NFTECHQ

Wednesday 2 October 2019


இப்போது மட்டுமல்ல, எப்போதும்
அக்டோபர் 2.
காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினம்.
காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டவுடன்
நேரு ஆற்றிய வானொலி உரையின் ஒரு பகுதி இது.
"பெரிய மனிதர்களுக்கும் உயர்ந்த மனிதர்களுக்கும் வெண்கலம் அல்லது பளிங்குக் கல்லில் சிலைகள் வடிக்கப்படும். ஆனால், இந்த மனிதருக்கு கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இதயத்தில் இடம் அளித்துள்ளனர். இந்தியா முழுவதும், இந்தியாவின் சில குறிப்பிட்ட இடங்கள்தான் என்றில்லாமல், ஒவ்வொரு குக்கிராமத்திலும் அங்குள்ள மக்களின் இதயத்திலும் காந்தி மகான் குடிகொண்டுள்ளார். இப்படியே இன்னும் பல நுõற்றாண்டுகளுக்கு அவர் அந்த மக்களின் இதயங்களில் வாழ்வார்.
அவர் இப்போது போய்விட்டார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இனம்புரியாத தனிமையும் சோகமும் கவ்விக் கொண்டுள்ளது. இதிலிருந்து எப்போது மீளப் போகிறோம் என்பது எனக்குத் தெரியவில்லை. இப்படியொரு உயர்ந்த மனிதருடன் தொடர்பு கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை எண்ணி நான் பெருமிதம் அடைகிறேன். இந்த தலைமுறை மட்டுமல்ல, இன்னும் பல தலைமுறை கடந்தாலும் மண்ணில் நடந்த இந்த மனிதக்கடவுள் பற்றி அறிய ஆசைப்படுவார்கள். அவர் வழி நடக்க ஆசைப்படுவார்கள். இந்த பூமியில் அவர் காலடிபட்ட இடங்கள் போற்றுதற்குரியவை. இப்போது மட்டுமல்ல, எப்போதும்."

No comments:

Post a Comment