NFTECHQ

Wednesday 27 September 2017

வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்

"பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது."
“பொருளாதாரத்திற்கு அருண் ஜேட்லி செய்ததை நான் இப்போது கூட வாயைத் திறக்காமல் இருந்தால் நான் எனது தேசியக் கடமையிலிருந்து தவறுபவனாகி விடுவேன், நான் கூறப்போவது பாஜகவில் உள்ளவர்களுக்கே நன்கு தெரிந்ததுதான், ஆனால் இவர்கள் பயத்தின் காரணமாக வெளிப்படையாகப் பேசுவதில்லை” என்று ஆரம்பித்து நடப்பு பொருளாதாரக் கொள்கைகளின் முகமூடியைக் கிழித்து எறிகிறார்.
இன்று இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம் என்ன?  என்று பலரும் தங்கள் கருத்தைக் கூறிவருகையில், அத்தகைய எதிர்க்கருத்துகளை ஊர்ஜிதம் செய்யும் விதமாக உற்பத்தித் துறை, கட்டுமானம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைத்துறைகள், ஏற்றுமதி அனைத்தையும் விட விவசாயத்தின் நிலை ஆகியவை கடும் சரிவுக்குள்ளாகி எண்ணற்ற லட்சக்கணககானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்"

"பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடும் முறை 2015-ம் ஆண்டில் நடப்பு அரசினால் மாற்றியமைக்கப்பட்டது என்றும் இந்தக் கணக்கீட்டின் படி கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.7% என்று நிர்ணயிக்கப்பட்டது"
2015-க்கு முன்பாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணக்கிடும் முறைப்படி பார்த்தால் கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3.7% தான் என்று ஒரே போடாகப் போட்டார்.
புதிய ஜிஎஸ்டியின் கீழ் வரி உள்ளீட்டு வரவு (input tax credit) தற்போது ரூ.95,000 கோடி என்றால் அந்தந்த தொழிற்துறையினர் கட்டிய கூடுதல்வரியை அரசு அவர்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை மிகப்பெரிதான ரூ.65,000 கோடியாக உள்ளது"  ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஆய பயன் என்ன என்று சூசகமாகக் கேள்வி எழுப்புகிறார்.
மேலும்,  2019 மட்டுமல்ல 2023 வரை பாஜகவை அசைக்க முடியாது என்று அமித் ஷா உள்ளிட்டவர்கள் கூறி வரும் நிலையில்  "அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் பொருளாதாரம் மீள்வது சாத்தியமல்ல" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஏழ்மையை மிக அருகில் இருந்து தான் பார்த்ததாகவும் அதனால் ஏழ்மை பற்றி தனக்கு அதிகம் புரியும் என்று பிரதமர் மோடி வானொலி உரை  உள்ளிட்ட உரைகளில் கூறிவருவதைக் கண்டு பலரும் நெகிழ்ந்துள்ள நிலையில்
"அனைத்து இந்திய மக்களும் ஏழ்மையை அருகில் இருந்து நெருக்கமாகப் பார்ப்பதற்காக ஓவர்-டைம் பணியாற்றி வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இப்படியெல்லம் சொல்வது வேறு யாருமல்ல.
முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா.

(நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.09.2017)

No comments:

Post a Comment