NFTECHQ

Saturday, 13 April 2013

தினம் ஒரு கேள்வி – ஒன்பது.



அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்களாக் கப்பட்டனர். அதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான CGHS மருத்துவ மணைகளில் மருத்துவ வசதி மறுக்கப்பட்டது. எனவே BSNLMRS மருத்துவத் திட்டம் கொண்டு வந்தது NFTE. அந்த அருமையான மருத்துவதிட்டம் BSNLEU காலத்தில் சின்னாபின்னமானது. பல்வேறு கட்டுப்பாடுகள் தன்னிச்சையாக தினிக்கப்பட்டன. அந்த சலுகை இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் என முடிவு செய்யப்பட்டது. ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த மருத்துவப்படி முழுமையாக நிறுத்தப்பட்டது. நிர்வாகத்தின் இச் செயல்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது BSNLEU. வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கு இணையான சிறந்த வசதியினை அபிமன்யூ ஏன் கேட்டுப் பெறவில்லை? நாம் மத்திய அரசு ஊழியர்களாக இல்லாத போது மத்திய அரசு ஊழியர்களுக்கான CGHS கட்டண விகிதங்களை ஏன் ஏற்றுக் கொண்டார்? ஊழியர்கள் தங்கள் மருத்துவச் செலவில் ஒரு பகுதியை மட்டும் ஏற்குமாறு BSNLEU தலைவர்கள் ஒப்புக் கொண்டது ஏன்?
நன்றி: சென்னை இணைய தளம்.

Thursday, 11 April 2013

தேர்தல் சிறப்புக் கூட்டங்கள்



தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபிராமன் மற்றும் தோழர் தமிழ்மணி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்றனர். ஈரோடு புறக் கிளை, பொதுமேலாளர் அலுவலகக் கிளை, பவானி கிளை ஆகியவற்றில் சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. மூன்று கூட்டங்களிலும் திரளாக ஊழியர்கள் பங்கேற்றனர். தோழியர்கள் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் NFTE வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
தோழர் T.ராஜேந்திரன் தலைமையேற்றார். தோழர்கள் பட்டாபிராமன், தமிழ்மணி, குமார், V.செல்வராஜன், K.ராஜமாணிக்கம், யாசின் ஆகியோர் பங்கேற்றனர். தோழர் பட்டாபிராமன் தனது உரையில் 78.2 அகவிலைப்படி இணைப்பு, போனஸ், பதவி உயர்வு, எஸ்.சி, எஸ்.டி ஊழியர்களுக்கான இட ஒதுக்கீடு, நிறுவனத்தை காத்திட வேண்டிய அவசியம் போன்ற பல்வேறு பிரச்னைகள் பற்றி விரிவாகப் பேசினார். அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் தோழர் N.சுந்தர்





சிறப்புரையாற்றினார்.

Monday, 8 April 2013

தினம் ஒரு கேள்வி – எட்டு.



போக்கு வரத்து படி உட்பட சில படிகளை 01.04.2013 முதல் நிறுத்திவிட  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்படிபட்ட உத்திரவை 16.04.2013 க்கு முன் வெளியிட வேண்டாம் என பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையா?   12.06.2012 உடன்பாட்டின்படி படிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க!

தினம் ஒரு கேள்வி – ஏழு



தேர்வு இல்லாமல் TTA பதவி உயர்வு பெற்று தருவதாக டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் வாக்களித்தது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். அத்தோடு 10+2 கல்வி தகுதி இல்லாத ஊழியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு மூலம் TTA தேர்வு பெறும் வாய்ப்பினை பெற்றுத் தந்த NFTE  சங்கத்தை குறை கூறி வந்தது. பல வாக்குறுதிகளை சாதாரணமாக மறந்து விட்டது போல இந்த வாக்குறுதியையும் மறந்து விட்டது. 10+2 கல்வி தகுதி இல்லாத டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் தேர்வு எழுத முடியாது என பி.எஸ்.என்.எல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. இப்படியாக டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு துரோகம் இழைத்தது. அதே சங்கம் தேர்தல் வருவதால் எந்த திட்டத்தை குறை கூறி வந்ததோ அதே தகுதி தேர்வு முறை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளிக்கிறது வெட்கம் இல்லாமல். அதன் இரட்டை வேடத்தை ஊழியர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

Saturday, 6 April 2013

தேர்தல் சிறப்பு கூட்டம்





        

ணைந்து முயல்வோம்! 
ணைந்து முடிப்போம்!!


NFTE க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழகம் முழுமையிலும் சென்று விளக்கி வருகிறார் தமிழ் மாநிலச் செயலர்
தோழர் பட்டாபிராமன்
ஏப்ரல் 10 புதன் கிழமை ஈரோடு மாவட்டம் வருகிறார்.
அன்போடு வரவேற்போம்!
மாநில  துணைச் செயலர் தோழர் யாசின் .
அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் தோழர் N.சுந்தர்
இணைந்து கொள்வார்கள்.
திரண்டு வருக!

Wednesday, 3 April 2013

தினம் ஒரு கேள்வி – ஆறு


பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளை வீணாகக் கழித்து விட்டது. நேரடியாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களின் எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்கவில்லை. அந்த ஊழியர்களின் பணி ஓய்வு பலன்கள் குறித்து இன்று வரை தீர்வு காணப்படவில்லை. அது மட்டுமல்ல அவர்களுக்கு மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல 30 சதம் ஊதிய நிர்ணயம் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 01.01.2007 க்குப் பிறகு நேரடியாக நியமனம் பெற்ற JTO, JAO களுக்கு ஐந்து ஆண்டு உயர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு பாதகமான  இந்த வேறுபாட்டை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் அனுமதித்தது ஏன்?  
நன்றி: சென்னை இணைய தளம்.

தினம் ஒரு கேள்வி – ஐந்து


விருப்ப ஓய்வு திட்டத்தையும், கட்டாய ஓய்வு திட்டத்தையும் தடுத்து விட்டதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். ஆனால் அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் பி.எஸ்.என்.எல் வாரியம் ஒரு லட்சம் ஊழியர்கள் / அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.  பிரதமர் நியமித்த பிட்ரோடா குழுவின் பரிந்துரை அது. தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் வீட்டிற்கு அனுப்பும் திட்டம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் உடனடியாக அமுலாக்கப்படும். ஆனால் விருப்ப ஓய்வு திட்டத்தையும், கட்டாய ஓய்வு திட்டத்தையும் தடுத்து விட்டதாக பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஏமாற்றுவதேன்?
நன்றி: சென்னை இணைய தளம்.

Tuesday, 2 April 2013

தேர்தல் சிறப்பு கூட்டம்.


ஈரோடு மாவட்டத் தலைவர் தோழர் கே.ராஜமாணிக்கம் தலைமை ஏற்றார். தோழர்கள் மாலி, செல்வராஜன் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலர் தோழர் யாசின் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர் குமார் சங்க முழக்கம் தேர்தல் சிறப்பிதழை வெளியிட்டார். அதனை பொது மேலாளர் கிளைச் செயலர் இளைய தோழர் செந்தில் பெற்றுக் கொண்டார். அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன் எதிர்வரும் தேர்தல் குறித்து சிறப்பான உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்று அண்ணா தொழிற்சங்க தலைவர் தோழர் மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட துணைச் செயலர் தோழர் லாசர் நன்றி நவின்றார். கூட்டத்தில் திரளாக தோழர்கள் பங்கேற்றனர்.


Monday, 1 April 2013

தினம் ஒரு கேள்வி – நான்கு

 78.2 சத அகவிலைப்படி இணைப்பை நிர்வாகம் ஏற்றுக் கொண்டாதாக உரக்கக் கூவி ஜூன் 12,2012 வேலை நிறுத்த அறைகூவலை ஒத்தி வைத்தது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். 10 மாதங்கள் கழிந்து விட்டது. ஆனால் இன்று வரை ஊழியர்களுக்கு 78.2 சத இணைப்பு கிடைக்கவில்லை. ஊழியர்கள் இது வரை இழந்தது மொத்தமாக ரூ.6000 கோடி. ஏற்கனவே பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் 78.2 சத அகவிலைப்படி இணைப்பு பெறாமல் ஓய்வூதிய பலன் இல்லாமல் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். ஆசை வெட்கமறியாது. அதனால் தான் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் தேர்தல் அறிவிப்புகளில் 78.2 சத இணைப்பு தீர்வு காணப்பட்டுவிட்டது / பெற்றுவிட்டோம் / உறுதி செய்யப்பட்டுவிட்டது என அறிவித்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது. ஒரு தொழிற் சங்கம் இப்படிப்பட்ட பட்டவர்த்தனமான பொய்யான பிரச்சாரத்தை அதுவும் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யலாமா?
நன்றி: சென்னை இணைய தளம்.