NFTECHQ

Wednesday 14 November 2018


வருவாய் விவரங்கள் உண்மையா?

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் விவரங்களை மறுமுறை தணிக்கை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாய் விவரங்களைக் குறைத்து தவறாக வெளியிட்டு வருவதாக அரசு சந்தேகித்துள்ளது. ஆதலால் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதிநிலை விவரங்களை மறுமுறை விரிவாகத் தணிக்கை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறையின் வருவாயிலிருந்து அரசுக்கும் பங்கு கிடைக்கிறது. நிறுவனங்கள் தங்களது விவரங்களைத் தவறாகத் திரித்து வழங்குவது அரசின் வருவாய்க்குச் சாதகமாக இருக்காது.
இதில் முக்கியமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்லுலார், டாடா டெலி, ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஜனவரியின் முதல் வாரத்தில் ஆறு தணிக்கை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த ஒன்பது மாதக் காலத்தில் நிறைவடைந்துவிடும். தணிக்கை நடவடிக்கை நடைபெறும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பும்.

இது நமக்குக் கிடைத்த தகவல். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment