NFTECHQ

Thursday 8 August 2019


தலைமையும் தோழமையும்
ஒரு அமைப்பின் பொறுப்பில் இருப்பவர்கள் பிறருக்கு வழிவிட்டு மற்றவர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கித் தருவது அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அந்த அடிப்படையில் 2013ஆம் ஆண்டு நான் மாவட்டச்செயலர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். தோழர் பழனிவேலு (லாசர்) மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்றார். 2016ல் நான் பணி ஓய்வு பெறும்வரை என்னால் இயன்ற அளவுக்கு உறுதுணையாக இருந்தேன். அவருக்கு சுயமாகச் சிந்தித்தல், சுயமாகச் செயல்படுதல் போன்ற திறமைகள் உண்டு. மற்றவர்களின் கருத்தை உள்வாங்க்கிக் கொள்ளுதல், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மரியாதை அளித்தல், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்ற பண்புகளும் அவரிடத்தில் உண்டு. சுய விமர்சனம் செய்து கொள்ளும் பண்பு நிறைந்தவர். பிறரது விமர்சனங்கள் நியாயமானதாக இருப்பின் அவற்றை ஏற்பார். தவறான விமர்சனங்களாக இருப்பின் பொறுமையாக உரிய பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர். இயக்கத்தின் நலன் கருதி சகிப்புத்தனமையுடன் செயல்படும் குணமும் அவரிடத்தில் உண்டு.

தலைமைக்குரிய பண்புக்ளை வளர்த்துக் கொண்டதன் விளைவாக 01.08.2019 அன்று NFTE பேரியக்கத்தின் தேர்தல் பிரச்சாரத் துவக்க விழாவை அனைவரும் போற்றிப் பாராட்டும் வகையில் கோபியில் மிகச் சிறப்பாக நடத்த முடிந்தது. அனைவரையும் அரவணைத்து, கருத்துக்களைக் கேட்டு திட்டமிட்டார். உருவான திட்டத்துக்கு சிறப்பான செயல் வடிவம் தந்தார். ஆக, தன்னை ஒரு சிறந்த் தலைவனாக நிரூபித்து கொண்டார் தோழர் லாசர். அவருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உளமார மகிழிச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனி ஒரு மனிதனாக இப்பணியை அவரால் செய்திருக்க இயலாது. இளமைத்துடிப்பும், ஆர்வமும் மிக்க மாவட்டத் தலைவர் தோழர் பாலு,  அனுப்பவமும் ஆற்றலும் மிக்க மாவட்டப் பொருளர் தோழர் மெளனகுருசாமி, மாவட்டச் சங்க நிர்வாகிகள் தலைவர்கள் சிரமமின்றி வந்து செல்ல உதவிய     தோழர் நாகராஜன், சிறப்பான களப்பணியாற்றிய தோழர் செளந்தர்  தோழர் ஈஸ்வரன், தோழர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உறுதுணை புரிந்தனர். கிளைச்செயலர்கள்  போதுமான  அளவுக்கு துணை நின்றனர். இயக்கத்தின் ஆணிவேர்களான தோழர்களும் தோழியர்களும் உதவினர். கோபி கிளையின் தோழர்கள் அனைத்து ஏற்பாடுகளுக்கும் அளப்பரிய பணிகளை
அற்புதமாகச் செய்தனர். மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி காசாலும் கருத்தாலும் உதவினார்.

தமிழகத்தில் நமது பேரியக்கத்தின் வரலாற்றில்  பல  முத்திரைகளைப் பத்தித ஈரோடு மாவட்டச் சங்கம் ஒரு மிகப்பெரிய கடமையை மீண்டும் ஒருருமுறை முத்தாட்ப்போடு மிகச் சிறப்பாக செவ்வனே ஆற்றியிருக்கிறது.
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
வாழ்த்துக்களுடன்
G.குமார்

No comments:

Post a Comment