NFTECHQ

Thursday 2 October 2014

வாழ்க்கை

எளிமையான வாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் ஒரு முறை கட்சிக்காகத் திரட்டப்பட்ட நிதியுடன் வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ரிக்‌ஷாக்காரர் ‘‘ஏன் ரிக்‌ஷாவில் போகலாமே?’’ என்று கேட்க அதற்கு என்னிடம் பணமில்லை’’ என்றார் ஜீவா. ‘‘ஏன் உங்கள் கையில் இருக்கும் உண்டியலில் அவ்வளவு பணமிருக்கிறதே, அதிலிருந்து கொஞ்சம் கொடுக்கலாமே’’ என்று ரிக்‌ஷாக்காரர் சொல்ல அதற்கு ஜீவா அது என்னுடைய பணமில்லை. கட்சிக்காகத் தொண்டர்கள் கொடுத்த நிதிஎன்றாராம்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் அரசுத் தொழிற்சாலை ஒன்றுக்காக இயந்திரங்கள் வாங்கியபோது அந்த நிறுவனம் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கமிஷனாகத் தர, அதை லஞ்சம் எனக் கருதி வாங்க மறுத்தார் காமராஜர். இது எங்கள் நிறுவனத்தின் வழக்கம், லஞ்சம் அல்லஎன்று அந்த நிறுவனத்தின் தலைவர் கூற அப்படியானால், அந்த கமிஷன் தொகைக்கு உரிய எந்திரம் ஒன்றைத் தந்துவிடுங்கள்என்று காமராஜர் கூறினாராம்.
அனண்ணா முதல் அமைச்சரான போது விலை உயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் அவரது வீட்டுக்கு ஒரு லாரியில் கொண்டு வரப்பட்டன.  அவர் மிகவும் கோபத்துடன் அவற்றை திருப்பி அனுப்பி விட்டார். அப்போது அவர் தனது உதவியாளரிடம் உறுதியாகச் சொன்னார் அரசாங்கப் பொருள் என்ற ஒன்று எனது வீட்டுக்கு வருமேயானால் அது தொலைபேசி ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும்
மறைந்த தமிழக அமைச்சர் கக்கன தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் நோயுற்று சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்.அவரது பெயரைக் கேட்டு அதைப் பதிவும் செய்து கொண்டு அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார். படுக்கை வசதி இல்லாத காரணத்தால் வெராண்டாவில் படுக்க வைக்கப்படுகிறார்.
ஒரு அரசு விழாவுக்காக  மதுரை வந்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திடீரென மதுரை மருத்துவமனையைப் பார்வையிட வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவிக்கிறார். மருத்துவமனை முழுமையும் ஆய்வு செய்கிறார். அப்போது வெராண்டாவில் படுக்க வைக்கப்பட்டுள்ள கக்கனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவருக்கு வழக்கமான கோபம் வ்ருகிறது. மருத்துவமனையின் பொறுப்பாளர்களைப் பார்த்து இவர் யார் தெரியுமா என வினவுகிறார். அங்கு  மெளனம் நிலவுகிறது. பிறகு அவர் யார் அவர் யார் எனக் கூறி விட்டு கக்கனின் அருகில் சென்று அவர் அருகில் அமர்ந்து அவரது உடல் ந்லம் குறித்து விசாரிக்கிறார். தனது ஆட்சியில் தங்க்களை இப்படி ந்டத்தி விட்டார்களே எனக் கூறி அதற்காக வருத்தம் செரிவிக்கிறார். மருத்துவமனைக்குள் காலி படுக்க்கைகளே இல்லையா என வினவுகிறார். அனைத்து படுக்கைகளிலும் நோயாளிகள் இருக்கிறார்கள் என பதில் வருகிறது.  வழக்கமான தயாள குணத்துடன்  தனது சட்டைப் பையிலிருந்து பணத்தை அள்ளி எடுத்துக் கொடுத்து கக்கன அவர்களுக்குப் படுக்கை வசதி செய்யச் சொல்கிறார்.

இப்போதும் இபடிப்பட்ட சில நல்லக்கண்ணுகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment