NFTECHQ

Friday 29 June 2018


பிரதமரின் வெளிநாட்டு

பயணச் செலவு

பதவியேற்ற நான்காண்டுகளில் இதுவரை பிரதமர் மோடி 52 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளதாகவும், இதற்காக 355.30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தகவல் அறிக்கை அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் பீமப்பா காதத், பல்வேறு கேள்விகளுடன் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். காதத்தின் கேள்விகளுக்குப் பிரதமர் அலுவலகம் அளித்த பதில்களை அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பகிர்ந்துள்ளார்.
அதில், கடந்த 48 மாதங்களில் பிரதமர் மோடி, 41 அரசு முறை பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 52 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 2015ஆம் ஆண்டு சென்ற 9 நாட்கள் பயணம்தான் மோடி சென்றதிலேயே அதிக செலவுகளைக் கொண்ட பயணமாக அமைந்துள்ளது. இதற்காக 31.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மிகக் குறைந்த செலவாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூடான் பயணத்தின்போது ரூ.2.45 கோடி மட்டும் செலவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 165 நாட்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் மோடி இருந்துள்ளார். இதற்காக 355.30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் பயணம் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டப்படி கிடைத்துள்ளது. மோடியின் உள்நாட்டுச் சுற்றுப்பயணத்துக்கு எவ்வளவு செலவானது என்ற விவரத்தைப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை.


No comments:

Post a Comment