NFTECHQ

Wednesday 23 July 2014

அலைக்கற்றை பகிர்வு



செல்போன் நிறுவனங்கள் அலைக்கற்றை பகிர்வு: டிராய் பரிந்துரை

செல்போன் நிறுவனங்கள் அலைக்கற்றைகளை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து வகையான ஏர்வேவ்-களையும் செல்போன் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. ரூ. 1,658 கோடிக்கு ஏலம் விடப்பட்ட முந்தைய அலைக்கற்றைகளையும் இவ்விதம் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அனைத்து அலைக்கற்றைகள் அதாவது 800/900/1800/ 2100/2300/2500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை இவ்விதம் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அலைக்கற்றை பகிர்வு குறித்த தனது பரிந்துரையில் டிராய் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இப்போது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 800 மெகா ஹெர்ட்ஸ் (சிடிஎம்ஏ), 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் (3ஜி), 2300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் (4ஜி) ஆகிய அலைக் கற்றைகள் தொலைத் தொடர்பு சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டுக்கு முன்பு வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் அலைக்கற்றை நிர்வாகத்தில் வர்த்தகம், பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றுக்கு அனுமதிக்கும் வகையில் அரசு கொள்கை வகுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த முறை நடைபெற்ற அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத்தில், முதல் முறையாக ஏலத்தில் போன லைசென்ஸ் விலையைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதல் விலையில் இப்போது ஏலம் போனது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பரஸ்பரம் செல்போன் கோபுரங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் அலைக்கற்றைகளையும் பகிர்ந்து கொள்வர். இதனால் வாடிக்கை யாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவை கிடைக்கும். புதிய நடைமுறையின்படி லைசென்ஸ் பெற்றுள்ள இரு நிறுவனங்கள் நிர்வாக ரீதியில் அவற்றுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.
புதிய லைசென்ஸ் கொள்கையின்படி 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவ்விதம் பகிர்ந்து கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்தது. இவ்விதம் அலைக் கற்றைகளை பகிர்ந்து கொள்ள முன்வரும் நிறுவனங்கள் ஒருமுறை செலுத்தும் கட்டணமாக ரூ. 30 ஆயிரம் கோடியை செலுத்த வேண்டும் என்று தெரிவித் திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் சேவை நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
ஒருமுறை கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ள அரசு அனுமதித்தால் இதன் மூலம் ஏற்கெனவே சேவை அளித்து வரும் ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ் ஆகியன பயன் பெறுவதோடு கட்டணத்தையும் குறைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அதிகபட்சமாக இரண்டு நிறுவனங்கள் மட்டும் இவ்விதம் அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ளலாம் என்ற கட்டுப்பாட்டை டிராய் விதித்துள்ளது. 3-ஜி அலைக்கற்றையை பகிர்ந்து கொள்வ தற்கும் அனுமதிக்கலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும் 3 ஜி லைசென்ஸ் வைத்துள்ள ஒரு நிறுவனம் இதே போன்று 3 ஜி லைசென்ஸ் பெற்ற இன்னொரு நிறுவனத்துடன்தான் அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மாறாக 4 ஜி அலைக்கற்றை வைத்துள்ள நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது அலைக்கற்றை பகிர்வு குறித்து லைசென்ஸ் வழங்கிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராய் பரிந்துரையை தொலைத் தொடர்பு அமைச்சகம் (டிஓடி) தீவிரமாக ஆராய்ந்து அதன்பிறகு தொலைத் தொடர்பு ஆணையத்தின் அமைச்சக குழுவின் முன் சமர்ப்பிக்கும்.

No comments:

Post a Comment