NFTECHQ

Sunday 17 April 2016

இப்படியும் ஒரு திருட்டு

கேள்வி
உங்கள் பெயர் என்ன?

பதில் தரப்படுகிறது.

உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் தேர்தலில் (மே 16) ஓட்டு போடப் போகிறீர்கள்?

பதில் ஐந்து பேர்.

உங்கள் வங்கிக் கணக்கு எஎன ?
எந்த  வங்கியில் கண்க்கு உள்ளது?

பதில் எதற்காக இந்தக் கேள்வி?

ஒரு ஓட்டுக்கு ரூபாய் 3000 வீதம் மொத்தம் 15000 ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் போடுவத்ற்காகத்தான் கேட்கிறோம் என்று பதில் வருகிறது.

ஆர்வத்தோடு வங்கிக் கணக்கு விபரங்களை தருகிறார்.

உடனே ஒரு கேள்வி.

உங்கள் ஏடிஎம்  கார்டின் ரகசிய எண் என்ன?

அது எதற்கு எங்கிறார் அவர்.

அப்போதுதான் பணம் போட முடியும் என்பது பதில்.

ஏடிஎம் ரகசிய எண்னையும் கொடுத்து விடுகிறார் அவர்.

பத்து நிமிடத்தில் பணம் போடப்பட்டு விடும் என்று சொல்லப்படுகிறது.

15 நிமிடம் கழித்து அவர் ஏடிம் கார்டைப் பயன்படுத்தி 150000 ரூபாயை எடுத்து விடலாம் என  முயற்சி செய்கிறார்.

அதிர்ச்சியால் உறைந்து போகிறார்.

ஏனெனில் அவர் கனக்கில் ஏற்கெனவே இருந்த 18000 ரூபாயைக்  கானோம்.

போடப்பட்டுவதாகச் சொன்ன 15000 ரூபாயும் இல்லை.

ஏமாறுபவர்கள் உள்ள வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

எந்த ஒரு தேர்தலிலும் பொய் சொல்பவர்களை நம்பாதீர்கள். 

No comments:

Post a Comment