NFTECHQ

Saturday 5 January 2019


அழைப்பு துண்டிப்பு

நிறுவனங்களுக்கு அபராதம்

அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க் பயன்பாட்டாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினையான அழைப்பு துண்டிப்புக்குத் தீர்வு காணும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அதை மீறும் நிறுவனங்களுக்குக் குறிப்பிடத்தகுந்த அபராதம் விதிக்கப்படுகிறது. அவ்வாறாக, அரசின் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ .58 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4ஆம் தேதி மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மனோஜ் சின்ஹா அளித்துள்ள பதிலில், “ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அழைப்பு துண்டிப்பு விதிமுறையை மீறியதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐடியா நிறுவனத்துக்கு ரூ 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஜனவரி - மார்ச் காலாண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ 3 லட்சமும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ 10.5 லட்சமும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு ரூ 22.5 லட்சமும், டெலினார் நிறுவனத்துக்கு ரூ 6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டதுஎன்று தெரிவித்தார்.
அழைப்பு துண்டிப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, வாடிக்கையாளர்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டறிய .வி.ஆர்.எஸ். என்ற குரல் பதிவு அமைப்பும் அரசு தரப்பிலிருந்து நிறுவப்பட்டு, குறைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், இந்த அமைப்பில் 2.5 கோடிப் பேர் இணைந்துள்ளதாகவும் மனோஜ் சின்ஹா கூறினார்.
இது செய்தி.
நமது கேள்வி
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள்
அரசின் செல்லப்பிள்ளைகளா?

No comments:

Post a Comment