NFTECHQ

Monday 26 January 2015

குதூகலம் தரும் குடியரசு

 

1947 ஆகஸ்ட் 14 வரை அரசர்களிடமும்,
அந்நியர்களிடமும்  நம் தாய்த்திருநாடு அடிமைப்பட்டுக் கிடந்தது.  யாதொரு உரிமையும் இன்றி, அல்லல்கள் பல அனுபவித்து சோக வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர்.
காந்தியடிகளின் அகிம்சைப் போரும், பல ரின் தியாக வாழ்வும், பலரின் உயிர்த் தியாகங்ககளும் 1947 ஆகஸ்ட் 15 அன்று தேசம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தன.
இறையாண்மை மிக்க சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நாடாக இந்திய தேசம்  மா வேண்டும் என் சிந்தனையின் விளைவுதான் குடியரசு.
இந்தியாவின் சமூக, கலாச்சார, அரசியல் சூழலுக்கேற்ப, எழுதப்பட்ட அரசியல் சட்டம் தேவை என்று உணரப்பட்டதால் அரசியல் சட்ட நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் தலைமையில் அந்த அரும்பணி நிறைவேறியது.
உலகிலேயே மிக நீண்ட, எழுதப்பட்ட அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது.
1949 நவம்பர் 26-ம் தேதி புதிய அரசியல் சட்டம் இயற்றி முடிக்கப்பட்டு தீர்மானம் மூலம் ஏற்கப்பட்டது. ஆனால், 1950 ஜனவரி 26-ம் தேதிதான் அது அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
அன்றுதான் இந்தியா அதிகாரப்பூர்வமாக குடியரசு நாடானது.
“மக்களால், மக்களுக்காக, மக்களின்” அரசு என்பதுதான் குடியரசின் அடிப்படைத் தத்துவம்.
உலகில் சில நாடுகளில் இன்னும்  மன்னராட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் மலர்ந்து மீண்டும் சர்வாதிகார ஆட்சி உருவான நாடுகளும் உண்டு.
ஆனால் நமது தேசம் இன்னும் ஜனநாயகம் உள்ள குடியரசாக திகழ்ந்து வருவது போற்றுதலுக்குரியது.
இதில் சில குறைகள் உண்டு. ஆனால் இதுவன்றி மாற்று உண்டோ? தவறு செய்த மிகப்பெரிய பல
தலைவர்களை மக்கள் வாக்குச்சீட்டு அல்லது வாக்கு எந்திரம் மூலம் தண்டித்திருக்கிறார்கள். இனியும் தண்டிப்பார்கள்.
மக்களுக்காக தேசபக்த உணர்வோடு நல்ல ஆட்சியை நடத்தத் தவறினால்  மக்கள் தண்டிப்பார்கள்.
இதுவே குடியர்சு என்னும் மக்களாட்சியின் மகத்துவம்.
நமது நாட்டில் இது நிலைக்கும். நீடிக்கும்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment