NFTECHQ

Sunday 9 September 2018


நடந்தது என்ன?
தோழர் செம்மல் அமுதம்

தமிழகம், உத்திரப்பிரதேசம் (கிழக்கு) மற்றும் (மேற்கு), உத்தர்கான்ட் மாநிலங்களில் உள்ள 6945 BSNL Tower களையும் நிர்வகித்து பராமரிக்கும் பொறுப்பை ITI க்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கி BSNL நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது (Advanc Work Order).
இதற்கு Rs 6633.56 கோடி ரூபாய் BSNL ...ITI க்கு வழங்கும்.
நலிவடைந்த பொதுத்துறை
ITI
க்குத் தான் வழங்கப்படுகிறது என்பதால் தொழிற்சங்கங்கள் எதிர்க்கவும் இயலாது.
நலிவடைந்த ITI நிறுவனத்தை BSNL உடன் இனைப்பதை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் Rs 6633 கோடி ரூபாய் நமது பணத்தை ITI க்கு வாரி வழங்கியுள்ளது DOT & BSNL.
இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? குறைந்த பட்சம் தகவலாவது தெரிவிக்கப்பட்டதா?
இப்போது Tower பராமரிப்பு , நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுள்ள நமது ஊழியர்களின் நிலை , எதிர்காலம் என்ன?
பராமரிப்பு பணி என்பது கூட பரவாயில்லை ஒரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது….
Sales & Marketing_of_Passive__Infrastructure …
என்றால் நமது டவர்களை விற்பனை & சந்தைப்படுத்தும் உரிமை ITI க்கு வழங்கப்பட்டுள்ளதின் உள் நோக்கம் என்ன?.
Tower Corporation எதிர்த்து நாம் போராடி வரும் நிலையில் ஒட்டுமொத்த டவரையும் குத்தகைக்கு விடுவதின் மூலம மறைமுகமாக தனது நோக்கத்தை BJP அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது.
ITI நமது Passive Infrastructure களை JIO உள்பட யாருக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு விடலாம் சந்தைப்படுத்தலாம்.
எந்த ஒரு Tender லும் ஒரு பகுதி அரசின் பொதுத்துறைக்கு வழங்கப்பவேண்டும் என்ற விதியை முதலில் நிறைவேற்றி விட்டதின் மூலம் மீதி மாநிலங்களில் உள்ள டவர்களை தனியாருக்கு குத்தகைக்கு தாராளமாக விடமுடியும்.
JIO வும் Airtelம் IDEA வும் வேறு பெயர்களில் Lease க்கு எடுப்பார்கள். கரும்பையும் கொடுத்து தின்பதற்கு கூலியும் கோடிக்கணக்கில் BSNL அவர்களுக்கு வழங்கும்.
Tower Corporation செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே நமது டவர்கள் அனைத்தும் தனியார் கையில்.
நாம் Role Back Tower Corporation என்று தொடர்ந்து போராடுவோம்.
வெற்றி பெறுவோம்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்

நண்றி : மத்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல்
 அமுதம் அவரது முகநூல் பதிவிலிருந்து

No comments:

Post a Comment