NFTECHQ

Saturday 5 January 2019


ஜனவரி 6
தோழர் குப்தா நினைவு தினம் 

ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6.

ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பது அரிது. அப்படிப்பட்ட அரியதொரு தோழமை நெஞ்சம் படைத்த மாமனிதன் அவர்.
கடைநிலை ஊழியர்களின் வாழ்வுக்காக சிந்தித்து செயலாற்றி வெற்றி பெற்ற தலைவன்.
அவரது பலம் உள்ளதை உள்ளபடி பேசுவது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மை இல்லாத தலைவன்.
இப்படி ஒரு தலைவன் இனி உருவானால் அது அரிது.
அவர் போராட்டம் என்று அறிவித்தால் பந்தயக் குதிரை போல் தொழிலாளிகள் பாய்ந்து போராடிய காலம் அது. அவரது போராட்ட அறிவிப்புகள் மதிக்கப்பட்டன.அவரது காலத்தில் போராட்டங்கள் விடியலைத் தந்தன. வெளிச்சத்தைப் பாய்ச்சின.
அவர் பங்கேற்கும் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் எழுத்து பூர்வமான விமர்சனக் கேள்விகளையும் "காதல் கடிதங்கள்" எனக் கூறிய தலைவன்.
BSNL ஓய்வூதியர்கள் உலகின் மிகப்பெரிய பாக்கியசாலிகள்.அவரது காலத்தில் நிறுவனமானதால் ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இல்லையேல்.....?????? அந்த நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
உயிரும் உணர்வும் உள்ள வரை போற்றப்பட வேண்டிய ஒப்பில்லா தலைவன் குப்தா.

No comments:

Post a Comment