NFTECHQ

Saturday 21 May 2016

WHAT NEXT

அடுத்து என்ன?

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் முடிந்தது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

NFTE மற்றும் BSNLEU
ஆகிய ய இரண்டு சங்கங்களுக்கும்
அங்கீகாரம் மற்றும் கவுன்சில்கள் குறித்து உத்தரவுகளும் வெளியாகி விட்டன.

தேர்தல் சமயத்தில் பிரச்சாரங்கள்
வெப்பத்தைக் காட்டிலும்
கடுமையாக இருந்தன.

தற்போதுள்ள
1,63,000 ஊழியர்களில் ஏறத்தாழ
ஒரு லட்சம் ஊழியர்கள்
தன்மானத்துடனும்
சுயமரியாதையுடனும் வாழ
கடந்த காலத்தில்
NFTE   சாதித்த
பல்வேறு அம்சங்கள்  சொல்லப்பட்டன.

நவீனமயம்,தொழில்நுடபவளர்ச்சி,
இலாகாவின் அமைப்பில் மாற்றம்
போன்றவற்றை
விவேகத்துடனும்,
புத்திசாலித்தனத்துடனும்
கையாண்டு ஊழியர்களின்
உரிமைகளையும் நலன்களையும்
காத்திட்ட வரலாறற்று
உண்மைகள் சொல்லப்பட்டன.

2004 முதல்
இளையவர்கள் முதல்
மூத்தவர்கள் வரை
அனைவரும் இழந்திட்ட
உரிமைகள் குறித்து
எடுத்துச் சொல்லப்பட்டன.

போனஸ்,
ஊதிய மாற்றத்தால்  ஏற்பட்ட இழப்புகள்,
பதவி உயர்வில் சொல்லப்பட்ட உரிமைகளும் பலன்களும் இல்லாமை,
ஊதிய தேக்கநிலை,
மருத்துவத் திட்டத்தினால் உண்டான
மன உலைச்சல்கள்
மாற்றல் கொள்கையால்
ஏற்பட்ட அவதிகள்
என   
பல்வேறு அம்சங்கள்
எடுத்து வைக்கப்பட்டன.

BSNLEU அவதூறுகளைஅள்ளி வீசியது.
நாகரீகமற்ற பொய்கள்
நாக்கு கூசாமல் சொல்லப்பட்டன.

ஊழியர்கள் தங்கள் விருப்பத்தை
வாக்குச்சீட்டில்
பதிவு செய்தனர்.

இரண்டாவது ஊதிய உயர்வைக் காலத்தே வாங்காமல் காலதாமதம்,
சம்பள விகிதங்கள்  குறித்து ஆராயாமல் உடன்பாடு,
NEEP  பதவி உயர்வுத் திட்டத்தில் கோட்டை விட்ட பல வரலாற்றுத் தவறுகள்,
2006ல் பென்ஷன்  பங்கீடு பற்றிய
உத்தரவு பற்றிய அக்கறையின்மை
இவற்றில் கவனம் செலுத்த இயலாத,
கவனம் செலுத்த தெரியாத
BSNLEU
49.41 சதவிகித வாக்குகளை
49.56 ஆக மாற்ற செலுத்திய
கவனம் அதீதமானது.

50 சதம் வாங்கி ஒரே சங்கமாக
வர இய்லாமல் போனமைக்கு
வருத்தபட வேண்டாம்
என ஆறுதல் சொலவது நமக்குப் புரிகிறது.

ஒற்றுமை என்பது
NFTE யின் ஒருகை ஓசையாகவே உள்ளது.

ஒற்றுமை என்பது உண்மையாகவும்,
உயிரோட்டமானதாகவும் இருக்க வேண்டும்.
ஊழியர் பிரச்னைகள்  தீர்க்கப்பட வேண்டும் எனபதில் உறுதி வேண்டும்.

ஒரு இயக்கத்தை அகற்ற வேண்டும்.
அந்த இயக்கத்தின் முயற்சியாலோ
அல்லது இணைந்தோ
எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு
வந்து விடக் கூடாது என்ற எண்னம் உள்ளவர்களுடன்
உளப்பூர்வமான ஒற்றுமை சாத்தியமா?

சிந்திக்க வேண்டிய தருணம்.
சிந்திப்போம்.

தோழர் குப்தா வழி காட்டியிருக்கிறார்.
ஒற்றுமையை உருவாக்குவதில்
அவருக்கு நிகர் அவரே
என்பதும் வரலாறு.

செப்டம்பர் 2000
ஒன்றுபட வேண்டும்
என்ற உணர்வு உடைய்வர்கள
ஒன்றுபடுத்தி போராடி
சாதிக்க முடியும்
என்பதும் தோழர் குப்தா
கற்றுத் தந்த பாடம்.

காலத்தின் தேவையை அறிவோம்.
19.05.2016 முதல் 18.05.2019 வரை உள்ள காலம் சவால்கள் பல நிறைந்தது.

அனைவரையும் இணைத்து
ஒற்றுமையை உருவாக்கி
சவால்களைச் சந்தித்து வெற்றி காண்போம்.

ஊழியர் நலனில் அக்கறை
உள்ள அமைப்புகளை இணைத்து போராடுவோம்.

3 ஆண்டு காலம்   என்பது விரைவில் முடிந்து விடும்.

எனவே செயல்பாட்டில்  அவசரமும் அவசியமும் தேவை.

இந்த கருத்துக்களில்  உடன்படுவோருக்கு நன்றி.
உடன்பட மறூப்போர் அறிவுரை கூறவும்.


No comments:

Post a Comment