NFTECHQ

Friday 8 April 2016

என்னதான் சொல்கிறது

அந்தக் கடிதம்

அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளது.
அதன் தமிழாக்கம் வருமாறு
கடித எண்
NO BSNL/7-2/SR/2016 தேதி 06.04.2016

பெறுதல்

பொதுச் செயலர்
BSNLEU
புதுடெல்லி

பொருள்: போராட்ட அறிவிப்பு சம்பந்தமாக

தங்களின்  04.04.2016 தேதியிட்ட கடிதம் சம்பந்தமாக இந்தக் கடிதம் தரப்படுகிறது.

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் அறிவிக்கப்படு 10.05.2016 அன்று நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள முதன்மைச் சங்கம் இலாபத்துடன் கூடிய இன்செண்டிவ்
பிரச்னைக்காக தர்ணா போராட்டம் என அறிவிப்பு கொடுத்துள்ளது.

இப்பிரச்னை குறித்து நிர்வாகம் பலமுறை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
எனவே இந்த தருணத்தில் இந்தப் பிரச்னைக்காக போராட்டம் என்பது முழுவதும் அர்த்தமற்றது.
விதிகளுக்கு முரணானது. தேவையற்றது.

04.04.2016 தேதியிட்ட தங்களின் கடிதத்தில் நிறுவனத்தின் தலைவரும் (CMD) NFTE சங்கமும் இரண்டு இலக்கத் தொகையை இன்செண்டிவ் ஆக வழங்க ரகசிய உடன்பாடு போட்டு விட்டதாக தெரிவித்துள்ளீர்கள். இவ்வாறு கூறுவது அபத்தமானது மட்டுமல்ல முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
நிர்வாகம் இப்படிப்பட்ட தங்களின் கடிதத்தை மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை சரியில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்த்தித் தரும் நடவடிக்கைகளில்  ஈடுபடக் கூடாது என உங்க்களுக்கு அறிவுரை கூறுகிறோம்.

மேலும் நிர்வாகம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காத உங்கள் BSNLEU சங்கம் இரண்டு இலக்க இன்செண்டிவ் முடிவு என்பதை எவ்வாறு கூறமுடியும்?

இது உண்மைக்குப் புறம்பான கூற்று மட்டும்ல்லாது இந்த் பொய்ச் செய்திக்கு பெருத்த விளம்பரம் கொடுத்து அமைப்பின்  பெருமைக்கு சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

இது போண்ற பொய்யான தவல்களை அனைவரும் பயன்படுத்தும் இணையதளத்தில் வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் மீண்டும் உங்க்களுக்கு அறிவுரை கூறுகிறோம்.

இன்செண்டிவ் குறித்து  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் தங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்கும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் இச் சூழ்நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தேவையற்றது என்பது தங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நிறுவனத்தின் பொதுவான நலனைக் கருத்தில் கொண்டும், உடறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டும் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை சுமுகமாக நடத்திட நிர்வாகத்துடன் ஒத்துழக்குமாறு வேண்டுகிறோம்.


ஊர் முழுதும் பொய்கள் ஊர்வலம் வரும் வேளையில் உண்மையை உணரவே இந்த்க் கடிதம் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment