NFTECHQ

Saturday 5 May 2018


மார்க்ஸ் 201
மே 5 மார்க்ஸ் 201ஆம் பிறந்த தினம்
ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.
கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும். மிகவும் பிற்போக்கான கடந்த காலத்தையே திரும்பத் திரும்ப உற்பத்திசெய்வதில் நாமும் கொஞ்சம் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற சங்கடமான உண்மையை நாம் உணர்வதற்குத் தடையாக இருக்கும் திரையை அது அகற்ற வேண்டும். இறுதியாக, அது பீத்தோவனின் சிம்பனியைப் போல சக்தி கொண்டிருக்க வேண்டும்: அதாவது பெரும் மக்கள் திரள் அனுபவித்துக்கொண்டிருக்கும் தேவையில்லாத துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் எதிர்காலம் ஒன்றின் முகவர்களாக மாற அது நம்மைத் தூண்ட வேண்டும்; தான் கொண்டிருக்கும் அசலான விடுதலைக்கான சாத்தியத்தை மனிதகுலம் உணர்வதற்கான உந்துதலை அது தர வேண்டும்.
46 லிவர்பூல் தெரு, லண்டன் என்ற முகவரியில் 1848 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் அளவுக்கு வேறு எந்த அறிக்கையும் மேற்குறிப்பிட்டவற்றை ஒருங்கே இதுவரை சாதித்ததில்லை. இரண்டு இளம் ஜெர்மானியர்கள் சேர்ந்து எழுதிய அறிக்கை அது. ஒருவர் கார்ல் மார்க்ஸ், 29 வயது தத்துவவாதி. இன்னொருவர் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸ், வயது 28, மான்செஸ்டர் ஆலைக்கு வாரிசுதாரர்.

எழுத்து வன்மை,   
அரசியல் சித்தாந்தப் படைப்பு
என்ற வகையில் இந்த அறிக்கைக்கு நிகராக வேறெதையும் எக்காலத்திலும் சொல்ல முடியாது.

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலம் முழு விடுதலை பெற இப்படி ஒரு தத்துவத்தை யாரும் தர இயலாது.

இதனால்தான் மார்கஸ் மாமனிதன் என போற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment