NFTECHQ

Monday, 31 October 2016

வரலாற்றை எழுதும்

இடத்தில் இந்திரா

இந்திராகாந்தி சுதந்திரப்போராட்ட பின்னணியில் வளர்ந்தவர். அவர் இல்லமான ஆனந்த பவனம் விடுதலை வேள்வியின் மையமாக இருந்தது.காந்தி,மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, படேல், அபுல்கலாம் ஆசாத்,எல்லைக்காந்தி, சுபாஷ் ,ஆச்சார்ய கிருபாளினி, சரோஜினி நாயுடு என்று மாபெரும் தலைவர்கள் அந்த வீட்டில் சுதந்தரப் போராட்டத்திற்கான கனலை ஊதி வளர்த்தபோது அந்தக் கனலில் வளர்ந்தது இந்திராவின் வாழ்க்கை. அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தின் போது செல்வச் செழிப்பு மிகுந்த ஆனந்த பவனத்தை அலங்கரித்த விலைமதிப்பற்ற வெளிநாட்டுப் பொருட்கள் நேரு குடும்பத்தினரால் கொளுத்தப்பட்டன.சிறுமி இந்திராவின் கையில் ஒரு வெளிநாட்டுப் பொம்மை இருந்தது. தனிமையில் வளர்ந்த இந்திரா அதை மிகவும் நேசித்தார். அவரால் அதைப் பிரியவே முடியவில்லை.இறுதியில் இதயம் கனக்க கண்ணில் நீரோடு அந்தப் பொம்மையைத் தீயில் எரித்தார். பிறகு அந்தத் தியாகம் தொடர்ந்து ஒரு நாள் இந்த தேசத்திற்காக அவரது உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்குச் செல்லும் என்று ஒருவேளை அந்தச் சிறுமியின் உள்ளுணர்விற்குப் புரிந்திருக்கலாம். தந்தையும், தாயும் மொத்தக் குடும்பமும் சிறையில் வாட ஆனந்த பவனத்தின் பெரிய அறைகளில் தனிமையை அணைத்து உறங்க வேண்டிய துயரம் இந்திராவுக்கு.சிறையில் இருந்து தனது தந்தை எழுதும் கடிதங்களில் மட்டுமே உயிர்த்திருந்தது அவரது உலகம்.பிறகு சுதந்திரப்போராட்டத்தில் உதவி புரிய வானரசேனை எனும் சிறுவர் குழுக்களை இந்திரா கட்டி எழுப்பினார்.
மிகுந்த மகிழ்ச்சியோடும், மன உறுதியோடும்.இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது அகதிகள் முகாமில் இரவு பகல் பாராது உண்ண, உறங்க நேரமில்லாது ஓய்வின்றிப் பணியாற்றினார் இந்திரா.உலக நாடுகளுக்கு தனது தந்தை நேருவோடு சுற்றுப்பயணம் செய்தபோதும்,பிரதமர் வீட்டை நிர்வகிக்க நேர்ந்த போதும் இந்திரா உலக அரசியலை ஆழமாகக் கற்றார்.இவ்வளவு பெரிய அனுபவம், தியாகப் பாரம்பரியம் இருந்தபோதும் அவர் ஒரு பெண் என்றும்,பொம்மை என்றும் எள்ளி நகையாடப்பட்டார், குறைத்து மதிப்பிடப் பட்டார்.ஆரம்பம் முதலே உணர்சிகளை ஒதுக்கிவைத்துப் பழக்கப்பட்ட இந்திரா, இரும்புக்குணம் கொண்டவராக இருந்ததில் வியப்பில்லை. அதுதான் அந்தப் பெண்மணி ஒருசில சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்கக் காரணமாகவும் இருந்தது. இந்திராவோ தனக்கான, தனது தேசத்திற்கான வரலாற்றை எழுதும் இடத்தில் இருந்தார்.பாகிஸ்தானை உடைத்து ,பலவீனப்படுத்தி பங்களாதேசத்தை அவர் உருவாக்கியபோது ஆசியாவின் வரலாற்றையும் சேர்த்தே எழுதினார். பசுமைப் புரட்சி,வெண்மைப் புரட்சியில் இந்தியா தன்னிறைவு அடைந்தது. இனி உணவுக்காக அமெரிக்காவிடம் பிச்சை எடுக்க வேண்டியதில்லை என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்ததும், அணுகுண்டை வெடித்ததும்  வங்கிகள்  தேசியமயம் ஆக்கபட்டதும் அவர் ஆட்சிக் காலத்தில் தான்.தனது எமன் தனக்கு அருகிலேயே இருக்கிறான் என்று தெரிந்தும் தேச ஒற்றுமைக்காக தனது உயிரையே தியாகம் செய்யத் துணிந்தார்.
வாழ்க்கை முழுவதும் போராட்டங்களையும்,தியாகங்களையும் செய்து ,இந்தியாவை வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை நோக்கி வழிநடத்திய வர் இந்திராகாந்தி.

அக்டோபர் 31 இந்திராகாந்தி நினைவு தினம்.

Sunday, 30 October 2016

வாழிய பல்லாண்டு

31.10.2016 அன்று
பணி ஓய்வு பெறும்
1.திரு S. ராமமூர்த்தி EE CIVIL
2.தோழியர் P.ஆலிஸ் தம்ழ்ச்செல்வி JAO
3.தோழர் G.காந்திகிருஷ்ணன் டெலிகாம் டெக்னீசியன்
4.தோழர் K.கருத்தபாண்டியன் டெலிகாம் டெக்னீசியன்
5.தோழர் K.பன்னீர்செல்வம் டெலிகாம் டெக்னீசியன்
6.தோழர் P.சதாரக் டெலிகாம் டெக்னீசியன்
7.தோழர் V.சண்முகம்  டெலிகாம் டெக்னீசியன்

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Friday, 28 October 2016

இனிய
தீபாவளி

வாழ்த்துக்கள்
எழுச்சியுடன்
ஆர்ப்பாட்டம்
டவர்கள் பராமடரிப்புக்கென
ஒரு தனியான துணை நிறுவனம் அமைக்கும் திட்டத்த்தைக் கைவிட வலியுறுத்தி
27.10.2016 அன்று
மிகுந்த் எழுச்சியோடும்
மிகச்சிறப்போடும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்க்கேற்றுச் சிறப்பித்த
AIBSNLEA
AIBSNLOA
AIGETOA
NFTE
TEPU
SEWA
BSNLAU
அமைப்புகளைச் சேர்ந்த அனைவருக்கும்
உள்ளம் நிறைந்த

பாராட்டுக்கள்.

Tuesday, 25 October 2016

மருத்துவமனை அங்கீகாரம்

தமிழ் மாநில நிர்வாகம் ஒரு உத்தரவை 25.10.2016 அன்று வெளியிட்டுள்ளது.

"அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தொழிற்சங்கங்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளை நமது நிர்வாகமும் அங்கீகரிக்க வேண்டும்.

இப்பணியை 15.11.2016க்குள் முடிக்க வேண்டும்.


இந்த மருத்துவமனைகளில் கடன் அல்லது ரொக்கம் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாலாம்"  
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசே!
பி எஸ் என் எல்
நிறுவனத்தின்
60000 செல் டவர்களை உள்ளடக்கிய தனி "டவர் கார்ப்பரேசன்"
அமைக்கும் திட்டத்தைக்  கைவிடு
என வலியுறுத்தி

ஆர்ப்பாட்டம்
நாள்  27.04.2016 வியாழக்கிழமை
காலம் மாலை 4 மணி
இடம் GM அலுவலகம்
அனைவரும் திரளாகப்
பங்கேற்க வேண்டுகிறோம்
தோழமையுடன்
AIBSNLEA   AIBSNLOA   AIGETOA
NFTEBSNL     TEPU   SEWABSNL   BSNLAU
மாவட்டச் சங்கங்கள்

ஈரோடு மாவட்டம்
சிறப்பான தர்ணா
24.10.2016 அன்று ஈரோடு GM அலுவலகத்தில் NFTE-TEPU-SEWA BSNL அமைப்புகளின் சார்பாக 11 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிறப்பான தர்ணா நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.


பங்கேற்று சிறபிபித்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

Sunday, 23 October 2016

வாழ்த்துபோம்
பாராட்டுவோம்
கபடி உலககோப்பை யில்
தொடர்ந்து 3-வது முறையாக
சாம்பியன் பட்டம் வென்று
இந்தியா சாதனை.

சாதனை படைத்த
 இந்திய அணி வீரர்களைப்

பாராட்டி வாழ்த்துவோம்.

Saturday, 22 October 2016

எங்கேயும் எப்போதும்

தாமதம்...
இந்தச் சொல்லின்  மிகச் சரியான
இலக்கனம் தான்  நமது நிர்வாக செயல்பாடா?

பல ஆண்டுகள் வனவாசத்துக்குத் துரத்தப்பட்ட போனஸ் இந்த ஆண்டில் திரும்பி வந்தது.

07.10.2016 அன்று போனசுக்கான
உத்தரவு வெளியானது.

"போனஸை விட்டுக்கொடு
அல்லது தள்ளிப்போடு" என்று இயக்குனர் (மனிதவளம்) 10.10.2016 அன்று வேண்டுகோள் விடுக்கிறார்.

நான்கு நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்து
14.10.2016 அன்று அந்த வேண்டுகோளின் படிவம் வெளியிடப்படுகிறது.


போனசை விரைபில் பட்டுவாடா செய்யுமாறு 14.10.2016 அன்று உத்தரவிடப்படுகிறது.

24.10.2016க்குள் விட்டுக் கொடுத்தல்/தள்ளிப் போடுதல் குறித்த விருப்பம் தருமாறு 21.10.2016 அன்று உத்தரவு வெளியாகிறது.

07.10.2016 அன்று வெளியான உத்தரவுக்கு 21.10.2016 வரை காகித உத்தராவுகள் மட்டுமே வருகிறது.
காந்தி சிரிக்கும் காகிதம் கைகளில் வரவில்லை.

"புன்னகையுடன் சேவை செய்து
போட்டியைச் சந்திக்க வேண்டும்"
ஊழியர்களுக்குத் தரும் அறிவுரை இது.

ஆனால் 3000 ரூபாயைக் கொடுக்கும்
உத்தரவுக்கு 18 நாட்கள் சிகிச்சையா?
டிஸ்சார்ஜ் தேதியும் தெரியவில்லை.

எப்போதுதான் வரும்? என்று
சொல்ல முடியாத ஒரு நிலை.

எங்கேயும்
எப்போதும்
தவறுகளும்
தாமதமும்
தொடர்கதை.

என்று தணியும்
இந்த தாமத சோகம்?

எப்போது விடியும்

விரைவான செயலாக்கம்?

Friday, 21 October 2016

பெருந்துறையில் மாற்றம்

பெருந்துறை கிளையின் பொதுக்குழுக்கூட்டம் 20.10.2016  அன்று நடைபெற்றது.

கீழ்க்கண்ட முடிவுகள் ஒரு மனதாக எடுக்கப்பட்டன.

கிளைச்செயலர் தோழர் மெளனகுருசாமி
மாவட்டப் பொருளராகத் தேர்வு செய்யப்பட்டதால் கிளைச்செயலர் பதவியிலிருந்து
விலகுவதாகத் தெரிவித்த விருப்பம் ஏற்கப்பட்டது.

தோழர் P.சுப்ரமணியம் OS
கிளைச்செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தோழர் L.பரமசிவம் TT
உதவிச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வு செய்யப்பட்ட  புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

பதவியை விட்டுக் கொடுக்கும்
மனப்பான்பையுடன் செயல்பட்ட

தோழர் மெள்னகுருசாமிக்கு பாராட்டுக்கள்.

Thursday, 20 October 2016

தகவல்கள்
வதந்திகளை நம்பாதீர்

போனஸ் பற்றி பல வதந்திகள் உலவுகின்றன.

போனஸ் பட்டுவாடாவுக்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

கார்ப்பரேட் அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

25.10.2016க்குள் போனஸ் கிடைக்கும்.

இந்த மாத சம்பளம்

தீபாவளி பண்டிகை 28 மற்றும் 29 தேதிகளில் வருவதால் இந்த மாதச் சம்பளத்தை 25.10.2016 அன்று பட்டுவாடா செய்யுமாறு ந்மது மத்திய் சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

NFTE அணியில் இணைந்த
 மேலும் ஒரு அமைப்பு


BTEU BSNL அமைப்பு நமது NFTE-TEPU-SEWA-PEWA கூட்டமைப்பில் இணைந்துள்ளது. 

Wednesday, 19 October 2016

அதிகாரம் யாருக்கு?

"ஒரு சட்டத்தை எப்படி இயற்ற வேண்டும் என்று சொல்லும் உரிமை மக்களுக்குக் கிடையாது"
என்று நீதிமன்றத்தில் அரசு வக்கீல் வாதிட்டுள்ளார்.

ஒரு அரசை
ஆக்கவும்
நீக்கவும்
அதிகாரம் படைத்தவர்கள் மக்கள் மட்டுமே.

அப்படி மக்களால் உருவாக்கப்பட்ட அரசு நியமித்த வக்கீலுக்கு நீதிமன்றத்தில்இப்படிப் பேசும் அதிகாரம் யார் தந்தது?

நீதிபதி தலைடயிட்டுச் சொன்னார்
"ஒரு சட்டத்தை மக்கள் நலன் கருதி
எவ்வாறு இயற்ற வேண்டும்
என்று சொல்லும் அதிகாரம்
நீதிமன்றத்துக்கு உண்டு"

என்று சொல்லி வைத்தார் ஒரு குட்டு.
அக்டோபர் 19
நாமக்கல் கவிஞர்
வெ. இராமலிங்கம்
பிறந்த நாள்


பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் ;
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் ;
கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும் ;
குற்றேவல் தொழிலென்ற மனம்மாற வேண்டும் ;
வீட்டொடு தான்மட்டும் சுகமாக உண்டும்
வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும்
நாட்டோடு சேராத தனிபோக உரிமை
நடவாதிங் கினியென்று நாமறிதல் பெருமை.

உடலத்தின் வடிவத்தில் பேதங்கள் உண்டு ;
உள்ளத்தின் எண்ணத்தில் வித்யாசம் உண்டு ;
சடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம்
சகலர்க்கும் உலகத்தில் சமமான தன்றோ!
கடலொத்த தொழிலாளர் வெகுபாடு பட்டும்
கஞ்சிக்கு வழியின்றிக் கண்ணீரைக் கொட்டும்
மடமிக்க நிலைமைக்கு மாற்றில்லை யானால்
மனிதர்க்கிங் கறிவுள்ள ஏற்றங்கள் ஏனோ?

பசைமிக்க தொழில்செய்து பலன்முற்றும் யாரோ
பரிவற்ற முதலாளி பறிகொண்டு போக
பசிமிக்கு மிகநொந்த தொழிலாளர் எல்லாம்
பகையென்று நமையெண்ணிப் பழிகொள்ளு முன்னால்
வசைமிக்க நிலைமாற வழியன்று சூழ்வோம்
வறுமைக்கே இடமற்ற சமுதாய வாழ்வை
இசைமிக்க முறைகண்டு ஏற்பாடு செய்வோம்
எல்லாரும் குறைவற்ற நலமெய்தி உய்வோம்.

Tuesday, 18 October 2016

ஈரோடு...    ஈரோடு ...  ஈரோடு

20 சதம்
வீட்டு வாடகைப் படி பெற
ஈரோடு வர வேண்டுமா?
அல்லது பணியின் தலைமையகம்
ஈரோடு என
உத்தரவு பெற வேண்டுமா?

இது சாத்தியமா?

இது சாத்தியமே.

ஆனால்
இரண்டு நிபந்தனைகள்.

1. நீங்கள் முருகப்பெருமானின் பூர்ணஅணுக்கிரஹம் பெற்று அவரின் aஅருளைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

2. உங்களது பெயரில்
வாடகையில்லா தரைவழித் தொலைபேசி இணைப்பை ஒரு காலத்தில்
உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ
அவர்களது வீட்டிலோ அல்லது
வணிக இடத்திலோ
பயன்படுத்த ஏற்பாடு
செய்திருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகள் இருந்தால்

ஈரோடு வரலாம்.

Monday, 17 October 2016

அக்டோபர் 17

கண்ணதாசன் நினைவு நாள்

அனுபவமே கடவுள்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
55 வயதில்
வாழ்ந்து முடித்தவன்
"வாழ்ந்து"  என்னும்
வார்த்திக்கு அர்த்தம்
சொன்ன கவியரசன்.
55 வயதில்
வாழ்ந்து முடித்தவன்
85 வரை
95 வரை
வாழ்ந்திருந்தால்...

என்ன எழுதி
ஆறுதல் அடைய
அவனது வார்த்தைகளே

"போனால் போகட்டும் போடா"