NFTECHQ

Sunday 16 September 2018

அநீதியை அழிப்போம்
பாரபடசத்தை வேரறுப்போம்

அநீதி கண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்துப் போராடாமல்
அநீதி களைய முடியாது.
BSNL
நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 15 சதவிகித உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வை அமல்படுத்த லாம் என ஒத்துக் கொண்டு அதற்கான சிபாரிசையும், பரிந்துரையையும் 14.11.2017 அன்று CMD அவர்கள் DOTக்கு எழுத்துபூர்வாகத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வை நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த அநீதியை ஏற்கலாமா? அதிகாரிகளுக்கு கொடுக்கும் 15 சத ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு மறுக்கும் நிர்வாகத்தின் அப்பட்டமான, அநீதியான பாரபடசத்தை அனுமதிக்கலாமா? பாரபட்சத்துக்கு எதிராக கடுமையாகப் போராடிய NFPTE/NFTE இயக்கம் இந்த பாரபட்சத்தை அனுமதிக்கக் கூடாது. ஊழியர்களுக்கும் 15 சத ஊதிய உயர்வைப் பெற வாதிட வேண்டும். போராட வேண்டும். NFTE இயக்கம் தனது பாரம்பரியத்தை இழக்காமல் பாரபட்சம் களைய போராட வேண்டும்.
01.01.2017
முதல் 15 சத ஊதிய உயர்வை நிலுவையுடன் அமல்படுத்துவதை NFTE உறுதி செய்ய வேண்டும். புதிய சம்பள விகிதத்தின் அடிப்படையில் அலவ்ண்ஸ்கள் வழங்க்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் NFTE தலைமை உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரபட்சம் என்னும் பாதகச் செயலை அனுமதிக்கவே கூடாது. வெயில், மழை, இயற்கைச் சீற்றம் என அனைத்துத் தருணங்க்களிலும் கடமை உணர்வோடு அயராது கண்துஞ்சாது உழைக்கும் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பார்படசத்தை அனுமதிப்பது பாதகமான செயலாகும். இதை உணர்ந்து NFTE தகைமை செயல்பட வேண்டும். இந்த அநீதியை, பாரபட்சத்தை எதிர்த்து NFTE துணைக்கு வருவோரை இணைத்துக் கொண்டு களத்தில் கால் பதிக்க வேண்டும்.


                  வரலாற்றுத் தவறு நிகழலாமா?

அதை அனுமதிக்கலாமா?

மத்திய அரசு ஊழியர்களின் எந்த ஒரு சம்பளக்குழுவிலும் ஊதிய மாற்றம் நிகழும்போது புதிய ஊதிய நிர்ணய முறையில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வேற்பாடு இருந்ததில்லை. BSNL நிறுவனத்திலும் முதல் இரு சம்பள மாற்றத்திலும் ஊதிய நிர்ணய முறையில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வேறுபடு இருந்த்தே இல்லை. ஆனால் இம்முறை மட்டும் அதிகாரிகளுக்கு 15 சதம் என சிபாரிசு செய்துவிட்டு ஊழியர்களுக்கு 11 சதம் என்ற அடிப்படையில் புதிய சமபள விகிதங்களை உருவாக்க நிர்வாகம் முயலுகிறது.  சமத்துவம், சமதர்மம் என்பது பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும். மோசமான ஒரு வரலாற்றுத் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருக்கலாமா?
தேக்கநிலையை மட்டுமே அலசி ஆராய்ந்து கொண்டு தீராத வரலாற்றுப் பழிக்கு வித்திடலாமா?


No comments:

Post a Comment