NFTECHQ

Wednesday 14 November 2018


நவம்ர் 14

குழந்தைகள் தினம்

நேருவின் 129ஆவது பிறந்த தினம்

தியாக வாழ்க்கை

ஐசிஎஸ் அதிகாரியாகும் நோக்கத்தோடு லண்டன் சென்ற நேரு, தேர்வெழுதும் வயதை அடையாததால் பாரிஸ்டர் பட்டத்தோடு இந்தியா திரும்பினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரை அரசியல் நோக்கி இழுத்தது. சிறைவாசங்களில் கழிந்த வாழ்க்கை நேருவினுடையது. நோயுற்றிருந்த மனைவி கமலாவும் நேருவுடன் போராட்டங்களில் பங்கேற்றார். சிறை சென்றார். சகோதரிகள் விஜயலெட்சுமி, கிருஷ்ணாவும் சிறைபட்டிருக்கிறார்கள். 1931 டிசம்பர் முதல் 1935 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே சிறையில் இல்லாமல் வெளி மாபெரும் ஜனநாயகர்
நேருவின் அரசியல் பயணத்தை ஒற்றை வார்த்தையில் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், ஜனநாயகம் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சியிலும் மக்களிடத்திலும் இருந்த அபாரமான செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சர்வாதிகாரியாகவும்கூட ஆகியிருக்கலாம் நேரு. ஆனால், எதிர்க்கட்சிகளே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை ஆழமாக மதித்த அவர், கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் எல்லோரும் தன்னைக் கேள்வி கேட்க அனுமதித்தார்.

தீவிரமான வாசகர்

நேரு சிறந்த வாசகர். எவ்வளவு வேலைப்பளுவுக்கு இடையிலும் தவறாது வாசித்தவர். மே 21, 1922-க்கும் ஜனவரி 29, 1923-க்கும் இடைப்பட்ட நாட்களில் மட்டும் அவர் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை 55. சிறைவாசத்தின்போது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள், டிஸ்கவரி ஆஃப் இந்தியா, சுயசரிதை ஆகிய மூன்று நூல்களும் அவரது எழுத்தாளுமையின் உதாரணங்கள்.

மூன்றாம் பார்வை

அமெரிக்கா, ரஷ்யா என்று உலக நாடுகள் இரண்டுபட்டு நிற்க, ‘அணிசேராக் கொள்கை’யை முன்னிறுத்தி மூன்றாம் உலக நாடுகளை ஒருங்கிணைத்தவர் நேரு. அவர் உருவாக்கிய ‘பஞ்சசீலக் கொள்கை’ உலக நாடுகளின் நல்லுறவுக்கு ஓர் சாசனம்.

சமதர்மக் கனவு

இந்தியாவை ஒரு சோஷலிஸ நாடாக வளர்த்தெடுக்க விரும்பியவர் நேரு. அந்தக் கனவின் வெளிப்பாடுதான் ஐந்தாண்டுத் திட்டங்கள். சோஷலிஸத்துடன் முதலாளித்துவத்தின் சாதகமான அம்சங்களையும் கலந்து கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் தோன்ற அவரே வழிவகுத்தார். அவர் நிறுவிய தேசிய நிறுவனங்கள் அவர் காண விரும்பிய இந்தியாவுக்கான அடித்தளங்கள்.

No comments:

Post a Comment