NFTECHQ

Monday, 23 March 2015

பகத்சிங்

பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் சாஹீது (மாவீரன்) பகத்சிங்என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுஅமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
 ‘சாஹீது பகத்சிங்என அழைக்கப்படும் பகத்சிங்அவர்கள், 1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள பங்காஎன்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.
விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு
தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த சௌரி சௌராவன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம்என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து நவ்ஜவான் பாரத் சபாஎன்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.
லாகூர் கொலை வழக்கு
1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனைஎதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு தொழில் தகராறு சட்ட வரைவுஎன்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். 
இறப்பு
சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத்என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.

Wednesday, 11 March 2015

பிஎஸ்என்எல் சொத்து மதிப்பு

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10.03.2015 மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்
முதல் பத்து இடங்களில் இந்திய நிறுவனங்கள் விவரம் வருமாறு:
ரிலையன்ஸ் ரூ. 3,67,583 கோடி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ரூ.2,52,413 கோடி),
ஹெச்டிஎப்சி (ரூ. 2,25,757 கோடி),
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ரூ. 1,94,164 கோடி),
என்டிபிசி லிமிடெட் (ரூ. 1.79,554 கோடி),
ஆர்இசிஎல் (ரூ. 1.52,852 கோடி),
பவர் கிரிட் கார்ப்பரேஷன் (ரூ. 1,39,589 கோடி), எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (ரூ. 95,777 கோடி),
 செயில் (ரூ. 91,961 கோடி),

 பிஎஸ்என்எல் (ரூ. 89,333 கோடி).

விற்கத் துடிக்கும் அரசு

நஷ்டத்தில் செயல்படும் ஏர் இந்தியா, எம்.டி.என்.எல்., ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் உள்ளிட்ட 65 பொதுத் துறை நிறுவனங்களில், 65 நிறுவனங்கள் மூடப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் அனந்த் கீதே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
5 பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படவுள்ளன. அதில், கைக்கடிகாரம், டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் 3 பிரிவுகள் அடங்கும். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, தானாக ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் உரிய நிதி பெற்றுக் கொண்டு ஒய்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது என்றார்.
எனினும், மூடப்படவுள்ள பிற பொதுத் துறை நிறுவனங்களின் பெயர்களை மத்திய அமைச்சர் அனந்த் கீதே வெளியிடவில்லை.
மானிலங்க்கள் நட்டத்தில் இயங்கினால் அவற்றை விற்பார்களோ?

இந்தியா நடத்தில் இயங்கினால் இந்தியவையும் விற்பார்களோ?

Saturday, 7 March 2015

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களிலேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.


கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி! 


ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.  


மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட்டோமென்று கும்மியடி!  


நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.  


கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.  


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! 


வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.


காதலொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!   

Tuesday, 3 March 2015

தோழன் P.ஜெயராமன்

ஈரோடு மாவட்டத்தில் NFPTE/NFTE இயக்கத்தின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் மிகச் சிறப்பாக தன்னை அர்ப்பணித்து செயல்பட்ட அன்புத் தோழன் P.ஜெயராமன் அவர்களுக்கு 26.02.2015 அன்று பணி நிறைவு பாராட்டு விழா 26.02.2013 சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் மாலி, செல்வராஜன், பங்காரு, யாசின், லாசர், குல்சார் வாழ்த்துரை வழங்கினர்.
உணசர்ச்சி மிக்க ஏற்புரையை தோழர் P. ஜெயராமன் நல்கினார்.
அவர் பல்லாண்டு வாழ்க பயனுற வாழ்க நலமுடன் வாழ்க

மகிழ்வுடன் வாழ்க என வாழ்த்துகிறோம்.












Sunday, 1 March 2015

வேலை நிறுத்த மாற்றம்

மார்ச் 17 முதல் நடைறுவதாக அறிவிக்கப்பட்ட்டிருந்த்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 21,22 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளது.
காரணம் என்ன?

தெளிவான விபரங்கள் பிறகு.

என்ன அது 4,44,200

80 சி -   ரூ.1.5 லட்சம்
80
சிசிடி - ரூ.50 ஆயிரம்
வீட்டுக்கடன் மீதான வட்டி கழிவு - ரூ. 2 லட்சம்.
80
டி சுகாதார காப்பீடு - ரூ.25 ஆயிரம்
போக்குவரத்து படி சலுகை - ரூ.19 ஆயிரத்து 200

ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 200 ஆகும்.

தாத்தாவின் கடைசி ஆசை:

தான் எழுதிய படுகளத்தில் பாரத தேவி நூலை வண்ணப் பிரதியாக பதிப்பிக்க வேண்டும் என்பது தியாகி ஐ.மாயாண்டி பாரதியின் கடைசி ஆசை. பொருளாதார நெருக்கடியால் அந்த ஆசை நிறைவேறாமலேயே கண்ணை மூடிவிட்டார்.
சாமானியருக்கும் சுதந்திர வேட்கையை தூண்டும் மாயாண்டி பாரதியின் கட்டுரைகள் அடங்கிய நூல் படுகளத்தில் பாரத தேவி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் புத்தகங்களை அச்சடித்து 2-ம் பதிப்பை வெளியிட்டாலும், இந்த நூலை வண்ணப் பதிப்பாக வெளியிட ஆசைப்பட்டார். இதற்காக இன்னும் சில கட்டுரைகளைச் சேர்த்து அட்டையில் சிறு மாற்றம் செய்து, கூடுதல் பக்கங்களுடன் 3-ம் பதிப்பை தயார் செய்திருக்கிறார். ஆனால், அதற்கான நிதி ஆதாரம் இல்லாததால் அச்சகத்தில் தேங்கிக் கிடக்கிறது மாயாண்டி பாரதியின் கடைசி ஆசை.
இதுகுறித்து மாயாண்டி பாரதியின் பேத்தி கலாபாரதி தி இந்து-விடம் கூறியதாவது:
சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது மதுரை ரேஸ் கோர்ஸில் தாத்தாதான் தேசியக் கொடி ஏற்றுவார். இந்த குடியரசு தினத்துக்கும் அவருக்கு அழைப்பு அனுப்பி இருந்தார் ஆட்சியர். எப்போது விடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து குளிக்கப் போய்விட்டார். குளித்துவிட்டு வரும்போது தடுமாறி விழுந்ததில் தோள் பட்டை எலும்பு முறிந்துவிட்டது. அதனால் கொடியேற்றப் போகமுடியவில்லை. அத்தோடு படுத்த படுக்கையாகி விட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, படுகளத்தில் பாரத தேவி புத்தகத்தை என் கண்ணை மூடுவதற்குள் கலரில் பார்த்துவிட வேண்டும். மதுரையில் பாரத மாதாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் ஆகிய இரண்டைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா. படுகளத்தில் பாரத தேவி புத்தகத்தை தாத்தா காசுக்கு விற்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொது நிகழ்ச்சிகளிலும் இலவசமாகத்தான் கொடுத்தார்.
புத்தகத்தை வண்ணப் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க 40 ஆயிரம் ரூபாய் ஆகும் என்றார்கள். அவ்வளவு பணம் இல்லாததால் புத்தகத்தை வெளிக் கொண்டுவர முடியவில்லை. தாத்தாவுக்கு மத்திய அரசின் தியாகிகள் பென்ஷனும் மாநில அரசின் பத்திரிகையாளர் பென்ஷனும் சேர்த்து மொத்தம் 27,500 ரூபாய் வந்து கொண்டிருந்தது.
மருந்து செலவு, சாப்பாட்டுச் செலவு போக எஞ்சிய பணத்தை தன்னைத் தேடிவரும் இயலாதவர்களுக்கும் தாத்தா கொடுத்துவிடுவார். தீக்கதிர் மணி என்பவரின் தங்கை மகளை தனது செலவில் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். மதுரை அருகே நிலையூரில் தியாகிகளுக்காக இரண்டரை சென்ட் இடம் கொடுத்தது அரசு. அந்த இடத்தை தியாகிகள் நூலகம் அமைக்க இலவசமாக கொடுத்துவிட்டார் தாத்தா.
வாடிப்பட்டி அருகே தெத்தூரில் 1970-ல் தாத்தாவுக்கு அரசு கொடுத்த ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அவரது கடைசி ஆசைப்படி அங்கே பாரதமாதா மணிமண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல, படுகளத்தில் பாரத தேவி நூலின் வண்ணப் பதிப்பை வெளிக் கொண்டுவரவும் யாராவது உதவி செய்ய வேண்டும் என்று கண்கலங்கினார் கலாபாரதி.

Friday, 27 February 2015

நல்லகண்ணுவுக்கு விருது



அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையாக தொண்டாற்றியதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் தீஸ்டா செடல்வாட் ஆகியோருக்கு தலா ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள காயிதே மில்லத் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை இந்த ஆண்டு முதல் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடிப்பவர்களுக்கு விருதுகள் வழங்குகிறது. முதல் விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளரான தீஸ்டா செடல்வாட் ஆகியோர் பெறுகின்றனர்.
இது தொடர்பாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விருதுகளை தேர்வு செய்யும் குழுவில் இந்திய அரசின் முன்னாள் செயலாளர் மற்றும் எஸ்.ஐ.இ.டி அறக்கட்டளையின் தலைவர் மூசா ராசா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வி.வசந்தி தேவி, டாக்டர்.தேவசகாயம், பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். தேர்வுக் குழுவினர் இரண்டு முறை கூடி, விருது பெறுபவர்களை இறுதி செய்தனர்.
ஜனநாயக மாண்புகளை பாதுகாப்பதற்காக 90வது வயதிலும் ஓயாது போராடி வரும் அரசியல் தலைவர் ஆர்.நல்லகண்ணு, மனித உரிமைகள் எந்த வகையில் மீறப்பட்டிருந்தாலும் அதை எதிர்த்து போராடி வருபவரான நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்என்ற அமைப்பின் செயலாளர் தீஸ்டா செடல்வாட் ஆகியோர் இந்த ஆண்டின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் தலா ரூ.2.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். விருது வழங்கும் விழா மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.

இனியவன்

பொள்ளாச்சி- வேலைக்குப் போகும் வாலிபர்கள் தங்கும் அறையில் அவனது நண்பனுடன் தங்கியிருந்தான். அனைவருடனும் இனிமையாகப் பழகும் பண்பு  உடையவன். எனவே ஆண்,பெண்,இளையவர், மூத்தவர் என பாகுபாடு இல்லாமல் பழகினான். அவன் உடல் அழகும் அனைவரையும் கவருவதாக இருந்தது கூடுதல் சிறப்பு. திருமணம் ஆகாத இளம் வாலிபன் தொழிற்சங் கத்தின் மீது அவனுக்கு ஈர்ப்பு  இருந்தது. இது போதாதா? அவனை பொள்ளாச்சி கிளையின் செயலராக தேர்வு செய்ய. அந்த கிளையில் அரசியல் ரீதியாக செயல்படும் சிலர் இருந்தனர். ஒருவர் பின்னாளில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் இலாகா பணியில் இருந்தவரை NFPTE  சங்கத்தில் இருந்தார். மற்றொருவர் எம்.ஜி.ஆரின் அபிமானி. அவரும் NFPTE  சங்கத்தில்தான் இருந்தார். இவைகளுக்குக் காரணம் அனைவரையும் அணைத்துச் செல்லும் பாங்கு கொண்ட தோழர்
எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் தான்

அவர் விரும்பவில்லை என்றாலும் இயக்கத்தின் தேவை கருதி மாவட்டச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொள்ளாச்சியில் இருந்து மாற்றல் பெற்று கோவை வந்தார். அவர் மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக உளமார பாடுபட்டார். மாற்றுச் சங்கத்தின் பொதுச் செயலராக இருந்த ஒரு தோழரை அந்த பதவியை விட்டு விட்டு NFPTE சங்கத்தில் இணைய வைத்தார். அது அன்று ஒரு இமாலய சாதனை. தோற்றத்தில் சாது. ஆனால் பிரச்னை என்று வந்து விட்டால் நிர்வாகத்திடம் விட்டுக் கொடுக்காமல் போராடுவது அவரது இயல்பு. தலமட்ட போராட்டங்களில் போராடி விழுப்புண் பெற்றார். குன்னூர் மாவட்டத்தில் மாற்று தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு சென்று அதில் பங்கேற்று அதற்காக தண்டனை பெற்றார்.    

நிதானம், உறுதி இரண்டும் அவரது பண்புகள். அகில இந்திய சங்கத்தின் பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவை தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு என்பதாக அவர் எங்கும் வெளிக்காட்டிக் கொளளவில்லை. இது அவரின் தனிச் சிறப்பு.

அவர் 28.02.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார். ஈரோடு மாவட்டம் கோவை மாவட்டத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த நீங்கா  நினைவுகளுடன் தோழர் கோபாபாலகிழுஷ்ணணை வாழ்த்துவோம்.
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.








11000 கோடி



பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின்
வளர்ச்சிக்காக
ரூ.11,000/= கோடி முதலீடு செய்யப்படும் என தொலைத்தொடர்புத் துறை
அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்
 நாடாளுமன்றத்தில் 25.02.2015 அன்று 
தெரிவித்துள்ளார்.
கூடுதலாக 14421- 2G செல் சேவை டவர்கள் 10605 -3G செல் சேவை டவர்கள் நிர்மாணிக்கப்படும்.
லேண்ட்லைன்சேவையை மேம்படுத்த  ரூ.600 கோடி செலவிடப்படும்.
 தொலைபேசி நிலையங்களை நவீனப்படுத்த ரூ.350 கோடி செலவிடப்படும்.
வாடிக்கையாளர்களின் தேவையறிந்து BSNL,MTNL சேவைகளை
அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்ற நடைபெற்ற தினத்தில் அமைச்சர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் நமது தலைவர்களைச் சந்தித்து மனுவைப் பெற்றுக் கொண்டு அவர்களிடம்
இந்தத் தகவலகளைத் தெரிவித்திருந்தால் அவர் போற்றுதலுக்கு உள்ளாகியிருப்பர்.

Wednesday, 25 February 2015

ட்ராய் முடிவு

ஒரு தொலைத்தொடர்பு  நிறுவனத்தின் தொலைபேசி அல்லது மொபைல் இணைப்பிலிருந்து மற்றொரு தொலைத்தொடர்பு
நிறுவனத்தின் தொலைபேசி அல்லது மொபைல் இணைப்பைத் தொடர்பு கொண்டால் அதற்காக ஒரு நிறுனம் மற்றொரு நிறுவனத்திற்கு IUC எனப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தற்போது இந்தக் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 20 பைசா. இதை 14 பைசாவாகக் குறைக்க ட்ராய் முடிவு செய்துள்ளது.
லேண்ட்லைனிலிருந்து
தொடர்பு கொண்டால் அதற்கு IUC கட்டணம் கிடையாது என்றும் ட்ராய் முடிவு செய்துள்ளது. இது பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குப் பலன் தரும்.  ஏனெனில் பி.எஸ்.என்.எல் 1.7 கோடி லேண்ட்லைன் இணைப்புகளுடன் அந்த சேவையில் முதலிடம் வகிக்கிறது.


இதன் மூலம் கட்டணங்கள் குறையலாம்.

CALL RATES MAY FALL



Call rates may fall as Trai cuts interconnection usage charges Interconnection usage charges reduced to 14 paise per minute from the current 20 paise Older operators with more subscribers and bigger networks tended to make money from this charge, while smaller operators ended up paying a charge, on a net basis. Photo: Mint New Delhi: In a move that could lead to lower call rates, the Telecom Regulatory Authority of India (Trai) on Monday reduced interconnection usage charges to 14 paise per minute from the current 20 paise. Interconnection usage charges are payable by a telco whose subscriber makes a call, to the telco whose subscriber receives the call. The charge is essentially payable by the first telco for using the second telco’s network. This means older operators with more subscribers and bigger networks tend to make money from this charge, while smaller operators end up paying a charge, on a net basis. The move is likely to be welcomed by smaller and newer operators, while the larger telcos are likely to contest the new tariff. Analysts had mixed reactions on the decision. “This move of Trai is very positive and healthy sign for the telecom industry. However, since the tariffs in India are lowest in the world, and in view of high spectrum costs and taxes faced by the telecom operators, they may not be able to pass on the benefit of reduced termination charges to the consumer in full,” said Hemant Joshi, partner at Deloitte Haskins and Sells. A Mumbai-based telecom analyst with a multinational brokerage firm said, “The operators will have to pass on the reduction, as smaller operators will have room to reduce tariffs and eat into customer market share. It is difficult to say that there could be a tariff war again as the overall debt of the sector is a little high.” Calls originating from and ending in land phones will not have any interconnection charges, Trai added. “To promote investment in, and adoption of, wireline networks, so that they may become an effective vehicle for the delivery of high-speed Internet in the country, the Authority has decided to prescribe FTC (fixed termination charge) as well as MTC (mobile termination charge) for wireline to wireless calls as zero,” Trai said in a statement on the new interconnection charges. Termination charges for international incoming calls have been increased to 53 paise per minute, from the current 40 paise. The number of fixed line connections in the country has been falling for several years now. The mobile subscriber base at the end of 2014 reached an all-time high of 943.9 million, while landline connections are only 27 million. State-run Bharat Sanchar Nigam Ltd (BSNL) has the most landline phone subscribers with 62.71% market share, followed by state-owned Mahanagar Telephone Nigam Ltd (MTNL) with 13.04%. Others with fixed line services include Bharti Airtel Ltd with 12.55% market share, Tata Teleservices Ltd with 5.98% and Reliance Communications Ltd (R-Com) with 4.39% market share. Videocon’s Quadrant, Vodafone India Ltd and Sistema Shyam TeleServices Ltd together account for 1.2% market share. In the mobile services segment, Bharti Airtel is leader with a 23.01% market share followed by Vodafone with 18.93%, Idea Cellular Ltd 15.95%, R-Com 11.26%, BSNL 8.62%, Aircel 8.33%, Tata Teleservices 7.01% and Uninor 4.62%. Sistema Shyam, Videocon Telecom and MTNL together account for about 2% mobile services market share. Trai reviews the interconnection charges every two-three years, but was unable to do it since the current interconnection regime came into place in April 2009, as the issue was pending in the Supreme Court. The new charges are a consequence of the consultation process started by the telecom regulator in November 2014.

Saturday, 21 February 2015

உணர்வும் உணவும்

நமக்கு உணவும் உயிரும் தந்து நம்மை நேசித்த மண்.

உணவும் உயிரும் தந்ததால் நாம் நேசித்த மண். இந்த் மண்ணைப் பாழ்படுத்தி நம்மையும் பாழாக்கும்

மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சையில் 201.02.2015 அன்று பெருந்திரள் தர்ணா.

சிறப்பு அம்சங்கள்
தோழர் சி.கே.மதிவாணன் அவர்களின் சிறப்பான
தலைமை.
BSNL  தொழிலாளர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து பங்க்கேபு.
உனர்வாலும் அறிவாலும் உரைக்கபட்ட தலைவர்களின் பேச்சு.
தஞ்சைத் தோழர்களின் அற்புதமான ஏற்பாடுகள்.
காலை துவங்கியதிலிருந்து மாலை முடியும் வரை ஆளில்லாத நாற்காலியே இல்லை எனும் அளவுக்கு முழுமையாகப் பங்க்கேற்ற தோழர்கள்.
மண் காக்க,
மண்ணின் மைந்தர்களின்
 வாழ்வு காக்க,
இந்த மண்ணையே நம்பி உழைத்து, உண்டு, உறங்கி வாழும் விவசாய்த் தொழிலாளித் தோழர்களின்
வாழ்வு காக்க
நடைபெற்ற இப் போராட்டம்

ஒரு வரலாறு.