NFTECHQ

Monday 25 May 2020


இனிய
ஈகைத்திருநாள்
வாழ்த்துக்கள்

Friday 1 May 2020


மேதின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
சாதி, மத பேதமின்றி  உலகெங்கிலும் உள்ள உழைப்பவருக்கான உன்னதத் திருநாள் மே 1.
உழைப்போரின் வரலாற்று முன்னோர்கள் நடத்திய போராட்டத்தாலும் சிந்திய ரத்தத்தாலும் செய்த தியாகத்தாலும்
16 மணி நேர வேலை எட்டு மணி நேர மேலையானது.
 நாங்கள் இயந்திரங்களா பெரும் பணக்காரர்களின் சொகுசு வாழ்க்கைக்கு,
எங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையை உழைப்பால் செலுத்த நாங்கள் என்ன அடிமைகளா ? நாங்கள் தொழிலாளர்கள். எங்களின் வேலை நேரம் எட்டு மணி நேரமாக வேண்டும். எங்களுக்கு எட்டு மணி நேர உறக்கம் வேண்டும். எட்டு மணி நேர வாழ்க்கை வேண்டும்!” என உலகத் தொழிலாளர் வர்க்கம் வீறுகொண்டு எழுந்து முழங்கியது.
உழைக்கும் கூட்டம் என்றென்றைக்கும் அடங்கிக்கிடக்கும் என்ற மிதப்பில் கொட்டமடித்த சுரண்டல் கூட்டம், உழைப்போரின் உரிமைப் போரை நசுக்காமல் இருக்குமா என்ன?
மானுட விடியலுக்கு ரத்தத்தாலும் தியாகத்தாலும் அடித்தளம் இடுவதற்கான அறைகூவல் என அடுத்தடுத்து வந்த நாட்கள் வரலாற்றுப் பக்கங்களில் இன்றளவும் மின்னுகின்றன
அமெரிக்கத் தொழிலாளர்களின் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் பிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோரை தூக்குக் கயிற்றுக்கு இரையாக்கப்படுகிறார்கள்.
இவர்களின் மரணமே 8 மணி நேர வேலைக்கு விதையிட்டு உரமிட்டு இன்று பலன் தருகிறது.
நாம் பெற்ற அனைத்து உரிமைகளுக்குப் பின்னாலும் பல தியாக வரலாறுகள் உள்ளன.
தியாகிகளை நினைவில் கொள்வோம்.
நம்பிக்கையுடன் நடைபோடுவோம். முன்னேறுவோம்.

வாழிய பல்லாண்டு
30.04.2020 அன்று பணி நிறைவு பெற்ற
1.தோழர் M.P.ராமலிங்கம் JE
2.தோழியர் அனுராதாரங்கராஜன் OS
3.தோழியர் T.பாக்கியம் OS
4.தோழர் P.பாலசுப்ரமணியன் OS
5.தோழியர் கலாவதி சுப்ரமணியன் OS
6.தோழர் K.S.கார்த்திகேயன் TT
7.தோழர் R.காளிமுத்து TT
8.தோழர் K.K.செல்வராஜு TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்.