NFTECHQ

Friday 27 February 2015

இனியவன்

பொள்ளாச்சி- வேலைக்குப் போகும் வாலிபர்கள் தங்கும் அறையில் அவனது நண்பனுடன் தங்கியிருந்தான். அனைவருடனும் இனிமையாகப் பழகும் பண்பு  உடையவன். எனவே ஆண்,பெண்,இளையவர், மூத்தவர் என பாகுபாடு இல்லாமல் பழகினான். அவன் உடல் அழகும் அனைவரையும் கவருவதாக இருந்தது கூடுதல் சிறப்பு. திருமணம் ஆகாத இளம் வாலிபன் தொழிற்சங் கத்தின் மீது அவனுக்கு ஈர்ப்பு  இருந்தது. இது போதாதா? அவனை பொள்ளாச்சி கிளையின் செயலராக தேர்வு செய்ய. அந்த கிளையில் அரசியல் ரீதியாக செயல்படும் சிலர் இருந்தனர். ஒருவர் பின்னாளில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் இலாகா பணியில் இருந்தவரை NFPTE  சங்கத்தில் இருந்தார். மற்றொருவர் எம்.ஜி.ஆரின் அபிமானி. அவரும் NFPTE  சங்கத்தில்தான் இருந்தார். இவைகளுக்குக் காரணம் அனைவரையும் அணைத்துச் செல்லும் பாங்கு கொண்ட தோழர்
எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் தான்

அவர் விரும்பவில்லை என்றாலும் இயக்கத்தின் தேவை கருதி மாவட்டச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொள்ளாச்சியில் இருந்து மாற்றல் பெற்று கோவை வந்தார். அவர் மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக உளமார பாடுபட்டார். மாற்றுச் சங்கத்தின் பொதுச் செயலராக இருந்த ஒரு தோழரை அந்த பதவியை விட்டு விட்டு NFPTE சங்கத்தில் இணைய வைத்தார். அது அன்று ஒரு இமாலய சாதனை. தோற்றத்தில் சாது. ஆனால் பிரச்னை என்று வந்து விட்டால் நிர்வாகத்திடம் விட்டுக் கொடுக்காமல் போராடுவது அவரது இயல்பு. தலமட்ட போராட்டங்களில் போராடி விழுப்புண் பெற்றார். குன்னூர் மாவட்டத்தில் மாற்று தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு சென்று அதில் பங்கேற்று அதற்காக தண்டனை பெற்றார்.    

நிதானம், உறுதி இரண்டும் அவரது பண்புகள். அகில இந்திய சங்கத்தின் பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவை தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு என்பதாக அவர் எங்கும் வெளிக்காட்டிக் கொளளவில்லை. இது அவரின் தனிச் சிறப்பு.

அவர் 28.02.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார். ஈரோடு மாவட்டம் கோவை மாவட்டத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த நீங்கா  நினைவுகளுடன் தோழர் கோபாபாலகிழுஷ்ணணை வாழ்த்துவோம்.
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.








No comments:

Post a Comment