NFTECHQ

Friday 31 August 2018


வாழிய பல்லாண்டு
இன்று 31.08.2018  பணிநிறைவு பெறும்
1.தோழர் M. சூரியமோகன் OS தாராபுரம்
2.தோழர் S. லோகனாதன் TT ஈரோடு
3.தோழர் N. அத்தியப்பன் TT திண்டல்
ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்லம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Thursday 30 August 2018


வாழிய பல்லாண்டு
31.08.2018 அன்று பணிநிறைவு பெறும்
NFTE இயக்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் காமராஜ்
NFTE இயக்கத்தின் வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும் NFTE வேலூர் மாவட்ட இணையதளப் பரம்மரிப்பாளருமான தோழர் மதியழகன்
NFTE இயகத்தின் தஞ்சை மாவட்ட வழிகாட்டியும் தஞ்சை மாவட்ட NFTCL இயக்கத்தின் தலைவருமான தோழர் பிரின்ஸ்
ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Wednesday 29 August 2018


கேரளாவுக்கு உதவிக்கரம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு ஒருநாள் அடிப்படைச் சம்பளத்தைக் கொடுத்து உதவிக்கரம் நீட்டுமாறு பி.எஸ்.என்.எல் நிர்வாகம் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆகஸ்ட் மாதச் சம்பளத்தில் இந்த உதவியை வழங்குமாறு 29.08.2018 அன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tuesday 28 August 2018


27.08.2018

ஊதிய மாற்றம்-   பேச்சுவார்த்தை
27.08.2018 அன்று மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்த   நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் இடையே இருதரப்பு  பேச்சுவார்த்தை

நடைபெற்றது.

 

ஊழியர்தரப்பு சார்பாக கொடுக்கப்பட்ட சம்பள விகிதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

குறைந்தப்டச ஊதியம் 18600 ஆக இருக்கலாம் என நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது தற்போது உள்ள குறைந்தபட்ச சம்பளத்தை 2.4 மடங்காக இருக்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.

 

ஊழியர் தரப்பின் சார்பாக

தற்போது உள்ள குறைந்தபட்ச சம்பளத்தை 2.44 மடங்காக அதாவது 19000 ஆக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

ஓய்வூதியப் பங்களிப்பைக் காரணம் காட்டி அதிகபட்ச சம்பளத்தைக் குறைக்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.

 

தேக்கநிலை அடையக்கூடாது என்பதை ஊழியர்தரப்பு சுட்டிக்காட்டி வலியுறுத்தியது.

 

ஊழிடயர்தரப்பின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இது குறித்து மீண்டும் 10.09.2018 அன்று பேச்சுவார்த்தை நடைபெறும்.

 

பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தி முடிக்க ஊழியர்தரப்பு வலியுறுத்தியது.



Thursday 23 August 2018


தோழர் சூரியமோகன்
பணிநிறைவு பாராட்டுவிழா
NFTE பேரியக்கத்தின்  தாராபுரம் கிளைச்செயலாராக பல ஆண்டுகள் பணியாற்றிய  தோழர் சூரியமோகன் அவர்கள் 31.08.2018 அன்று பணிநிறைவு பெறுகிறார்.

தோழர் சூரியமோகன் அவர்களுக்கு 25.08.2018 அன்று தாராபுரத்தில் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெறும்.

Wednesday 22 August 2018


பக்ரீத் வாழ்த்துக்கள்
ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமிய சகோதரர்களால் கொண்டாடப்படுகிறது.

அன்பையும் தியாகத்தையும் உணர்த்துவது பக்ரீத்.

அண்டமெங்கும் அன்பு பொங்கட்டும்.
தியாக உண்ர்வு மனித மனங்களில் மலரட்டும்.


தாராபுரம் கிளை மாநாடு
25.08.2018 அன்று தாராபுரம் கிளை மாநாடு நடைபெறவுள்ளது.
அனைவரும் பங்கேற்பீர்.

Tuesday 21 August 2018




தோழர் ஜீவா பிறந்த தினம்
ஆகஸ்ட் 21


கலை, இலக்கியம், அரசியல், தொழிற்சங்கம், பேச்சாற்றல் என பன்முகத்தன்மை கொண்ட தோழர் ஜீவா பிறந்ததினம் இன்று.


Saturday 18 August 2018


மத்திய அரசு ஓய்வூதியர் நலச் சங்கம்  ஈரோடு
ஆண்டு மாநாடு
ஈரோடு மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் நலச் சங்கத்தின் ஆண்டு மாநாடு ஈரோடு பெரியார் மன்றத்தில் 18.08.2018 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மன்றம் நிறைந்த்து. மகளிர் பங்கேற்பு மகத்தானது.
அருமைத் தோழர் D.மாணிக்கம் அவர்களின் சீரிய தலைமையில் நிகழ்வுகள் சிறப்புடன் அமைந்தன.
கலைஞர், சோம்நாத் சட்டர்ஜி, வாஜ்பாய், ரத்னவேல் பாண்டியன் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இக்கால கட்டத்தில் மறைந்த தோழர்கள், கேரளாவில் இயற்கயின் சீற்றத்துக்கு இன்னுயிரை இழந்தோர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பான ஆண்டறிக்கையை பொதுச்செயலாளர் தோழர் ராஜசேகரன் சமர்ப்பித்தார். வளமான நிதிநிலை அறிக்கையை பொருளர் தோழர் ராமசாமி சமர்ப்பித்தார்.
பொதுச்செயலாளர் தீர்வு காணப்பட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அமைப்பின் அரும்பெரும் பணிகளை பறைசாற்றும் உரை அது.
தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
தோழர்கள் மாணிக்கம், ராஜசேகரன், ராமசாமி ஆகியோர் முறையே தலைவர், பொதுச்செயலர், பொருளர் பொறுப்புகளுக்கு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்கள் ராஜசேகரன், சண்முகம், ராமசாமி, பாலசுப்ரமணியன், மாசிலாமணி ஆகியோரின் சிறப்புமிகு பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஓய்வூதியர்களின் பிரச்னைகள் BSNL ஓய்வூதியர்களின் பிரச்னைகள் மற்றும் மூன்றாவது ஓய்வூதிய மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண உதவியாக அமைப்பின் சார்பாக ரூ 15000 வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.
விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று பங்கேற்பாளர்கள் ரூபாய் 25000 வழங்கினர்.
சிறப்பும் செழுமையும் மிக்க மாநாடாக அமைந்தது.
செயல்பாடுகள் மேலும் சிறக்க வாழ்த்துவோம்.

Thursday 16 August 2018


வாஜ்பாய் விடைபெற்றார்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (16.08.2018) காலமானார்.
3 முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் வாஜ்பாய்.

ஒரு முறை 13 நாட்கள்,
ஒருமுறை 13 மாதங்கள்,
ஒருமுறை 5 வருடங்கள் என
மூன்று முறை பிரதமர் பொறுப்பு வகித்தார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்தார் வாஜ்பாய். அதர்மச் செயலுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு மோடிக்கு அறிவுரை கூறினார். மோடி அதை ஏற்க மறுத்தார். அத்வானி நடத்திய ரத யாத்திரையில், வாஜ்பாய்க்கு ஒப்புதல் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்தவர் வாஜ்பாய்.

இந்துத்துவாவைக் கடைப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராக இருந்த போதும் தனது ஆட்சிக்காலத்தில் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும்  எந்தவொரு செயலையும் அவர் செய்யவில்லை.

2000ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் தொலைத்தொடர்புத்துறை BSNL என்னும் பொதுத்துறையாக மாற்றப்பட்டது.
அரசு ஓய்வூதியம் உள்ளிட்ட NFTE/FNTO/BTEF அமைப்புகளின்
2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற வீரம் செறிந்த 3 நாள் போராட்டம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான்.

அமெரிக்கா சென்றிருந்த வாஜ்பாய் தலையிட்டு கோரிக்கைகளை ஏற்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கும், அமைச்சருக்கும் அறிவுறுத்தினார். அதன் விளைவாக 37A விதி உருவாக்கப்பட்டு அரசு ஓய்வூதியத்தை அரசே வழங்கும் உரிமையைப் பெற்றோம் என்பது நினைவு கூறத்தக்கது.

வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி.


Tuesday 14 August 2018


விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்



அனைவருக்கும் இனிய 72ஆவது விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்.

விடுதலை பெற்றுத் தந்த
தியாகத் தலைவர்களை நினைவில் வைப்போம்.
இந்திய தேசம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க
தங்கள் சுவாசத்தையும் சுகவாச்த்தையும் பறிகொடுத்தோரை நினைவில் கொள்வோம்.
பெற்ற விடுதலையைப் பேணிக் காப்போம்.

Monday 13 August 2018


சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்





மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று (13.08.2018) 89ஆம் வயதில் காலமானார்

10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் மக்களவைத் தலைவராக 2004 முதல் 2009 வரை பணியாற்றினார்.
இந்தியாவில் நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரியவர் சாட்டர்ஜி
சாட்டர்ஜி 1996-இல் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருது அளிக்கப்பட்டது.  

அவரது மறைவுக்கு கொடி தாழ்ந்த அஞ்சலி.


மாற்றல் கொள்கை

2018ஆம் ஆண்டுக்கான மாற்றல் கொள்கை அமலாக்கத்திற்கான உத்தரவுகள் நீண்ட வாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.


ஆகஸ்ட் 13





பிடெல் காஸ்ட்ரோ பிறந்த நாள் இன்று

Thursday 9 August 2018


அவகாசம் கேட்டது நிர்வாகத் தரப்பு
09.08.2018 அன்று ஊதிய மாற்றம் குறித்து நிர்வாகத்த்தரப்பிறகும் ஊழியர்தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஊழியர்தரப்பு கொடுத்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நிர்வாகம் கால அவகாசம் கேட்டுள்ளது.
அடுத்த கூட்டம் 27.08.2018 அன்று நடைபெறும்.


புதிய சம்பள விகிதம்
ஊழியர்தரப்பு
முன்வைத்துள்ள கோரிக்கை


தற்போதைய குறைந்த அடிப்படைச் சம்பளம்

கோரியுள்ள புதிய குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம்

NE-1
7760
19590
NE-2
7840
19790
NE-3
7900
19950
NE-4
8150
20580
NE-5
8700
21970
NE-6
9020
22770
NE-7
10900
27520
NE-8
12520
31610
NE-9
13600
34330
NE-10
14900
37620
NE-11
16570
39980
NE-12
16390
39990

இன்று 09.08.2018 நிவாகத் தரப்புக்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Wednesday 8 August 2018


கலைஞரும் கணிணித் தமிழும்

"1999 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில்ல் சந்தித்தேன். கணிணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கச் சென்றேன்.
அது பற்றி கூறியதும்   கணிணிக்கு தமிழ் மொழி தெரியுமா எனக் கேட்டார். கணிணிக்கு எந்த மொழியும் தெரியாது. அதற்கு 0 மற்றும் 1 இவை இரண்டு மட்டுமே தெரியும் என்றேன். தமிழில் கணிணியில் தட்டச்சு செய்யும் முறை பற்றி விவரித்தேன். ஆர்வமுடன் கேட்டார். அப்ப்போதே கணிணியில் டைப் செய்ய ஆரம்பித்தார். அவர் முதலில் டைப் செய்த வார்த்தை "அண்ணா."
அதற்குப் பிறகு "அகர முதல எழுத்தெல்லாம்".

மிகுந்த மகிழ்ச்சியுடன் கனினீயில் தமிழ் குறித்து ஆய்வரங்கத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதை மேம்படுத்த வேண்டும். எளிமைப்படுத்த வேண்டும் என்றார்.

கில தினங்களில் ஆய்வரங்க்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 3 மணிக்குத் துவங்க்கி மூன்று மணி நேரம் என திட்டமிடப்பட்ட ஆய்வரங்கத்தில் பல்வேறு  பயனுள்ள விவாதங்க்கள் நடத்தப்பட்டன. 6 மணிக்கு நிறைவுற வேண்டிய ஆய்வரங்கம்  இரவு 10 மணிக்கு நிறைவுற்றது. ஏழு மணி நேரமும் இடைவிடாமல் அந்தாஆய்வரங்கில் பங்க்கேற்றாகலைஞ்ர்"

08.08.2018 அன்று இத்த்கவலைக் கூறியவர் திரு மாலன்

Tuesday 7 August 2018


கலைஞர் ஓய்பு பெற்றார்


காவேரிக்கரையில் பிறந்த கலைஞர்
காவேரி மருத்துவமனையில்
இன்று மாலை 6.10 மணிக்கு
நிரந்தர ஓய்வு   பெற்று இயற்கையோடு இணைந்தார்.

மொழிப்போராளியாய் போராட்ட வாழ்வை 14 வயதில் துவங்கி 95 வயது வரை ஒரு போராளியாகவே வாழ்ந்தவர்.

அன்னை அஞ்சுகம் மூலம்
இயற்கை தந்த
இணையற்ற
தலைவர்.

அவர் வாழ்வு பல பாடங்களைக்
கற்றுத் தந்துள்ளது.

நமது ஆழ்ந்த இரங்கல்
கொடி தாழ்ந்த அஞ்ச்சலி

******புகழுரை தொடரும்*******


Friday 3 August 2018


ஆடி 18
தீரன் சின்னமலை நினைவு தினம்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஈரோடு        மாவட்டம் சென்னிமலைஅருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்தீர்த்தகிரி கவுண்டர்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம்தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சிசிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார்ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர்அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று .
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.  ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான்  ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியினரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியதுநெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார்.
நான்காம் மைசூர்ப் போரில்  இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர்அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும்தயாரிக்கப்பட்டன. போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 31800அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
அவர் கூட்டமைப்பில் கவுண்டர்தேவர்வன்னியர், வேட்டுவர்நாயக்கர்நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர்கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், பத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
1801இல் ஈரோடுகாவிரிக்கரையிலும்1802ல் ஓடாநிலையிலும்1804ல் அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 311805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர்.
ஆடி 18 அம்று அவர் தூக்கிலிடப்பட்டதால் அந்த நாளே அவரது நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.