NFTECHQ

Thursday 16 August 2018


வாஜ்பாய் விடைபெற்றார்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (16.08.2018) காலமானார்.
3 முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் வாஜ்பாய்.

ஒரு முறை 13 நாட்கள்,
ஒருமுறை 13 மாதங்கள்,
ஒருமுறை 5 வருடங்கள் என
மூன்று முறை பிரதமர் பொறுப்பு வகித்தார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்தார் வாஜ்பாய். அதர்மச் செயலுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு மோடிக்கு அறிவுரை கூறினார். மோடி அதை ஏற்க மறுத்தார். அத்வானி நடத்திய ரத யாத்திரையில், வாஜ்பாய்க்கு ஒப்புதல் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்தவர் வாஜ்பாய்.

இந்துத்துவாவைக் கடைப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராக இருந்த போதும் தனது ஆட்சிக்காலத்தில் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும்  எந்தவொரு செயலையும் அவர் செய்யவில்லை.

2000ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் தொலைத்தொடர்புத்துறை BSNL என்னும் பொதுத்துறையாக மாற்றப்பட்டது.
அரசு ஓய்வூதியம் உள்ளிட்ட NFTE/FNTO/BTEF அமைப்புகளின்
2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற வீரம் செறிந்த 3 நாள் போராட்டம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான்.

அமெரிக்கா சென்றிருந்த வாஜ்பாய் தலையிட்டு கோரிக்கைகளை ஏற்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கும், அமைச்சருக்கும் அறிவுறுத்தினார். அதன் விளைவாக 37A விதி உருவாக்கப்பட்டு அரசு ஓய்வூதியத்தை அரசே வழங்கும் உரிமையைப் பெற்றோம் என்பது நினைவு கூறத்தக்கது.

வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி.


No comments:

Post a Comment