NFTECHQ

Sunday 17 June 2018


சூடுபிடிக்கும் வர்த்தகப் போர்!


அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, ஜூன் 16ஆம் தேதியன்று 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சரக்குகள் மீது கூடுதலான வரியை சீனா விதித்துள்ளது.
ஜூன் 15ஆம் தேதி சீனாவின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 விழுக்காடு வரியை விதித்தார். இதற்கு அடுத்த நாளே (ஜூன் 16) அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சரக்குகள் மீது சீனா வரி விதித்துள்ளது. இதனால் உலகின் இரண்டு மிகப்பெரும் பொருளாதாரங்கள் இடையே முழுமையான வர்த்தகப் போர் மூண்டுள்ளது. ட்ரம்ப் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது 25 விழுக்காடு வரியை விதித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 25 விழுக்காடு கூடுதல் வரியை விதிக்க சீன அரசு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சின்குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எந்தெந்த அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது என்ற பட்டியலையும் சீன அரசு வெளியிட்டுள்ளது. வேளாண் பொருட்கள், வாகனங்கள், நீர்வாழ் சரக்குகள் உள்ளிட்ட 34 பில்லியன் டாலர் மதிப்பிலான 545 பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீனாவின் சுங்க வரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயனப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் மின்சக்திப் பொருட்கள் உள்ளிட்ட 114 பொருட்களுக்கான கூடுதல் வரி அமல்படுத்தப்படுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment