NFTECHQ

Friday, 31 July 2015

வாழிய பல்லாண்டு31.07.2015 அன்று பணி ஓய்வு பெற்ற
திரு மகேந்திரன் DGM
தோழர் முருகேசன் SSS
தோழர் ரங்கசாமி STS
தோழர் புருசோத்தமன் TM
தோழர் ஆறுமுகம் TM
தோழர் கிரிகவுண்டன் TM
தோழியர் ருக்மணி TM
தோழர் துரைசாமி TM
தோழர் சந்திரன் TM
ஆகியோர் பல்லாண்டு நலமுடனும் மகிழ்வுடனும் வாழ வாழ்த்துகிறோம்.

நினைவஞ்சலி

இந்துக்களின் திருத்தலமாம் இராமேஸ்வரத்தில் பிறந்து
கிருஸ்துவர்கள் அதிகமாக வாழும் ஷில்லாங்கில் இறுதி மூச்சை விட்ட அப்துல் கலாமுக்கு
30.07.2015 அன்று

ஈரோடு டெலிபோன்பவனில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்க்கேற்ற

நினைவஞ்சலிக் கூட்டம்


Wednesday, 29 July 2015

மக்களின் அஞ்சலி

பிறப்பு ஒரு சம்பவம். இறப்பு ஒரு வரலாறூ

என்ற வரிகளுக்குச் சொந்தக்காரரான அப்துல் கலாமுக்கு மக்கள்   செலுத்திய

மாற்றம்

ஊழியர்களின் பதவியின் பெயர் மாற்றம் செய்வதற்கு 4நிர்வாகத்துக்கும் NFTE-BSNLEUசங்க்ங்களுக்கும் இடையே உடன்பாடு நடைபெற்றுள்ளது.
விவரம்
TTA - Junior Engineer
Sr.TOA (NE11 & NE12 )-Office Superintendent.
Other Sr.TOAs-Office Associate
Telecom Mechanic -Telecom Technician
Regular Mazdoor- Telecom Assistant

Tuesday, 28 July 2015

கடல்-மண்-வானம்-மலை


கடலோரம் பிறந்து,
மண்ணை நேசித்து,
வானை ஆராய்ந்து,
மலையில் நிரந்தர
உறக்கத்தில் ஆழ்ந்தார்
அப்துல் கலாம்.
எல்லோரையும் நேசித்தவர்.
எல்லோராலும் நேசிக்கப்பட்டவர்.
இந்தியாவின் தென்கோடியாம்
இராமேஸ்வரத்தில்
முதல் மூச்சை விட்டு ,
வடகோடியாம்
ஷில்லாங்க்கில்
பேசிக்கொண்டே
கடைசி மூச்சை விட்டவர்.
ஆற்றலும், அடக்கமும்
ஒருங்கே அமையப் பெற்று எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த அபூர்வ மனிதர்.
மக்களின் குடியரசுத்தலைவராக பணியாற்றியவர்.
இளமையில் வறுமையோடும்,
நடுத்தர வயதில் விண்ணோடும்,
முதுமையில் இளையவரோடும் வாழ்ந்தவர்.
நேர்மறைச் சிந்தனையை மட்டுமே தன் உள்ளத்தில் கொண்டவர்.
தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்று கொண்டவர். அதன் புகழை உலகெங்கும் சொல்லியவர்.
திருச்சி புனிதவளனார் கல்லூரியில்
சம்பத்குமார்,
அப்துல்கலாம்,
அலெக்சாண்டர்
ஆகிய மூன்று பேரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி படித்தனர்.
கீதையையும் பைபிளையும் நேசித்தவர்- வாசித்தவர்.
நல்லரசும்-வல்லரசும் உள்ள நாடாக இந்தியா அமைய வேண்டும் என கனவு கண்டவர்.
அக்னிச் சிறகை எழுதி தனது மனச் சிறகால் விண்வெளியை வலம் வந்தவர்.
மதம், ஜாதி, இனம், மொழி கடந்து அவரது நிரந்தரத்துயிலுக்காக அனைவரும் கண்ணீர் விடுகின்றனர்.
ஓயாது உழைத்தவர்
அமைதியாக உறங்கட்டும்.

அவர் கண்ட கனவுகளில் சிலவேனும் நனவாக நாம் உழைப்பதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.


Friday, 24 July 2015

இன்று அன்று 1991 ஜூலை 24: உலகமயமானது இந்தியா!உணவு, உடை கலாச்சாரத்தில் புதிய போக்கு, நகர உள்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், வானுக்கும் பூமிக்குமாக எழும்பி நிற்கும் புதிய பாணிக் கட்டிடங்கள், புதிய கல்வித் திட்டங்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்று கடந்த 24 ஆண்டுகளில் இந்தியாவின் முகம் ஏகத்தும் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது ‘உலகமயமாதல்’ கொள்கைதான்.
படுமோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்த காலகட்டத்தில், நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு எடுத்த மிகப் பெரிய முடிவு அது. அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், 1991 ஜூலை 24-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான முடிவை அறிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். சோவியத் ஒன்றியம் உடைந்து 15 நாடுகளாகச் சிதறிப்போன காலகட்டம் அது. 1960-கள் தொடங்கி, சோவியத் ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்துவந்த இந்தியா, பொருளாதாரரீதியாகப் பலமிழந்து நின்றது. அதுவரை இராக் மற்றும் குவைத்திடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவந்தது இந்தியா. ஆனால், 1991-ல் இராக்கின் மீது அமெரிக்கா நடத்திய வளைகுடாப் போரால் கச்சா எண்ணெயின் விலையும் கணிசமாக உயர்ந்தது. இந்தப் பிரச்சினைகளால் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் கடன் கேட்டு மன்றாடும் நிலை இந்தியாவுக்கு உண்டானது. பொருளாதாரச் சிக்கலில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கிப்போவதைத் தடுக்க, சுவிட்சர்லாந்திடம் 20 டன் தங்கம் அடகு வைக்கப்பட்டது. லண்டனுக்குக் கப்பல் வழியாக 47 டன் தங்கம் அனுப்பப்பட்டது. சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் நடந்த இந்த நிகழ்வு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. சந்திரசேகருக்குப் பின்னர் பிரதமர் பதவியில் அமர்ந்த நரசிம்ம ராவ் தலையில் இந்தப் பெரும் பொறுப்பு விழுந்தது. இந்த நிலையில்தான் அந்நிய முதலீட்டுக்கு இந்தியாவின் வர்த்தகக் கதவுகளைத் திறந்து வைத்தார் மன்மோகன் சிங். “பொருளாதாரத்தில் உலகின் பலம் மிகுந்த நாடாக இந்தியா எழுந்து நிற்கப்போகிறது” என்று அவர் உறுதியளித்தார்.
அன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் மற்றும் தொழில்துறை திட்டம் இந்தியாவின் பெரும்பாலான தொழில்துறைகளில் தனியார் முதலீடு செய்யுமாறு அழைப்புவிடுத்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் கால்பதித்தனர். இதனால், 1991-ல் 120 கோடி டாலர்களாக இருந்த இந்திய அந்நியச் செலாவணி இருப்பு, 6 ஜூன் 2014-ல் 31,300 கோடி டாலர்களாக உயர்ந்தது. அதே சமயம், பொதுத்துறை முதலீடு குறைக்கப்பட்டது, மக்களுக்கு வழங்கப்பட்ட பல மானியங்கள் குறைக்கப்பட்டன. இனி ‘வறுமைக் கோட்டுக் கீழ்’ என்ற வார்த்தையே இருக்காது என்றனர். ஆனால், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகும் நிலையை உலகமயமாதல் தோற்றுவித்தது வேறு கதை!

நன்றி இந்து தமிழ் 24.07.2015

Thursday, 23 July 2015

மீண்டும் படியுங்கள் பரவச மனதுடன் பாராட்டுக்கள்

ஈரோடு டெலிபோன்பவன் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் 21.07.2015 மற்றும் 22.07.2015 ஆகிய இரு தினங்களில் மேளா நடைபெற்றது. 

 21.07.2015ல் 230, 

 22.07.2015ல் 320 என 

மொத்தம் 550 புதிய ப்ரிபெய்டு சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டன.                             மொத்த வருமானம் ரூபாய் 28660 

மக்களின் ஆதரவும் வரவேற்பும் சிறப்பாக  இருந்தது மகிழ்ச்சிக்குரியது. இந்த அற்புதமான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், தோழர்கள் தோழியர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

முக்கிய குறிப்பு 

இந்தப்பணி அனைத்தும் வாடிக்கையாளர் சேவைமய அதிகாரிகள் (DE,SDE,JTO), ஊழியர்கள் மற்றும் நமது பி எஸ் என் எல் ஊழியர்கள் மட்டுமே செய்திட்ட பணி. இதில் ப்ரான்சைசிக்குன் பங்கு என்பது அணுவளவும் கிடையாது. இது குறித்து மேலும் விபரங்கள் தொடரும்

ஈரோட்டுக்கு 20 சதம்

ஈரோடு நகரம் தரம் உயர்த்தப்பட்டு 20 சதம் வீட்டு வாடைகைப்படி (HRA) வழங்க்கப்படுவத்ற்கான உததரவை மத்திய நி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Friday, 17 July 2015

ரம்ஜான் வாழ்த்துக்கள்
அனைவருக்குகும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்
NEWS FROM CIRCLE UNION

1. Compliance will be sent to Corporate Office on Calculation of vacancies.
2. Legal opinion will be sought and if needed opinion from corporate Office will also be sought on publication of JTO LICE results.
3. On filing of SLP, the decision of the Corporate Office will be followed.
4. With regard to Offg JTO Pay fixation under FR 22 1 a i, instructions will be sent to SSAs wherever problem in fixing of pay is faced.
5. On the recently issued orders on one increment to TTAs appointed after 1.1.2007, SSAs will be asked to do the fixation immediately.

6. Action will be taken for early publication of TTA LICE results.

Wednesday, 15 July 2015


IDA உத்தரவு

01.07.2015 முதல் 2.1 சதவிகிதம் விலைவாசிப்படிக்கான உத்தரவை BSNL  நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

காமராஜர் பிறந்த தினம்

காமராஜர் ஆட்சி அமைப்போம்
என்ற குரல் இன்று பல திக்குகளிலிருந்தும் ஒலிக்கத் துவங்க்கியுள்ளது.
இன்று ஜூலை 15 காமராஜர் பிறந்த தினம்காமராஜர், அவரது ஆட்சி பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்.

மரணத்தைத் தழுவிய மாமன்னன்

வந்தவரெல்லாம் தங்கி விட்டால்

இந்த மண்ணில் நமக்கு இடமேது

வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்

ஜனன  என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்

 

இந்த வரிகளுக்கு இசை வடிவம் தந்த மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வனாதன் இசைப்பதை நிறுத்திக் கொண்டார்.

 தமிழத்தாய் வாழ்த்துக்கு இசை வடிவம் தந்தவர்.

 அகம்பாவமும் அக்ங்காரமும் ஆணவமும் இல்லாத அரும் பெரும் ஆற்றல் கொண்ட இசை வேந்தன்.

 300 இசைக்கருவிகளை வைத்தும் இசை அமைக்கல்லாம். மூன்று இசைகருவிகளை வைத்தும் தேனிசையைத் தரலாம் என்ற இலக்கணம் படைத்தவர்.

 கண்ணதாசனும் இவரும் இணைந்து சாகா வரம் பெற்ற பாடல்களைத் தந்தனர். இந்த ஒற்றுமைக்குக்

காரணம் அவர்கள் இருவருக்கும் பிறந்த தேதியும் மாதமும் ஒன்றாக அமைந்தது ஒரு காரணமோ?

 வறுமையால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்த போது, முய்ன்று இசையை மூச்சாக்கி பலரின் வயிற்றுக்குச் சோறிட்ட இசையின் அக்சய பாத்திரம் எம்.எஸ்.வி.

 பலருக்கு பல பட்டங்களும் விருதுகளும்

அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே வழங்க்கப்பட்டுள்ளன.

ஆனால் எம்.எஸ்.வி.

வாழ்ந்த காலத்தில் அவர் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது வேதனை தருகிறது.

 பல சதனைகளையும் தியாகங்க்கலையும் செய்து சமூக நலன், மக்கள் நலன்,தொழிலாளர் நலன் காத்தவர்களுக்கும் இந்நிலைதான்.

இறந்த பிறகு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பார்கள்.

அதற்கு எம்.எஸ்.வி அவர்களும் விதிவிலக்கல்ல.

ஆனால் மக்களால் அவர் அங்கீகரிக்கப்ட்டார் என்பது என்றும் சாலகாத உண்மை.

 தமிழ், இசை உள்ள வரை அவர் புகழ் வாழும்.

 தமிழும் மறையாது. இசையும் மறையாது.

 “நிரந்தரமானவன் அழிவதில்லை.

எந்நிலையிலும் எனக்கு மரணமில்லை

எம்.எஸ்.வி க்கும் மரணமில்லை.

Tuesday, 14 July 2015

ஒரு தீர்வுக்கான உத்தரவு

நேரடி நியமனம் பெற்ற TTA தோழர்களுக்கு
ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கிட 
 13/07/2015 அன்று நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
01/01/2007 முதல் 07/05/2010 வரை 
 நேரடி நியமனம் பெற்ற   TTA  தோழர்களுக்கு 
இந்த உத்தரவு பொருந்தும்.


அடிப்படைச் சம்பளம் ரூ.13600/=
என்பது    ரூ. 14010/ ஆக மாறும்

அரியர்ஸ் முழுமையான
 காலத்திற்கும் வழங்கப்படும்.

வாழ்த்துகிறோம் தோழர்களே


இப்பிரச்னையில் அக்கறையுடன் செயல்பட்டு  தீர்வு கண்ட நமது NFTE சங்கத்தின் தலைவர்களுக்கு நன்றி.

Tuesday, 7 July 2015

திட்டமிட்ட தீய சதி

BSNL நிர்வாகம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சதியை அரங்கேற்றியுள்ளது. நமது நிறுவனத்திற்கு கணிசமான வருமானம் தருவது லேண்ட்லைன் ப்ராட்பேண்ட் சேவை.

இந்த சேவையை தருவது, பராமரிப்பது, பழுதுகளைச் சரிசெய்வது போன்றவற்றை அவுட்சோர்சிங் என்ற அடிப்படையில்   தனியாருக்கு வழங்க BSNL நிர்வாகம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும்   குறிப்பிட்ட நகரங்க்களைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, ஆந்திராவில் ஹைதராபாத், கர்நாடகாவில் பெங்களூரு, குஜராத்தில் அகமதாபாத்,மகராடிரத்தில் புனே-நாக்பூர், உத்தரப்பிரதேசத்தில் மீரட்-நொய்டா-காசியாபாத், ஹரியானாவில் குர்கான்-பரிதாபாத், உத்தராஞ்சலில் டேராடூன் ஆகிய நகரங்கள் அவுட்சோர்சிங் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நமது தூறையில் TM,RM, SR TOA கேடர்களில் ஏற்கெனவே ஊழியர்கள் அதிகமாக உள்ளனர் என நிர்வாகம் கதறுகிறது. இவர்களின் நிலை என்னவாகும்? TTA கேடரில் உள்ளாவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதா?

ப்ராட்பேண்ட் சேவையை நல்ல முறையில் பராமரிக்கவும் அதை விரிவுபடித்துவதும் அவசியம்.

நம்மிடம் உள்ள மனித வளத்தையும், மனித ஆற்றலையும் வைத்து இதைச்  செய்ய திட்டமிட்டிருக்கல்லாம். அதற்கு வழிவகைகளைக் கண்டு பிடித்திருக்கலாம். இந்த வழியில் சிந்தித்து தொழிற்சங்கங்க்களுடன் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கலாம்.

ஆனால் எதிர்மறைச் சிந்தனையோடு அவுட்சோர்சிங் என முடிவெடுத்தது ஒரு சதியே.
இது யாருடைய ஆணையின் பேரில் யாருக்காக, யார பயன் பெற உருவாக்கப்பட்ட சதி?
இதன் மூலம் தனியார் நமது நெட் ஒர்க்கில்   நுழைய வாய்ப்பு ஏற்படாதா?
இது குறித்து நிர்வாகத்துடன் விவாதிக்க வேண்டும். சேவையை சிறப்பாகத் தர திட்டமிடல் வேண்டும்.
நிர்வாகம் இதை செய்யத் தவறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

நிச்சயம் நமது தலைவர்கள் தகுந்த நடவ்டிக்கை எடுப்பார்கள்.


இது குறித்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மனம் திறந்த ஆய்வு தேவை

Monday, 6 July 2015

திருநெல்வேலி மாவட்ட மாநாடு

05.07.2015 அன்று திருநெல்வேலி மாவட்ட மாநாடு
மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தோழர்கள் பாபனாசம், கணேசன், ராஜூ ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளர் பதவிகளுக்கு  ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
சம்மேளனச் செயலர் தோழர் ஜெயராமன், மாநிலச் செயலர் தோழர் பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நெஞ்சுரமும், நேர்மைத்திறனும் கொண்ட

நெல்லை மாவட்டச் சங்கத்தின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

Sunday, 5 July 2015

கலெக்டர் ஆகிறார் கார் டிரைவர் மகள்: சத்தியமங்கலம் வான்மதி சாதனை

ஐஏஎஸ் தேர்வில் 2 முறை நூலிழையில் வெற்றியை நழுவ விட்ட கார் டிரைவரின் மகள் 3-வது முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் சென்னி யப்பன் என்கிற ராஜா. கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியரின் மகள் வான்மதி (வயது 26), சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பண்ணாரி அம்மன் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார். தனது தோழியின் தந்தையான கஸ்டம்ஸ் கண்காணிப்பாளரைப் பார்த்து தானும் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை வான்மதிக்கு துளிர்விட்டது. இதைத்தொடர்ந்து இவர் மேற்கொண்டு கோபி பிகேஆர் கலை கல்லூரியில் பகுதி நேரத்தில் எம்சிஏ படித்தார்.
இந்நிலையில் கல்பனா என்ற ரிசர்வ் வங்கி அதிகாரி மூலம் சென்னையில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தீவிர பயிற்சிக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதினர். நேர்முகத்தேர்வு வரை சென்றவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், முயற்சியைக் கைவிடவில்லை.
2013-ம் ஆண்டு மீண்டும் தேர் வெழுதினார். முன்பு போலவே நேர்முகத்தேர்வு வரை சென்று நூலிழையில் வெற்றியை நழுவவிட் டார். இருப்பினும் வான்மதி மனம் தளரவில்லை. 3-வது முறையாக கடந்த ஆண்டு முயற்சி செய்தார். அவரது முயற்சிகளின் பலனாக, வெற்றிக்கனி கைகூடியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 152-வது ரேங்க் எடுத்து வான்மதி வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு வங்கி அதிகாரி தேர்வெழுதியதில் வெற்றிபெற்று தற்போது ஈரோடு நம்பியூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக அவர் பணியாற்றி வருகிறார். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்றது குறித்து “தி இந்து”விடம் வான்மதி கூறியதாவது:-
கல்லூரியில் படிக்கும்போது தான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. படித்து முடித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வுக்காக படிக்கப் போகிறேன் என்றதும் மற்ற பெற்றோரைப் போலவே எனது பெற்றோரும் யோசித்தனர். அதற்கு பொருளாதாரப் பிரச் சினைதான் முக்கிய காரணம். என்னால் ஐஏஎஸ் அதிகாரி ஆக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், நான் முதல் முயற்சி யில் நேர்முகத்தேர்வு வரை சென்றதும் என் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. எனது முயற்சிக்கு பக்கபலமாக இருந்தனர்.
ஐஏஎஸ் தேர்வைப் பொருத்த வரையில், அனைத்துப் பாடங்களைப் பற்றிய அடிப்படை அறிவு முக்கியம். நமது அறிவை அவ்வப்போது கூர்மைப்படுத்தி வர வேண்டும். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் போதும், எந்த தடைகளையும் தாண்டிவிடலாம்.

இவ்வாறு வான்மதி கூறினார்.

Saturday, 4 July 2015

கக்கன்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1908). தந்தை, கிராமக் கோயில் பூசாரி. பல சிரமங்களுக்கு இடையே தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். 12-வது வயதில் படிப்பைத் தொடர முடியாததால் ஒரு வீட்டில் பண்ணை வேலை செய்தார்.
ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பி.கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். மதுரை வைத்தியநாத ஐயர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
சிறையில் கசையடி உட்பட பல கொடுமைகளை அனுபவித்தார். 1946-ல் அரசியல் அமைப்பு சட்டசபை தொடங்கப்பட்டது. இவர் அதன் உறுப்பினராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பணியாற்றினார். காமராசர் முதல்வராக பொறுப்பேற்றபோது அவர் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஏற்றார்.
1957-ல் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பொதுப்பணித்துறை, ஹரிஜன நலவாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை களின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். விவசாயத் துறை அமைச் சராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.
இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துகளின் முன்னேற்றத்துக்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தார்.
மேலும் காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது உட்பட ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அமைச்சரான பிறகும் தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தவர்.
அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை.
இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.
1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், அங்கு பணம் செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

இந்திய அரசு இவர் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு கவுரவித்தது. எளிமையின் சின்னமாகவும், பொதுவாழ் வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன் 1981-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் காலமானார்.

Wednesday, 1 July 2015

எட்டு ரூபாயும் 60 கோடியும்

சாதாரண ஏழை எளிய மக்கள் தேநீர் அருந்த குறைந்தபட்சம் எட்டு ரூபாய் செல்வாகிறது.
அந்த ஏழை எளிய மக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் ஓயாது உழைத்திடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு கேண்டீன் உள்ளதாம். அதில் டீ, காபி, டிபன், சாப்பாடு (சைவம் மற்றும் அசைவம்) ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படுகிறதாம்.
இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபாய் 60 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளதாம்.
மக்களுக்கான மானியத்தைக் குறைக்க அல்லது ஒழிக்க மாபெரும் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
நாடாளும் மன்ற உறுப்பினர்கள் குறைந்த விலையில் சாப்பிட ஆண்டு தோறும் மானியம் கூடிக் கொண்டே வருகிறதாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எல்லாமே மானிய மயம்.
மக்களுக்கோ எல்லாமே நாம மயம்.

(கடந்த 27.06.2015 அன்று இரவு 10.30 மணிக்கு புதிய தலைமுறையில் கேட்ட செய்தி இது. இந்த செய்தியை அவர்கள் RTI மூலம் பெற்றார்களாம்)  

பிரெட்ரிக் எங்கெல்ஸ்

பிரஷ்யாவில் (தற்போது ஜெர்மனி) பிறந்தவர். அப்பாவின் விருப்பப்படி, வணிகத்தில் ஈடுபட்டார். நீச்சல், கத்திச் சண்டை, குதிரை சவாரி, வேட்டை யிலும் சிறந்து விளங்கினார்.
மொழிகளைக் கற்பதில் அபாரத் திறன் பெற்றிருந் தார். ‘எனக்கு 24 மொழிகள் தெரியும்’ என்று தன் சகோதரி யிடம் பெருமையடித்துக் கொள்வார். சிறுவனாக இருந்தபோதே மதங்கள், முதலாளித்துவம் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். தடைசெய்யப்பட்ட புத்தகங்களை தேடித் தேடிப் படித்து, புரட்சிகரக் கொள்கைகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார்.
 மான்செஸ்டரில் உள்ள அப்பாவின் நூற்பு ஆலையில் வேலை செய்தபோது முதலாளித்துவத்தின் வரையற்ற அடக்குமுறையை நேரில் கண்டார்.
சிறிது காலம் ராணுவத்தில் இருந்தார். 1842-ல் ராணுவ வேலையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், மோசஸ் ஹெஸ் என்பவரை சந்தித்தார். அவர்தான் இவரை கம்யூனிச ஆதரவாளராக மாற்றியவர். ஜெர்மன்-பிரெஞ்ச் இயர் புக் இதழுக்காக விஞ்ஞான சோஷலிசத்தின் கோட்பாடுகள் குறித்து 2 கட்டுரைகளை 1844-ல் எழுதினார். அதை பாரீஸில் இருந்த கார்ல் மார்க்ஸ் எடிட் செய்தார். பிறகு கார்ல் மார்க்ஸுடன் நட்பு உருவானது.
எங்கெல்ஸ் மிகப் பெரிய அறிஞர், தத்துவ ஞானி. கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தவர். ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து வந்த இவர், பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்ட கார்ல் மார்க்ஸுக்கு உதவுவதற்காக மீண்டும் தந்தையின் நூற்பு ஆலையில் சேர்ந்தார். வியாபாரத்தைப் பெருக்கினார்l
அங்கிருந்தபடியே கார்ல் மார்க்ஸ் பெயரில் நியூயார்க் டிரிப்யூன் இதழில் எழுதி வந்தார். பிறகு குடும்ப நூற் பாலையில் தனக்கான பங்கை விற்றார். அதில் கணிசமான பணம் கிடைக்கவே, கார்ல் மார்க்ஸுடன் அதிக நேரம் செலவிட்டார். மார்க்ஸின் வீட்டுக்கு அருகிலேயே தங்கினார்.
மார்க்ஸுடன் அவ்வப்போது உரையாடி பல புதிய கருத்துகளையும் அவருக்கு வழங்கினார்
‘மதவாதம் மக்களின் வாழ்வை குலைக்கிறது. அது முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினருக்கு சாதகமானது. முதலாளித்துவம் தொழிலாளிகளுக்கு வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி அவர்களை பீதியில் வைத்திருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் பொருளாதார நலனையே சுற்றி வருகின்றன’ என்பது அவரது கருத்து.
கார்ல் மார்க்ஸுடன் இணைந்து பொது உடைமை அறிக்கையை தயாரித்தார். மார்க்ஸ் இறப்புக்குப் பிறகு ‘மூலதனம்’ (Das Capital) நூலை தொகுத்தார். நவீன கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக எங்கெல்ஸ் கருதப்படுகிறார்.
மார்க்ஸ் மற்றும் மார்க்ஸிய சித்தாந்தத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக செயல்பட்டார். மார்க்ஸின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த பிரெட்ரிக் எங்கெல்ஸ் 75-வது வயதில் காலமானார்.


20 வருடங்களுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாத மலைவாழ் கிராமம்


பொள்ளாச்சி அருகே முத்துமலைப்பதி பழங்குடி மக்கள் வீடுகளுக்கு 20 வருடங்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காத நிலை நீடிக்கிறது. வீதி வழியே மின் இணைப்பு சென்றாலும், வீடுகளுக்கு நீட்டிக்கப்படாததால், இங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்டது சொக்கனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் முத்துக்கவுண்டனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமலை திருமுருகன் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள முத்துமலை அடிவாரத்தில் முத்துமலைப்பதி என்ற பழங்குடி மக்கள் கிராமம் உள்ளது. இங்கு காலம் காலமாக வசிக்கும் பழங்குடி மக்கள், வன இடுபொருட்களை சேகரித்து விற்பது, விவசாயக் கூலித் தொழிலை மேற்கொள்வது என அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
முத்துமலைப்பதியில் உள்ள 2 தெருக்களுக்கும் சேர்த்து 3 தெருவிளக்குகள் உள்ளன. பழங்குடி மக்கள் கூறும்போது, ‘வீதிக்கு மட்டுமே மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். வீடுகளில் மின்வசதி இல்லாததால் அரசின் விலையில்லா பொருட்கள் அனைத்துமே பயன்படாமல் கிடக்கின்றன. குழந்தைகள் இரவு நேரத்தில் படிக்க முடியாது. எத்தனையோ முன்னேற்றம் வந்துவிட்டாலும், அதையெல்லாம் பயன்படுத்த மின்சாரம் வேண்டுமே. ரேடியோ தான் எங்களுக்குள்ள ஒரே ஒரு பொழுதுபோக்கு’ என்கின்றனர்.
சேதமான வீடுகள்
தொகுப்பு வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்தே காணப்படுகின்றன. வீடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள், வனத்தினுள் வசிக்கும் இவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

“மக்களே திருமுருகனை

வேண்டுங்கள். அவர் ஏதேனும் ஒரு வகையில் இடைத்தேர்தல் ஒன்றை வரவைபார். அப்புறம் மின்சாரம்  என்ன எல்லாமே கிடைக்கும்”

2 புள்ள் 1

01.07.2015 முதல் அகவிலைப்படி 2.1 சதம் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த பஞ்சப்படி கேட்டு  போராடிய வரலாறும் போராளிகளின் தியாக வரலாறும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.
“என்ன கிழிச்சுது யூனியன்” என்ற கேள்விகளை எழுப்பும் சிலர் இன்றும் மூச்சு விட்டு வாழ்கின்றனர்.

ஒரு வேளை அந்த யூனியன் இல்லாமல் இருந்திருந்தால் அன்றாடக் கூலியில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். 

வாழிய பல்லாண்டு

30.06.2015 அன்று கீழ்க்கண்டோர் பணி ஓய்வு பெற்றார்கள்
1.திரு P.மலைச்சாமி SDE
2.திரு N.கிருஷ்ணமூர்த்தி  SDE
3. திரு S.குணசேகரன் SDE
4. தோழியர் D.பேபி RM
5.  தோழர் P.பாலசுப்ரமணியன் STS
6. தோழர் K. கணேசன் STS
7. தோழர். M. கோவிந்தராஜ் TM (VRS)
8. தோழர். ஜெபமலைமாணிக்கம் STS (VRS)
9. தோழர். S.ஜெயராஜ் STS
10. தோழர். C.கந்தசாமி SSS
11. தோழர். A.மணி TM
12. தோழர். M.மோகன்ராஜ்கும்னார் STS
13. தோழர். R.நாச்சிமுத்து TTA
14. தோழர். K..ராமலிங்கம் STS
15. தோழர். V.ரங்கன் TM
16. தோழர். B சாகுல் அமீது TM


இவர்களின் பணி ஓய்வுக்காலம் நலமுடனும் மகிழ்வுடனும் அமைய வாழ்த்துகிறோம்.