NFTECHQ

Saturday 30 June 2018


வாழிய பல்லாண்டு

30.06.2018 அன்று பணி நிறைவு பெறும்

1.திரு T.R.ஆறுமுகம் DGM (CFA)
2.திரு இக்னேசியஸ் SDE (Electricals)
3.தோழியர் P. கமலம் ATT ஈரோடு
4.தோழியர் S. வசந்தகுமாரி TT கள்ளிப்பட்டி
5.தோழர் V. ராமச்சந்திரன் OS ஈரோடு
6.தோழர் D.R.ராகவேந்திரன் AOS ஈரோடு
7.தோழர் R.அண்ணாதுரை OS ஈரோடு
8.தோழர் R.பரசுராமன் TT ஈரோடு
9.தோழர் C. சுப்ரமணியம் TT பாசூர்
10.தோழர் R.சொக்கலிங்கம் TT  கவிந்தப்பாடி
11.தோழர் N. சுப்ரமணியன் TT வெள்ளகொவில்
12.தோழர் P. செளந்தரராஜன் TT அவல்பூந்துறை
13.தோழர் J. செளந்தரராஜன் TT பவானி
14தோழர் M ரத்னவேல் TT. சென்னிமலை
15.தோழர் M.ஜெகனாதன் TT மூலனூர்

ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.


விலைவாசிப்படி
01.07.2018 முதல் 0.8 சதவிகிதம் விலைவாசிப்படி உயரும்.

ஆக மொயத்த விலைவாசிப்படி 01.07.2018 முதல் 128 சதவிகிதமாக இருக்கும்.

Friday 29 June 2018


பிரதமரின் வெளிநாட்டு

பயணச் செலவு

பதவியேற்ற நான்காண்டுகளில் இதுவரை பிரதமர் மோடி 52 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளதாகவும், இதற்காக 355.30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தகவல் அறிக்கை அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் பீமப்பா காதத், பல்வேறு கேள்விகளுடன் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். காதத்தின் கேள்விகளுக்குப் பிரதமர் அலுவலகம் அளித்த பதில்களை அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பகிர்ந்துள்ளார்.
அதில், கடந்த 48 மாதங்களில் பிரதமர் மோடி, 41 அரசு முறை பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 52 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 2015ஆம் ஆண்டு சென்ற 9 நாட்கள் பயணம்தான் மோடி சென்றதிலேயே அதிக செலவுகளைக் கொண்ட பயணமாக அமைந்துள்ளது. இதற்காக 31.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மிகக் குறைந்த செலவாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூடான் பயணத்தின்போது ரூ.2.45 கோடி மட்டும் செலவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 165 நாட்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் மோடி இருந்துள்ளார். இதற்காக 355.30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் பயணம் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டப்படி கிடைத்துள்ளது. மோடியின் உள்நாட்டுச் சுற்றுப்பயணத்துக்கு எவ்வளவு செலவானது என்ற விவரத்தைப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை.



இருதரப்பு ஊதியக்குழு
3வது ஊதியமாற்றப்பேச்சுவார்த்தைக்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது
நிர்வாகத்தரப்பில் 5 உறுப்பினர்களும்
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக 
5
உறுப்பினர்களும் குழுவில் இடம் பெறுவார்கள். 
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தரப்பில் 
BSNLEU
சார்பாக 3 உறுப்பினர்களும்
NFTE
சார்பாக 2 உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள்.
இதற்காக குழு உறுப்பினர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

ஊதியமாற்றப் பேச்சுவார்த்தை என்ற மிகப்பெரிய நிகழ்வில்
ஊழியர்கள் தரப்பில் வெறும் 5 உறுப்பினர்கள் மட்டுமே 
என்பது சரியல்ல்ல.
முதலாம் ஊதியத்திருத்தத்தில் தோழர்.குப்தா
அன்று இருந்த அனைத்து 9 தொழிற்சங்கங்களையும் பங்கேற்கச்செய்தார்.
இரண்டாவது ஊதியத்திருத்தத்தில்
BSNLEU
சார்பாக 11 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மூன்றாவது ஊதியத்திருத்தம் DOTல் இருந்து BSNLலில்
பணியமர்ந்த ஊழியர்களுக்கு கடைசி ஊதியத்திருத்தமாகும்.
ஊழியர்களுக்கு சம்பளத்தில் பல்வேறு குறைகள் உள்ளன.
குறைகளை விட பல்வேறு குளறுபடிகளும் உள்ளன.
இந்நிலையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட
சிறிய குழு பெருமளவில் விவாதங்களை
முன்வைக்க இயலாத சூழல் உருவாகும்.
ஊதியக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பங்கேற்பு
என்ற நிலையை விட
அனைத்து சங்கங்கள் பங்கேற்பு என்ற நிலையே
தற்போதுள்ள சூழலில் ஊழியர்களுக்கு கூடுதல் பலனளிக்கும்.

மேலும் DPE வாழிகாட்டுதலில் கொடுக்கும் திறன் (AFFORDABILITY) என்ற நிபந்தனையை நீக்காமல் பேச்சுவார்த்தையால் என்ன பலன் இருக்கும் என்பதும் கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கும்.

எனினும் ஒரு துவக்கம் நிகழ்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது

Wednesday 27 June 2018

தொடரும் போராட்டங்கள்
26.06.2018 அன்று டெல்லியில் நடைபெற்ற
BSNL
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவுகள்.

11.07.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில்,
மாநிலத்தலைநகர்களில்,
மற்றும் மாவட்டத்தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம்.

25.07.2018 முதல்
27.07.2018 வரை
தலைநகர் டெல்லியில்
மாநிலத்தலைநகரங்களில்
மாவட்டத்தலைநகரங்களில்
தொடர் உண்ணாவிரதம்

கோரிக்கைகள்
தொலைத்தொடர்பு அமைச்சர் அவர்களே
1.ஊதிய உயர்வு
2.
ஓய்வூதிய உயர்வு
3.ஓய்வூதியப்பங்களிப்பு..
4.BSNL
க்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு என
24.02.2018
அன்று அனைத்து சங்கங்களிடம்
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்.

Sunday 24 June 2018


கவியரசு பிறந்தநாள்

காலத்தால் அழியாத
காவியம் பலதந்த
கவியரசு கண்ணதாசன்
பிறந்ததினம் இன்று ஜூன் 24

Thursday 21 June 2018


சம்பளத் தேதியில் மாற்றம்
மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்கள், JTO, SDE   ஆகியோருக்கு
இனிமேல் மாதச் சம்பளம் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு பதில் அடுத்த மாதத்தின் முதல் தேதி  வழங்கப்படும்.
உதாரணமாக ஜூன் 30ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய சம்பளம் ஜூலை மாதம் முதல் தேதியில் வழங்கப்படும்.மாதத்தின் முதல் நாள் விடுமுறை நாளாக இருப்பின் அதற்கு அடுத்த நாள் வழங்கப்படும்.  

CMD முதல்  DE கேடர் வரை  சம்பளம் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு பதில் அடுத்த மாதத்தின்  
5ஆம் தேதி வழங்கப்படும். 01.07.2018 முதல் இந்த நடைமுறை அமலாகும்.

இது கார்ப்பரேட் அலுவலக உத்தரவு.

Monday 18 June 2018


அவசர மாவட்டச் செயற்குழு
மாற்றல் கொள்கை அமலாக்கம் குறித்து விவாதிக்க இன்று அவசர மாவட்டச் செயற்குழு நடைபெறும்.

இடம் : டெலிபோன்பவன் ஈரோடு


வோடாபோன் - ஐடியா இணைப்புக்கு இன்று ஒப்புதல்


வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்புக்கு இன்று தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் இழப்பை எதிர்கொண்டுவரும் வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்து செயலாற்ற முடிவெடுத்துள்ளன. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உருவாக இந்நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் இந்நிறுவனங்களின் இணைப்புக்குத் தொலைத் தொடர்புத் துறை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜூன் 17ஆம் தேதி அளித்துள்ள பேட்டியில், “வோடாபோன் - ஐடியா இணைப்புக்கு ஜூன் 18ஆம் தேதி ஒப்புதல் அளித்து அதற்கான சான்றிதழை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் வோடாபோன் இந்தியா நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணத்திற்கான ஓர் ஆண்டு வங்கி உத்திரவாதத்தைத் திருத்தியமைக்க ஐடியா நிறுவனம் கேட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை ஏற்று இரு நிறுவனங்களும் தங்களது நிலுவைத் தொகையை செலுத்தி விடும்என்று கூறியுள்ளார்.
இணைப்புக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடாபோன் ஐடியா லிமிடெட் என்ற பெயரில் இயங்க முடிவெடுத்துள்ளன. இந்தப் பெயர் மாற்றம் ஜூன் 26ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நிறுவனத்தில் வோடாபோன் நிறுவனம் 45.1 விழுக்காடு பங்கையும், ஆதித்ய பிர்லா குழுமம் 26 விழுக்காடு பங்கையும், ஐடியா பங்குதாரர்கள் 28.9 விழுக்காடு பங்கையும் கொண்டிருப்பார்கள்.
இந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஈடுபடாத தலைவராக பிர்லா முன்மொழியப்பட்டுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக பாலேஸ் சர்மா நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல புதிய நிறுவனத்தின் புதிய நிதி செயற்பாட்டாளராக ஐடியாவின் தலைமை நிதி அதிகாரி அக்ஷய மூந்த்ரா நியமிக்கப்படவுள்ளார். இணைப்புக்குப் பிறகு இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 23 பில்லியன் டாலர்களாக இருக்கும்.