NFTECHQ

Monday 12 January 2015

விவேகானந்தர்



சிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவரான சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். தத்துவம், ஐரோப்பிய நாடுகளின் வரலாறு ஆகியவற்றைப் பயின்ற இவர், இறை உணர்வு குறித்து அறிந்து கொள்வதற்காக 1881ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து அவரது சீடர் ஆனார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இந்து மதத்தின் புகழை உலகம் முழுவதும் நிலை நிறுத்தினார். 1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமயங்கள் மாநாட்டில் விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவு உலகப் புகழ் பெற்றது. அவரது கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தன. அவர் நிறுவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகளை அமைத்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளான ஜனவரி 12ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment