NFTECHQ

Wednesday 11 February 2015

பிப்ரவரி 11

சிந்தனைச் சிற்பி என்று போற்றப்படும் ம.சிங்காரவேலர் மறைந்த தினம் இன்று. 1860 பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, வக்கீல் அங்கியை எரித்து, தன் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். இந்தியாவில் தொழிற்சங்கங்களை உருவாக்கிய முதல் தலைவர் சிங்காரவேலர். சென்னை தொழிலாளர் சங்கம் என்ற சங்கத்தை முதன் முதலில் இந்தியாவில் ஏற்படுத்தினார். 1925 ஆம் ஆண்டு சென்னை மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். சிங்கார வேலரின் விருப்பப்படி அவரின் 10ஆயிரம் நூல்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிடம் வழங்கப்பட்டது.

*****************
பிப்ரவரி 11,1990 சிறையிலிருந்து மண்டேலா விடுதலை


தென்னாபிப்ரிக்காவின் காந்தி என்று போற்றப்படும் நெல்சன் மண்டேலா, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள் இன்று. 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொறுப்புக்கு வந்தார். இவரது போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட ஆங்கிலேய அரசு மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டியது. இதனால் 1964 ஆம் ஆண்டு ஜூன் 12ல் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இவரின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகியது. இதனால் அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெ க்ளார்க் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மண்டேலாவின் விடுதலையை அறிவித்தார். அதற்கடுத்த நாளே சிறையிலிருந்து மண்டேலா விடுவிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு வயது 71.

No comments:

Post a Comment