NFTECHQ

Sunday, 9 September 2018


நாளை நான்காம் கட்ட பேச்சு வார்த்தை
10.09.2018 அன்று ஊதிய மாற்றம் குறித்து நிர்வாகம் மற்றும்  தொழிற்சங்கங்களின் இருதரப்பு பேச்சு வார்த்தை நாளை 10.09.2018 மாலை 3 மணிக்கு நடைபெறும்.


யார் ஏற்பாடோ
யாம் அறியோம்
08.09.2018 அன்று BSNL  தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் (AUAB) நாடாளுமன்ற விவாகாரத்துறை இணை அமைச்சர்  திரு.அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களைச் சந்தித்து மனு கொடுத்தனர். ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்களிப்பு, 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இவையே மனுவில் இருந்த கோரிக்கைகளாம். பிரச்னைகள் குறித்த விபரங்களை இணை அமைச்சர் பொறுமையாகக் கேட்டாராம். தொலைத்தொடர்புத்துறை அமைச்சருடன்ஒரு சந்திப்புக்கு "ஏற்பாடு" செய்வதாகச் சொன்னாராம். தானும் உடன் வருவதாகச் சொன்னாராம். புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் என்று கேட்கிறோம். படிக்கிறோம். இதை தொழிற்சங்கநிலை மாற்றம் என்று சொல்லலாமா?

Thursday, 6 September 2018


வரலாற்றுச் சாதனை

படைத்த பெல் நிறுவனம்

அரசுக்குச் சொந்தமான பெல் நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு முதன்முறையாக ரூ.50,000 கோடியைத் தாண்டியுள்ளது.
நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் கனரக மின்னணு நிறுவனம் (பெல்), உள்நாட்டு உற்பத்திக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது தரையிலிருந்து விண்ணை நோக்கிப் பாய்ந்து செல்லும் ஏழு தொலைதூர ஏவுகணைகளைப் பாதுகாப்புத் துறைக்கு வழங்குவதற்கான ஆர்டரைப் பெற்றுள்ளது. ரூ.9,200 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பெல் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு இயக்குநரான ஆனந்தி ராமலிங்கம் கையெழுத்திட்டுள்ளார்.
மசகான் கப்பல் நிறுவனம், கார்டன் ரீச் கப்பல் கட்டுதல் மற்றும் பொறியாளர்கள் நிறுவனம் ஆகியவை உருவாக்கவுள்ள ஏழு கப்பல்களில் பொருத்துவதற்கான ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான இந்த ஒப்பந்தங்களை பெல் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஆர்டரின் மதிப்பு ரூ.50,000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த நிறுவனம் இதுவரை பெற்ற ஆர்டர்களிலேயே அதிக மதிப்பிலான ஆர்டரும் இதுதான். இந்நிறுவனம் மத்தியப் பாதுகாப்புத் துறைக்கான மின்னணு உபகரணங்களைத் தயாரித்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 5 September 2018


செப்டம்பர் 5
ஆசிரியர் தினம்
எழுத்தறித்தவன் இறைவன் என்றார்கள்.
ஆசிரியப் பணி அறப் பணி என்றார்கள்.
வாழும் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த ஆசிரியர்களுக்கு நன்றி சொல்வோம்.
அவர்களை மனதில் கொள்வோம்.
ஆசிரியர்கள் அனைவரையும் உளமார வாழ்த்துவோம்.


செப்டம்பர் 5
ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்
தந்தை  ராதாகிருஷ்ணன் அவர்களைகோவில் பூசாரி ஆக்க வேண்டும் என விரும்பினார்.
ஆனால் அவருக்கோ படிப்பில் நாட்டம். படித்தார். பட்டம் பெற்றார்.
சென்னை பிரசிடன்சி கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழக்ம் போன்றவற்றில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
மாணவர்களை நேசித்தார்.மாணவர்களும் இவரை நேசித்தனர். மாணவர்கள் தோளில் கைபோட்டு அன்பு காட்டி தோழனாக பழகினார்.
1962ல் குடியரசுத் தலைவரானார்.தனது கருத்துக்களைத் துணிச்சலுடன் சொல்லும் திறன் படைத்தவராகத் திகழ்ந்தார்.

Tuesday, 4 September 2018


நமது மத்திய சங்கத்தின்
முயற்சிக்கு வெற்றி
கடந்த ஜனவரி 28.01.2018ல் JE ஜூனியர் என்ஜினியர் பதவிக்கு நமது ஊழியர்கள் பங்கேற்ற  இலாகா தேர்வு நடைபெற்றது.

தேர்வு மற்றும் தேர்வில் பங்கேற்போர் பற்றிய பிரிதல் இன்றி வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. விளைவு பங்கேற்ற நமது ஊழியர்களின் கனவை கடினமான வினாத்தாள்  கலைத்தது.

நமது மத்திய சங்கம் கேள்வித்தாளில் உள்ள குறைகள் மற்றும் குளறுபடிகள் குறித்து நிர்வாகத்துடன் தொடர்ந்து விவாதிதது. மதிப்பெண்களில் உரிய தளர்வை வழ்ங்க வேண்டும் என வாதிட்டது.இறுதியில் நிர்வாகம் 31.08.2018 அன்று ஒரு உத்தரவை வெளியிட்டது. இந்த உத்தரவு குறைந்த பட்சம் 100 தோழர்களின் JEகனவை நிறைவேற்றும்.

OC மற்றும் OBC பிரிவினர்  தனித்த பாடங்களில் குறைந்தபட்சம் 20 சத மதிப்பெண்களும் மொத்தமாக 30 சத மதிப்பெண்களும் பெர வேண்டும்.
SC/ST யஇரிவைச் சேர்ந்த ஊழியர்கள்
தனித்த பாடங்களில் குறைந்தபட்சம் 15 மதிப்பெண்களும்
ஒட்டுமொத்தமாக 23 சத மதிப்பெண்களும் 
வேண்டும். மொத்த மதிப்பெண்களில் ஏழு மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த மதிப்பெண்தளர்வு இந்த ஒருமுறை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 1 September 2018


விலைவாசிப்படி விர்......
அக்டோபர் 2018 முதல் விலைவாசிப்படி குறைந்த பட்சம் 6 சதம் அதிகபட்சம் 8 சதம் உயரலாம்.

Friday, 31 August 2018


வாழிய பல்லாண்டு
இன்று 31.08.2018  பணிநிறைவு பெறும்
1.தோழர் M. சூரியமோகன் OS தாராபுரம்
2.தோழர் S. லோகனாதன் TT ஈரோடு
3.தோழர் N. அத்தியப்பன் TT திண்டல்
ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்லம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Thursday, 30 August 2018


வாழிய பல்லாண்டு
31.08.2018 அன்று பணிநிறைவு பெறும்
NFTE இயக்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் காமராஜ்
NFTE இயக்கத்தின் வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும் NFTE வேலூர் மாவட்ட இணையதளப் பரம்மரிப்பாளருமான தோழர் மதியழகன்
NFTE இயகத்தின் தஞ்சை மாவட்ட வழிகாட்டியும் தஞ்சை மாவட்ட NFTCL இயக்கத்தின் தலைவருமான தோழர் பிரின்ஸ்
ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Wednesday, 29 August 2018


கேரளாவுக்கு உதவிக்கரம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு ஒருநாள் அடிப்படைச் சம்பளத்தைக் கொடுத்து உதவிக்கரம் நீட்டுமாறு பி.எஸ்.என்.எல் நிர்வாகம் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆகஸ்ட் மாதச் சம்பளத்தில் இந்த உதவியை வழங்குமாறு 29.08.2018 அன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, 28 August 2018


27.08.2018

ஊதிய மாற்றம்-   பேச்சுவார்த்தை
27.08.2018 அன்று மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்த   நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் இடையே இருதரப்பு  பேச்சுவார்த்தை

நடைபெற்றது.

 

ஊழியர்தரப்பு சார்பாக கொடுக்கப்பட்ட சம்பள விகிதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

குறைந்தப்டச ஊதியம் 18600 ஆக இருக்கலாம் என நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது தற்போது உள்ள குறைந்தபட்ச சம்பளத்தை 2.4 மடங்காக இருக்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.

 

ஊழியர் தரப்பின் சார்பாக

தற்போது உள்ள குறைந்தபட்ச சம்பளத்தை 2.44 மடங்காக அதாவது 19000 ஆக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

ஓய்வூதியப் பங்களிப்பைக் காரணம் காட்டி அதிகபட்ச சம்பளத்தைக் குறைக்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.

 

தேக்கநிலை அடையக்கூடாது என்பதை ஊழியர்தரப்பு சுட்டிக்காட்டி வலியுறுத்தியது.

 

ஊழிடயர்தரப்பின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இது குறித்து மீண்டும் 10.09.2018 அன்று பேச்சுவார்த்தை நடைபெறும்.

 

பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தி முடிக்க ஊழியர்தரப்பு வலியுறுத்தியது.



Thursday, 23 August 2018


தோழர் சூரியமோகன்
பணிநிறைவு பாராட்டுவிழா
NFTE பேரியக்கத்தின்  தாராபுரம் கிளைச்செயலாராக பல ஆண்டுகள் பணியாற்றிய  தோழர் சூரியமோகன் அவர்கள் 31.08.2018 அன்று பணிநிறைவு பெறுகிறார்.

தோழர் சூரியமோகன் அவர்களுக்கு 25.08.2018 அன்று தாராபுரத்தில் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெறும்.

Wednesday, 22 August 2018


பக்ரீத் வாழ்த்துக்கள்
ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமிய சகோதரர்களால் கொண்டாடப்படுகிறது.

அன்பையும் தியாகத்தையும் உணர்த்துவது பக்ரீத்.

அண்டமெங்கும் அன்பு பொங்கட்டும்.
தியாக உண்ர்வு மனித மனங்களில் மலரட்டும்.


தாராபுரம் கிளை மாநாடு
25.08.2018 அன்று தாராபுரம் கிளை மாநாடு நடைபெறவுள்ளது.
அனைவரும் பங்கேற்பீர்.

Tuesday, 21 August 2018




தோழர் ஜீவா பிறந்த தினம்
ஆகஸ்ட் 21


கலை, இலக்கியம், அரசியல், தொழிற்சங்கம், பேச்சாற்றல் என பன்முகத்தன்மை கொண்ட தோழர் ஜீவா பிறந்ததினம் இன்று.


Saturday, 18 August 2018


மத்திய அரசு ஓய்வூதியர் நலச் சங்கம்  ஈரோடு
ஆண்டு மாநாடு
ஈரோடு மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் நலச் சங்கத்தின் ஆண்டு மாநாடு ஈரோடு பெரியார் மன்றத்தில் 18.08.2018 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மன்றம் நிறைந்த்து. மகளிர் பங்கேற்பு மகத்தானது.
அருமைத் தோழர் D.மாணிக்கம் அவர்களின் சீரிய தலைமையில் நிகழ்வுகள் சிறப்புடன் அமைந்தன.
கலைஞர், சோம்நாத் சட்டர்ஜி, வாஜ்பாய், ரத்னவேல் பாண்டியன் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இக்கால கட்டத்தில் மறைந்த தோழர்கள், கேரளாவில் இயற்கயின் சீற்றத்துக்கு இன்னுயிரை இழந்தோர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பான ஆண்டறிக்கையை பொதுச்செயலாளர் தோழர் ராஜசேகரன் சமர்ப்பித்தார். வளமான நிதிநிலை அறிக்கையை பொருளர் தோழர் ராமசாமி சமர்ப்பித்தார்.
பொதுச்செயலாளர் தீர்வு காணப்பட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அமைப்பின் அரும்பெரும் பணிகளை பறைசாற்றும் உரை அது.
தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
தோழர்கள் மாணிக்கம், ராஜசேகரன், ராமசாமி ஆகியோர் முறையே தலைவர், பொதுச்செயலர், பொருளர் பொறுப்புகளுக்கு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்கள் ராஜசேகரன், சண்முகம், ராமசாமி, பாலசுப்ரமணியன், மாசிலாமணி ஆகியோரின் சிறப்புமிகு பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஓய்வூதியர்களின் பிரச்னைகள் BSNL ஓய்வூதியர்களின் பிரச்னைகள் மற்றும் மூன்றாவது ஓய்வூதிய மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண உதவியாக அமைப்பின் சார்பாக ரூ 15000 வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.
விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று பங்கேற்பாளர்கள் ரூபாய் 25000 வழங்கினர்.
சிறப்பும் செழுமையும் மிக்க மாநாடாக அமைந்தது.
செயல்பாடுகள் மேலும் சிறக்க வாழ்த்துவோம்.

Thursday, 16 August 2018


வாஜ்பாய் விடைபெற்றார்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (16.08.2018) காலமானார்.
3 முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் வாஜ்பாய்.

ஒரு முறை 13 நாட்கள்,
ஒருமுறை 13 மாதங்கள்,
ஒருமுறை 5 வருடங்கள் என
மூன்று முறை பிரதமர் பொறுப்பு வகித்தார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்தார் வாஜ்பாய். அதர்மச் செயலுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு மோடிக்கு அறிவுரை கூறினார். மோடி அதை ஏற்க மறுத்தார். அத்வானி நடத்திய ரத யாத்திரையில், வாஜ்பாய்க்கு ஒப்புதல் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்தவர் வாஜ்பாய்.

இந்துத்துவாவைக் கடைப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராக இருந்த போதும் தனது ஆட்சிக்காலத்தில் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும்  எந்தவொரு செயலையும் அவர் செய்யவில்லை.

2000ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் தொலைத்தொடர்புத்துறை BSNL என்னும் பொதுத்துறையாக மாற்றப்பட்டது.
அரசு ஓய்வூதியம் உள்ளிட்ட NFTE/FNTO/BTEF அமைப்புகளின்
2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற வீரம் செறிந்த 3 நாள் போராட்டம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான்.

அமெரிக்கா சென்றிருந்த வாஜ்பாய் தலையிட்டு கோரிக்கைகளை ஏற்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கும், அமைச்சருக்கும் அறிவுறுத்தினார். அதன் விளைவாக 37A விதி உருவாக்கப்பட்டு அரசு ஓய்வூதியத்தை அரசே வழங்கும் உரிமையைப் பெற்றோம் என்பது நினைவு கூறத்தக்கது.

வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி.


Tuesday, 14 August 2018


விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்



அனைவருக்கும் இனிய 72ஆவது விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்.

விடுதலை பெற்றுத் தந்த
தியாகத் தலைவர்களை நினைவில் வைப்போம்.
இந்திய தேசம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க
தங்கள் சுவாசத்தையும் சுகவாச்த்தையும் பறிகொடுத்தோரை நினைவில் கொள்வோம்.
பெற்ற விடுதலையைப் பேணிக் காப்போம்.