.01.2019 முதல் விலைவாசிப்படி 3.2 சதவிகிதம் உயரும். மொத்த விலைவாசிப்படி 138.8 சதவிகிதமாக இருக்கும்.