NFTECHQ

Tuesday 31 July 2018


வாழ்த்துக்கள்
முனைவர் மயில்சாமி அண்ணாதுரை 
பொள்ளாச்சி அருகில் கோதவாடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர்.
 இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனராகப் பணிபுரிந்தார்.
இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திராயபன்-1  திட்டத்தின் திட்ட இயக்குனர். அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.. மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
31.07.2018 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரது பணி ஓய்வுக்காலம் நிச்சயம் தேசத்துக்கு பயன்படும்.


வாழிய பல்லாண்டு
31.07.2018 அன்று பணி ஓய்வு பெறும்

1.தோழர் S.குப்புராஜு AGM ஈரோடு
2.தோழர் k.N. மொகமது ரபி SDE ஈரோடு
3. தோழியர் P. சாவித்திரி OS ஈரோடு
4.தோழியர் V.K. மெர்சி மார்கரெட் OS ஈரோடு
5.தோழியர் V. செல்லம்மாள் TT எழுமாத்தூர்
6.திரு K.மணியன்  JTO ஈரோடு
7.தோழர் S. முனியப்பன்  JE ஈரோடு
8.தோழர் G.பூபாலன் TT   ஈரோடு
9.தோழர் B.V. ராஜேந்திரன் TT பவானி
10.தோழர் P.C. பழனிசாமி  TT 
11.தோழர் S.கண்ணன்  TT கோபி
12.தோழர் B.நாகராஜன்   TT சத்தி
ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Friday 27 July 2018


ஜூலை 27
அப்துல்கலாம் நினைவுதினம்



வருமானவரி கால நீட்டிப்பு
2018-19 ஆம் ஆண்டிற்கான வருமான வரி குறித்த விபரங்க்களைசமர்ப்ப்பிக்க  31.08.2018 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

Thursday 26 July 2018


முடிவுற்றது
மூன்றாம் நாள் பட்டினிப்போர்.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

பங்கேற்றோருக்கு பாராட்டுக்கள்.

Wednesday 25 July 2018


25.07.2018
தொடர் உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள் இன்று.

Tuesday 24 July 2018


தொடர் உண்ணாவிரதம்
இன்று (24.07.2018) முதல்
26.07.2018 வரை தொடர் உண்ணாவிரதம்.

கோரிக்கைகள்
1. மூண்றாவது ஊதிய மாற்றம்
2. ஓய்வூதிய பங்களிப்பில் மத்திய அரசின் முடிவை BSNL நிறுவனத்துக்கும் அமலாக்குதல்
3. BSNL  நிறுபவனத்துக்கு 4G அலைக்கற்றை  ஒதுக்கீடு

இடம் பொதுமேலாளர் அலுவலகம்

Saturday 21 July 2018


துவங்கியது
20.07.2018 அன்று மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான முதல் கூட்டம் 
நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம்   சார்பாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

DPE வழிகாட்டுதல்கள் குறித்து நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

விலைவாசிப்படி சம்பந்தமாக தொழிற்சங்கம்  சார்பாக
எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு  DPE இலாக்கவிடம்
உரிய விளக்கம் கேட்கப்படும்  என உறுதியளிக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் 09.08.2018 அன்று  நடைபெறும்.
அடுத்த கூட்டத்தில் புதிய ஊதிய விகிதங்களை
உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படும்.

Wednesday 18 July 2018


மண்டேலா  100
ஜூலை 18
இனவெறிக்கொடுமைக்கு எதிராகப் போரிட்டு
இன்னல்கள் பல தாங்கி
இம்சைகள் பல ஏற்று
இருபத்தேழு ஆண்டுகள்
இருண்ட சிறைவாசம் அனுபவித்த
மகத்தான தலைவன்
நெல்சன் மண்டேலாவின்
நூறாவது பிறந்த தினம்..

Monday 16 July 2018


துவக்கம்

ஊதிய மாற்றதுக்காண நிர்வாகம் மற்றும் ஊழியர்தரப்பு முதல் கூட்டம் 20.07.2018 அன்று நடைபெற உள்ளது.
நமது சங்கம் சார்பாக
தலைவர் இஸ்லாம்,
பொதுசெயலர் சந்தஸ்வர் சிங்
துணைப் பொதுசெயலர் சேஷ்சாத்திரி
ஆகிய மூவரும் உறுப்பினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.


தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

24-02-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய  கோரிக்கைகளில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற கோரி.
24.07.2018
25.07.2018
 26.07.2018
ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

Saturday 14 July 2018


தலைவர்களின் தலைவர்
ஜூலை 15
காமராஜர்
பிறந்ததினம்

Sunday 8 July 2018


ஜூலை 8

தோழர் ஜோதிபாசு பிறந்த தினம்.
இந்திய நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு.
அவர் அப்பதவியை ஏற்க அனுமதிக்கப்பட்டிருந்தால் நமது நாட்டில் சில அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்.


Saturday 7 July 2018


தோழர் ஞானையா நினைவு தினம்





ஜூலை 8
தோழர் ஞானையா சிந்திப்பதை நிறுத்திய தினம்.
மிக்ச்சிறந்த தொழிற்சங்கத் தலைவர்,
தடைகளை உடைத்து போராடும் குணம் மிக்க போராளி,
மார்க்சிய ஞானத்தில் ஞானத்தந்தை என போற்றப்பட்டவர்.
ஜூலை 8
அவரது முதலாம் ஆண்டு நினைவுதினம்.

Thursday 5 July 2018


சமத்துவம்?
சமத்துவம் என்பது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கூறுகளில் மிக முக்கியமான ஒன்று.

மூன்றாவது ஊதிய பேச்சுவார்த்தைக் குழுவில் NFTE சங்கத்திற்கு 2 உறுப்பினர்களும் BSNLEU  சங்கத்திற்கு  3  உறுப்பினர்களும் பங்க்கேற்பர் என அறிவிக்கப்பட்டது.

எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கை.

தற்போது NFTE சங்கத்திற்கு 3 உறுப்பினர்களும் BSNLEU  சங்கத்திற்கு  5  உறுப்பினர்களும் பங்க்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

AUA என்ன ஆயிற்று?
அவர்களையும் பேச்சு வார்த்தைக் குழுவில் இணைக்க வேண்டும் என்ற சிந்தனை ஏன் உதிக்கவில்லை?

அறிவும் அனுபவமும் யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல.

சமத்துவம் வாய்ப்பேச்சோடு சரி. நடைமுறையில்? நானே பெரியவன் என்னும் மனப்போக்கு.

Wednesday 4 July 2018


இந்தியாவில் சீன வங்கி தொடக்கம்

பேங்க் ஆப் சீனா வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற மாதம் சீனாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது சீன அதிபர் க்ஷிஜின்பிங்கைச் சந்தித்தார். ஷாங்காய் கூட்டுறவு நிறுவன மாநாட்டுக்கு முன்பான இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரக் கூட்டுறவு, மக்களுக்கிடையேயான பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனுடன் பேங்க் ஆப் சீனா வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி 105 வருடப் பழமை வாய்ந்த இவ்வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி தற்போது வழங்கியுள்ளது.
பேங்க் ஆப் சீனா வங்கி தெற்கு ஆசியாவில் தனது முதல் கிளையைப் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் சென்ற ஆண்டு தொடங்கியது. ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள இவ்வங்கியின் சந்தை மூலதன மதிப்பு 158.6 பில்லியன் டாலர்களாகும். இந்தியாவில் சேவை வழங்கும் இரண்டாவது சீன வங்கி என்ற பெருமையைத் தனதாக்கவுள்ள இவ்வங்கி, சொத்து அடிப்படையில் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாகும். சீன வங்கியைப் போலவே, ஈரான், தென்கொரியா, மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 வங்கிகள் இந்தியாவில் கிளை தொடங்க விண்ணப்பித்துள்ளன.



ஜூலை 4
விவேகானந்தர் நினைவு தினம்




வேலைவாய்ப்பு  

பெல் நிறுவனத்தில் பணி

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 86
பணியின் தன்மை: துணைப் பொறியாளர்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.40,000 – 1,40,000/-
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 11.07.2018
மேலும் விவரங்களுக்குhttp://bel-india.in/DocumentViews.aspx?fileName=86posts%20of%20DE%20FixedTenure%20advertisementforEM_SBU.pdfஎன்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.