NFTECHQ

Tuesday 27 August 2019


வதந்திகளின் வசந்தகாலம்
தந்திசேவை காலாவதியாகி விட்டது.
ஆனால் வதந்திகளுக்கு இன்று வசந்தகாலம்.
வதந்திகளையப் பரப்புவதும், வாய்க்கு வந்த பொய்களைப் பரப்புவதும்,
வசைமாரி பொழிவதும்
பல ஆண்டுகளாக  தொடர்ந்து நடக்கும் செயல்கள்தான்.
நம்பிக்கை என்னும்   நாற்றை விதைப்பது நல்லோர் செயல்.
எல்லாம் நாசமாய்ப் போய்விடும் என்று சொல்வது மட்டுமே சிலருக்குத் தெரிந்த ஒன்று.. அப்பணியில் மட்டுமே அவர்களுக்குத் தெளிவு உண்டு.
சமீபத்திய சான்று யாதெனில் ஓய்வுபெறும் வயது 60 என்பது 58 ஆகக் குறைப்து என்பது  பிரதம மந்திரி அலுவலகத்தால் ஏற்கப்பட்டுவிட்டது என்று செய்தி பரப்பப்பட்டது.  ஊழியர்கள் மத்தில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கினார்கள்.ஆனால் உண்மை என்ன?
பிரதமரின் முதன்மைச் செயலர் சகூட்டிய கூட்டத்தின் அதிகார பூர்வமான குறிப்பில் (Official Minutes) விருப்ப ஓய்வுத் திட்டம் அமலாக்கப்பட்டால் அதற்கான செலவு விபரம் குறித்து அறிக்கை தருமாறு DOT செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைப்பது பற்றி விவாதம் எதுவும் நடைபெற்றதாக அக்குறிப்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
"அச்சம் தவிர் "  என்றான் பாரதி. ஆனால் "அச்சத்தை உருவாக்கு" என்று எந்த ஒரு மானுடனும் சொல்லவில்லை.
இப்படிப்பட்டவர்களை மிகச்சரியாக அடையாளம் காண வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment