NFTECHQ

Saturday 16 April 2016

வராமலே போன
வாரத்தில் ஐந்து நாள்

வேலை

நாங்கள் வெற்றி பெற்றால் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பதை வரமாகப்
பெற்றுத் தருவோம் என்றது BSNLEU.


இது மிகவும் நல்லதாயிற்றேஎன்ற நமபிக்கையிலும், எதிர்பார்ப்பிலும்  ஊழியர்களும் வாக்களித்தனர்.

2004 முதல் 2016 வரை 12 ஆண்டுகள் முடிந்தன.

ஊழியர்களும் நபிக்கையுடன்
தொடர்ந்து வாக்களித்தனர்.

ஆனால்,
வாரம் ஏழு நாட்கள் என்ற அடிப்படை மாறவில்லை.
வாரத்தில் ஐந்து நாள் வேலையும் வரவில்லை.

கார்ப்பரேட் அலுவலக்த்தில் பணிபுரிவோருக்கு மட்டும் வாரத்தில் 5 நாள் வேலை. மற்றவர்களுக்கு ஏன் கிடையாது? என்று ஒரு   கிடுக்கிப்பிடியைப் போட்டது BSNLEU.

தற்போது கார்ப்பரேட் அலுவலகம் சஞ்சார் பவன் எனப்படும் DOT  அலுவலத்தில் செயல்பட்டு வருகிறது.  அந்தப் பகுதி பாதுகாப்பான பகுதி என்பதால்அது 5 நாள் இயங்குகிறது.
விரைவில் கார்ப்பரேட் அலுவலக்ம் புதிய அலுவலகத்திற்கு மாற்றப்படும்.
அதன்பின்  வாரத்தில் 6 நாள் வேலை அமலாக்கப்படும் என்று நிர்வாகம் கூறியது.

நீண்ட நாள் கழித்து நான்காம் சனிக்கிழமையாவது விடுமுறை தாருங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் மறுக்கப்பட்டது.

இதற்காக் எவ்விதமான இயக்கமும் நடத்தாமல் அமைதியாக் இருந்தது BSNLEU.  

வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றுள்ளனர்.

போராட்டம் இன்றி யாராட்டமும் செல்லாது என்பது வெற்று முழக்கம் மட்டும்தான்.

சாதனைகள் பல படைத்தோம் என்று சொல்லும் BSNLEU ஐந்து நாள் வேலை என்று சொன்ன வாக்குறூதி பற்றி வாய் திறப்பதே இல்லை.

இது மட்டுமல்ல இப்படி காணாமல் போன வாக்குறுதிகள் பட்டியல் தொடரும்.

No comments:

Post a Comment