NFTECHQ

Monday 5 November 2018


DOT செயலருடன் பேச்சுவார்த்தை
தொலைத்தொடர்புத்துறைச்  செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்களுடன்
02.11.2018
அன்று BSNL அனைத்து சங்கத்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஏழு மாதங்கள் கடந்த பின்பும் அமைச்சர்
அளித்த உறுதிமொழிகள் செயல்படுத்தப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

ஊதிய மாற்றம்
ஊதிய மாற்றம் குறித்து சில விளக்கங்களையும் கேள்விகளையும்
BSNL
நிர்வாகத்திடம் DOT எழுப்பியுள்ளதாம்..
உரிய பதில் கிடைத்தபின் ஊதியமாற்றம் குறித்த பரிந்திரை நவம்பர் 2018 இறுதிக்குள்
அமைச்சரவையின்  செயலருக்கு அனுப்பப்படும்  என DOT செயலர் தெரிவித்துள்ளார்..

4G அலைக்கற்றை ஒதுக்கீடு
4G அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும்
விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு
அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஓய்வூதியப்பங்களிப்பு
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு  குறித்து
சாதகமாக பரிந்துரைக்கப்பட்டு
மத்திய அரசின் செலவுகள்  சம்பம்தமான துறையின் பரிசீலனைக்கு
ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஓய்வூதிய மாற்றம்
01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை சம்பள மாற்றத்துடன் இணைக்காமல் அமலாக்க வேண்டும் என்பது சம்பந்தமாக MEMBER(SERVICES) அவர்களுடன் விவாதிக்கப்படும்.

நேரடி நியமன ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பங்களிப்பு உயர்த்தப்பட வேண்டும்
என்ற கோரிக்கை குறித்து  BSNL நிர்வாகமே முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.. 

ஆக, பேச்சு வார்த்தை நடைபெற்றிருக்கிறது என்பது மகிழ்ச்சி.

ஆனால் எந்த  ஒரு கோரிக்கைக்கும் உறுதியான, இறுதியான முடிவு உருவாக வில்லை என்பது திருப்தியற்ற நிலையே.

ஊழியர்கள் தங்கள் பணியை உரிய காலத்திற்குள்முடிக்க வேண்டும் என அறிவுரை நல்கும் நிர்வாகத் தலைமை தனது  பணியையும் உரிய காலத்திற்குள் முடித்து ஊழியர் நலன் காத்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவ்றா?



No comments:

Post a Comment