NFTECHQ

Wednesday 17 December 2014

டாக்டர் ஸ்டாலின் குணசேகரன்



கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனுக்கு
கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் வெளியிட்ட விடுதலை வேள்வியில் தமிழகம்என்ற இரண்டு பாகங்கள் கொண்ட சிறப்புமிக்க நூலுக்காகவும்
கடந்த பத்து ஆண்டுகளாக தேசியத் தரத்துடன் கூடிய ஈரோடு புத்தகத் திருவிழாவை தொடர்ந்து நடத்திப் புத்தக வாசிப்புப்
பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியதற்காகவும்
முப்பத்தி மூன்றாண்டுகளாக பாரதி விழாவை இடைவிடாது நடத்துவதோடு அவ்விழாவை சமூக வளர்ச்சிக்கு வித்திடும் விழாவாக வித்தியாசமாக நடத்திவருவதற்காகவும் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கல்வி நிலையங்களில் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் ஏராளமான கட்டுரைகள் எழுதியதோடு சில நூல்களையும் எழுதி எழுத்துத் துறையில் பங்களிப்புச்
செலுத்தியதற்காகவும் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சியை நடத்தி கல்வியின்பால்
ஆசிரியர்களுக்கு மேலும் ஈடுபாட்டை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும் இத்தோடு இவரின் தொடர்ந்த வேறு பல சமூக சேவைகளை அங்கீகரித்தும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

நமது சங்கத்தின் மாநில, மாவட்ட மாநாடுகளில் பங்கேற்று
தேசம் மற்றும் தேச விடுதலை
குறித்து உணர்வும் அறிவும் கலந்த எழுச்சி உரை ஆற்றி மாநட்டுக்கு செழுமை சேர்த்த தோழனுக்கு நமது வாழ்த்துக்கள்.
தோழனின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment